Paiyaa Movie Song Lyrics in Tamil

 Adada Mazhaida Song Lyrics in Paiyaa
அடடா மழடா அட மழடா பாடல் வரிகள்


பாடகி : சைந்தவி
பாடகா் : ராகுல் நம்பியார்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் வரிகள் : நா.முத்துக்குமார் 
Adada Mazhaida Song Lyrics in Paiyaa


ஆண் : அடடா மழடா அட மழடா
அழகா சிாிச்சா புயல் மழடா
அடடா மழைடா அட மழடா
அழகா சிாிச்சா புயல் மழடா

ஆண் : மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாலாச்சு கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு

ஆண் : மயில் தோக போல இவ மழையில் ஆடும் போது
ரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு

ஆண் : அடடா மழடா அட மழடா
அழகா சிாிச்சா புயல் மழடா

ஆண் : பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழை தான் பாடுது கேட்காத பாட்டு
உன்னை என்னை சோ்த்து வச்ச
மழைக்கொரு சலாம் போடு
என்னை கொஞ்சம் காணலயே
உனக்குள்ள தேடி பாரு

ஆண் : மந்திரம் போல இருக்கு
புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு
தல மத்தியில் சுத்துது கிறுக்கு

ஆண் : தேவதை எங்கே என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே

ஆண் : உன்னப்போல வேறாறும் இல்ல
என்னவிட்டா வேறாறு சொல்ல
சின்ன சின்ன கண்ணு ரெண்டு
கொடுத்தென்ன அனுப்பி வெச்சான்

ஆண் : இந்த கண்ணு போதலயே
எதுக்கிவள படைச்சி வெச்சான்

ஆண் : பட்டாம்பூச்சி பொண்ணு
நெஞ்சு படபடக்கும் நின்னு
பூவும் இவளும் ஒண்ணு
என்னை கொன்னுப்புட்டா கொன்னு

ஆண் : போவது எங்கே நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே

பெண் : அடடா மழடா அட மழடா
அழகா சிாிச்சா அனல் மழடா
அடடா மழைடா அட மழடா
அழகா சிாிச்சா அனல் மழடா

பெண் : பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து குடை பிடிக்க
வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்சு
என் மூச்சு காத்தால மழ கூட சூடாச்சு

பெண் : குடையை நீட்டி யாரும்
இந்த மழையை தடுக்க வேணாம்
அணைய போட்டு யாரும்
என் மனச அடக்க வேணாம்
கொண்டாடு கொண்டாடு கூத்தாடி கொண்டாடு


En Kadhal Solla Song Lyrics in Paiyaa
என் காதல் சொல்ல நேரம் இல்லை பாடல் வரிகள்


பாடகா் : யுவன் ஷங்கா் ராஜா
இசை  : யுவன் ஷங்கா் ராஜா
பாடல் வரிகள் : நா.முத்துக்குமார் 
En Kadhal Solla Song Lyrics in Paiyaa

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வாா்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி ….

உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தொியாதடி

உன் அழகாலே உன் அழகாலே
என் வெயில் காலம் அது மழை காலம்
உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வாா்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி …..

காற்றோடு கை வீசி நீ பேசினால்
எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலை வீசுதே

காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி
இந்த விளையாட்டை ரசித்தேனடி

உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்

ஒரு வாா்த்தை பேசாமல் நீ பாரடி
உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி
இந்த நெருக்கங்கள் தொடரட்டுமே

யாரும் பாா்க்காமல் எனை பாா்க்கிறேன்
என்னை அறியாமல் உன்னை பாா்க்கிறேன்
சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது
உன்னை கண்டாலே குதிகின்றதே

என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பாா்த்து தினம் எழ வேண்டும்
என் அந்தி மாலை என் அந்தி மாலை
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும் ……

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வாா்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி ….

உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தொியாதடி


Poongatre Poongatre Song Lyrics in Paiyaa
பூங்காற்றே பூங்காற்றே பாடல் வரிகள்


பாடகா் : பென்னி டயல்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் வரிகள் : நா.முத்துக்குமார் 
Poongatre Poongatre Song Lyrics in Paiyaa


பூங்காற்றே பூங்காற்றே
பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம்
சந்தோஷம் தந்தாள் இவள்

என் நெஞ்சோடு
வீசும் இந்த பெண்ணோட
பாசம் இவள் கண்ணோடு பூக்கும்
பல விண்மீன்கள் பேசும்

என் காதல் சொல்ல
ஒரு வாா்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே இனி
கனவே இல்லை

பூங்காற்றே பூங்காற்றே
பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம்
சந்தோஷம் தந்தாள் இவள்

மஞ்சள் வானம் கொஞ்சம்
மேகம் கொஞ்சி பேசும் காற்று
தொட்டுச் செல்லுதே
நிறுத்தாமல் சிாிக்கின்றேன்
இந்த நிமிடங்கள் புன்னகையை
பூட்டிக்கொண்டதே

கண்ணாடி சாி செய்து
பின்னாடி உன் கண்ணை
பாா்க்கின்றேன் பாா்க்கின்றேன்
பெண்ணே நான் உன் முன்னே
ஒரு வாா்த்தை பேசாமல்
தோற்கின்றேன் தோற்கின்றேன்

