Poove Poochoodava Vaa movie song lyrics

 

Poovae Poochudava Female Song Lyrics in Poove Poochooda Vaa
பூவே பூச்சூடவா பாடல் வரிகள்


இசை : இளையராஜா
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடல் வரிகள்: வைரமுத்து 
Poove Poochoodava Vaa movie song lyrics


பெண் : ல ல ல ல ல
ல லா லா லா ல ல
ல ல ல ல லா லா லா
ல ல ல ல ல ல ல
லா லா லா லா

பெண் : { பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா } (2)
வாசல் பார்த்து கண்கள்
பூத்து பாா்த்து நின்றேன்
வா

பெண் : பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா

பெண் : அழைப்பு மணி
எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல்
தீண்டவே இல்லை
கண்ணில் வெந்நீரை
வார்ப்பேன் கண்களும்
ஓய்ந்தது ஜீவனும்
தேய்ந்தது

பெண் : ஜீவ தீபங்கள்
ஓயும் நேரம் நீயும்
நெய்யாக வந்தாய்
இந்த கண்ணீரில்
சோகமில்லை இன்று
ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும்
நீயும் என் தாய்

பெண் : பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா

குழு : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ……

பெண் : காலம் கரைந்தாலும்
கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில்
எரித்தாலும் தங்கம் கருக்காது
தாயே பொன்முகம் பார்க்கிறேன்
அதில் என் முகம் பார்க்கிறேன்

பெண் : இந்தப் பொன் மானை
பார்த்துக் கொண்டே சென்று
நான் சேர வேண்டும் மீண்டும்
ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்

பெண் : பூவே பூச்சூடவா
{ எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா } (2)


Pattasu Chuttu Song Lyrics in Poove Poochooda Vaa
பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா பாடல் வரிகள்


இசை : இளையராஜா
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடல் வரிகள்: வைரமுத்து 


பெண் : பட்டாசு சுட்டு
சுட்டு போடட்டுமா
மத்தாப்பு சேலை கட்டி
ஆடட்டுமா சித்தாடை
சிட்டுதானம்மா பட்டாசு
சுட்டு சுட்டு போடட்டுமா
மத்தாப்பு சேலை கட்டி
ஆடட்டுமா சித்தாடை
சிட்டுதானம்மா

பெண் : தீவாளிக்கு தீவாளி
எண்ணை தேய்ச்சி நீ குளி
என் பாட்டி சொன்ன
வைத்தியம் கேட்டு
வந்தேன் பைங்கிளி
ஹோய்

பெண் : பட்டாசு சுட்டு
சுட்டு போடட்டுமா
மத்தாப்பு சேலை கட்டி
ஆடட்டுமா சித்தாடை
சிட்டுதானம்மா

பெண் : இந்த ஊரு
முழுக்க சத்தம் தான்
ஒலிக்க இந்த நாள்
முழுக்க இன்பம்
தேடுங்க

பெண் : மாமி நல்லவங்க
தூர சொந்தமுங்க காது
மந்தமுங்க வெடி
போடுங்க

பெண் : அத்தையும் செஞ்ச
மைசூர் பாக் சுத்தியல்
கொண்டு தட்டடா
சுத்தியல் தட்டுது
குப்பையில் கொட்டட்டா

ஆண் : என்னென்ன
செய்தாலும் என்னென்ன
சொன்னாலும் வாழ்க்கையே
புஷ்வானம் டோய் டோய்

பெண் : நேற்று என்பது
ஏட்டில் உள்ளது நாளை
என்பது பொய்யடா இன்று
ஒன்றே மெய்யடா

பெண் : பட்டாசு சுட்டு
சுட்டு போடட்டுமா
மத்தாப்பு சேலை கட்டி
ஆடட்டுமா சித்தாடை
சிட்டுதானம்மா ஹோய்

குழு : …………………….

