Kushi song Aradhya lyrics in Tamil

 

ஆராத்யா பாடல் வரிகள் தமிழ் 


Kushi song Aradhya lyrics



ஆண் : யூ ஆர் மை சன் ஷைன்
யூ ஆர் மை மூன்லயிட்
யூ ஆர் மை ஸ்டார் இன் தி ஸ்கை
கம் வித் மீ நௌ
யூ ஹவ் மை டீஸைர்
வெந்தீயாய் வந்தாயா ஆராத்யா

பெண் : கணவனே கேளடா
கனவு நீதானாடா
கண் திறந்து காண்கிறேன்
காதல் பாயுதடா

ஆண் : நெருங்காதே விலகாதே
உன் பக்கமாயிருந்தால் கெட்டுப்போவேன்
தள்ளியிருந்தால் நல்லவனாவானே

ஆண் : உன் புன்னகை என்னை
கொய்வது பொய்யா?
மெய் எனை மென்மை
செய்வது மெய்யா?

ஆண் : ஆராத்யா என் ஆராத்யா
என்னிதய துணைவியே ஆராத்யா
ஆராத்யா என் ஆராத்யா
கலவியின் தலைவியே ஆராத்யா

ஆண் : காதோடு நான் சொன்ன
ஒர் சொல் உன் தோழ்வீழ்ந்து
உன் மார்பில் உடைகின்றதோ

பெண் : மார்போடு நான் தந்த
ஓர் முத்தம் மேலேறி
மோட்சங்கள் அடைகின்றதோ

ஆண் : சொல்வாயா…

பெண் : செய்வாயா…

ஆண் : கொல்வாயா…

இருவர் : உயிர் தந்து
மீண்டும் கொல்வாயா

ஆண் : ஆராத்யா என் ஆராத்யா
என்னிதய துணைவியே ஆராத்யா
ஆராத்யா என் ஆராத்யா
கலவியின் தலைவியே ஆராத்யா

பெண் : ஹா….ஆஅ….

ஆண் : நாத்திகன் நான் என்று
தெய்வங்கள் பொய் என்று
நீ தோன்றும் முன் நம்பினேன்

பெண் : அச்சங்கள் வீனென்று
பேய் எல்லாம் பொய் என்று
நீ தோன்றும் முன் நம்பினேன்

ஆண் : அஞ்சாதே…
பெண் : கெஞ்சாதே
ஆண் : நீங்காதே
பெண் : என்னாலும் என்னை நீ நீங்காதே

ஆண் : நெருங்காதே விலாகாதே
உன் பக்கமாயிருந்தால் கெட்டுப்போவேன்
தள்ளியிருந்தால் நல்லவனாவேனே

ஆண் : உன் புன்னகை என்னை
கொய்வது பொய்யா?
மெய் எனை மென்மை
செய்வது மெய்யா?

ஆண் : ஆராத்யா என் ஆராத்யா
என்னிதய துணைவியே ஆராத்யா
ஆராத்யா என் ஆராத்யா
கலவியின் தலைவியே ஆராத்யா

பெண் : கணவனே கேளடா
கனவு நீதானாடா
கண் திறந்து காண்கிறேன்
காதல் பாயுதடா


Song credits


Song title -Aradhya
Movie - Kushi  
Music: Hesham Abdul Wahab
Singer :Sid Sriram and Chinmayi Sripada
Lyrics:Madhan Karky
Starring: Vijay Devarakonda,Samantha Ruth Prabhu
Director: Shiva Nirvana
Choreographer Brindha Master
Music Label-Saregama Tamil

No comments:

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...