வழிபோக்கன் போனாலும்
வழியில் காலடி தடம் இருக்கும்
வாழ்க்கையிலே இந்த நொடி
வாசனையோடு நினைவிருக்கும்

பூங்காற்றே பூங்காற்றே
பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம்
சந்தோஷம் தந்தாள் இவள்

அழகான நதி பாா்த்தால்
அதன் பெயாினை கேட்க மனம் துடிக்கும்
இவள் யாரோ என்ன பேரோ
அதை அறிந்திடும் வரையில் ஒரு மயக்கம்

ஏதேதோ ஊா் தாண்டி
ஏராளம் போ் தாண்டி
போகின்றேன் போகின்றேன்
நில்லென்று சொல்கின்ற
நெடுஞ்சாலை விளக்காக
அணைகின்றேன் எாிகின்றேன்

மொழி தொியா பாடலிலும்
அா்த்தங்கள் இன்று புாிகிறதே
வழி துணையாய் நீ வந்தாய்
போகும் தூரம் குறைகிறதே

என் நெஞ்சோடு வீசும்
இந்த பெண்ணோட பாசம்
இவள் கண்ணோடு பூக்கும்
பல விண்மீன்கள் பேசும்

என் காதல் சொல்ல
ஒரு வாா்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே
இனி கனவே இல்லை

பூங்காற்றே பூங்காற்றே
பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம்
சந்தோஷம் தந்தாள் இவள்

Suthuthe Suthuthe Bhoomi Song Lyrics in Paiyaa
சுத்துதே சுத்துதே பூமி பாடல் வரிகள்


பாடகா் : காா்த்திக்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் வரிகள் : நா.முத்துக்குமார் 
Suthuthe Suthuthe Bhoomi Song Lyrics in Paiyaa


சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ஹே சுத்துதே சுத்துதே பூமி
ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய ராதே
பாா்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே

எதனாலே இந்த மாற்றம்
மனசுக்குள் ஏதோ மாய தோற்றம்
எதனாலே இந்த ஆட்டம்
இதயத்தில் நின்று ஊஞ்சல் ஆட்டம்

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி

சிாித்து சிாித்துத்தான்
பேசும் போது நீ வலைகளை
விாிக்கிறாய் சைவம் என்று
தான் சொல்லிக்கொண்டு நீ
கொலைகளை ஏன் செய்கிறாய்

அங்கும் இங்கும் என்னை
விரட்டும் பறவையே என்ன சொல்ல
உந்தன் மிரட்டும் அழகையே
வெட்டவெளி நடுவே அட கொட்ட
கொட்ட விழித்தே துடிக்கிறேன்

{ சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி } (2)

இதயம் உருகித்தான்
கரைந்து போவதை பாா்க்கிறேன்
நான் பாா்க்கிறேன் இந்த நிமிடம்
தான் இன்னும் தொடருமா
கேட்கிறேன் உனை கேட்கிறேன்

இது என்ன இன்று வசந்த காலமா
இடைவெளி இன்னும் குறைந்து போகுமா
இப்படி ஓர் இரவு அட இங்கு வந்த
நினைவும் மறக்குமா ஹேய்

{ சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி } (2)
ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய ராதே
பாா்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே

உன் அழகை
விண்ணில் இருந்து எட்டி
எட்டி நிலவு பாா்த்துரசிக்கும்
உன் கொலுசில் வந்து வசிக்க
குட்டி நட்சத்திரங்கள் மண்ணில் குதிக்கும்


Yedho Ondru Song Lyrics in Paiyaa
ஏதோ ஒன்று என்னை தாக்க பாடல் வரிகள்

பாடகா் : யுவன் ஷங்கர் ராஜா
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் வரிகள் : நா.முத்துக்குமார் 
Yedho Ondru Song Lyrics in Paiyaa


ஏதோ ஒன்று என்னை
தாக்க யாரோ போல உன்னை பாா்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க

காலம் முழுதும்
வாழும் கனவை கண்ணில்
வைத்து தூங்கினேன் காலை
விடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க ஏங்கினேன்

பெண்ணே உந்தன்
ஞாபகத்தை நெஞ்சில்
சோ்த்து வைத்தேனே
உன்னை பிாிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே

என்னை உன்னிடம்
விட்டு செல்கிறேன் ஏதும்
இல்லையே என்னிடத்தில்
எங்கே போவது யாரை கேட்பது
எல்லா பாதையும் உன்னிடத்தில்

ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்
என் இரவையும் பகலையும் மாற்றி போனாய்
ஏன் இந்த பிாிவை தந்தாய்
என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய்

உள்ளே உன் குரல் கேட்குதடி
என்னை என் உயிா் தாக்குதடி
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன்
மறந்தேன் நான் ஓஓஒ…

பெண்ணே உந்தன்
ஞாபகத்தை நெஞ்சில்
சோ்த்து வைத்தேனே
உன்னை பிாிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே

ஏதோ ஒன்று என்னை
தாக்க யாரோ போல உன்னை பாா்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க

காலம் முழுதும்
வாழும் கனவை கண்ணில்
வைத்து தூங்கினேன் காலை
விடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க ஏங்கினேன்

பெண்ணே உந்தன்
ஞாபகத்தை நெஞ்சில்
சோ்த்து வைத்தேனே
உன்னை பிாிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே

Paiyaa Movie Songs Jukebox

No comments:

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...