பெண் : அன்பு பாட்டியம்மா
இனி ஏன் கவலை உன்னை
தேடி வந்தால் மணி மேகலை

பெண் : பல பண்டிகைகள்
நீயும் பார்த்ததில்லை
இந்த வாரம் எங்கும்
இங்கே தேன் மழை

பெண் : அடுத்த வீட்டு
மாடிக்கு ஆர்யபட்டா
அனுபட்டா அடிக்க
வந்தா உன்னிடம்
சொல்லட்டா

ஆண் : என்னென்ன
வண்ணங்கள் இன்பத்தின்
சின்னங்கள் கண்ணுக்குள்
மின்னல்கள் ஹோய்
ஹோய்

பெண் : வானவில் அது
போல பூமியில் வாழ
வந்தது கொஞ்சமே
வாழ்வில் இன்பம்
கொஞ்சமே

பெண் : பட்டாசு சுட்டு
சுட்டு போடட்டுமா
மத்தாப்பு சேலை கட்டி
ஆடட்டுமா சித்தாடை
சிட்டுதானம்மா

பெண் : தீவாளிக்கு தீவாளி
எண்ணை தேய்ச்சி நீ குளி
என் பாட்டி சொன்ன
வைத்தியம் கேட்டு
வந்தேன் பைங்கிளி
ஹோய்

பெண் : பட்டாசு சுட்டு
சுட்டு போடட்டுமா
மத்தாப்பு சேலை கட்டி
ஆடட்டுமா சித்தாடை
சிட்டுதானம்மா


Chinna Kuyil Paadum Song Lyrics in Poove Poochooda Vaa
சின்ன குயில் பாடும் பாடல் வரிகள்

Chinna Kuyil Paadum Song Lyrics in Poove Poochooda Vaa


இசை :  இளையராஜா
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடல் வரிகள்: வாலி 

பெண் : லா லா லாலலா
லா லா லாலலா

பெண் : சின்ன குயில் பாடும்
பாட்டு கேக்குதா குக்கூ குக்கூ
கூ கூ குக்கூ குக்கூ கூ கூ
தம்பிகளே தங்கைகளே தேரில்
என்னை ஏற்றுங்கள் உல்லாசமாய்
உற்சாகமாய் ஊரை சுற்றி காட்டுங்கள்

பெண் : சின்ன குயில் பாடும்
பாட்டு கேக்குதா குக்கூ குக்கூ
கூ கூ குக்கூ குக்கூ கூ கூ

பெண் : எங்கும் மணிமேலே
தன்னந்தனியா கங்கை
நதிக்கென்ன கட்டுத்தரியா
அட வானம் எங்கு போகும்
அங்கு நானும் போவேனே
ஏப்பம் விடும் ஓடையை
இப்போதுதான் பார்க்கிறேன்
மைனாக்களின் பாஷையை
இப்போதுதான் கேட்கிறேன்
பிருந்தாவனம் இங்கே
பார்த்தேனே ல ல ல லலலா

பெண் : சின்ன குயில் பாடும்
பாட்டு கேக்குதா

குழு : குக்கூ குக்கூ கூ கூ
கூ கூ குக்கூ குக்கூ கூ கூ
கூ கூ கூ கூ கூ கூ கூ கூ
கூ கூ கூ கூ கூ கூ கூ கூ
கூ கூ கூ கூ கூ கூ கூ கூ
கூ கூ கூ கூ கூ கூ கூ கூ
கூ கூ

பெண் : ஆஹா இந்த பூமி
புத்தம் புதுசு பாசம் வந்ததாலே
பொங்கும் மனசு இனி வாசம்
வீசும் பூவில் நானும் வாசம்
செய்வேனே தாவி எங்கும்
ஓடினேன் தாயின் மடி தேடினேன்
பூவனங்கள் எங்கிலும் பூஜை
செய்ய போகிறேன் என் சோலையில்
நானும் பூவாவேன் ல ல ல லலலா

பெண் : சின்ன குயில் பாடும்
பாட்டு கேக்குதா குக்கூ குக்கூ
கூ கூ கூ கூ குக்கூ குக்கூ கூ கூ
கூ கூ தம்பிகளே தங்கைகளே தேரில்
என்னை ஏற்றுங்கள் உல்லாசமாய்
உற்சாகமாய் ஊரை சுற்றி காட்டுங்கள்

பெண் : சின்ன குயில் பாடும்
பாட்டு கேக்குதா குக்கூ குக்கூ
கூ கூ குக்கூ குக்கூ கூ கூ
குக்கூ குக்கூ கூ கூ குக்கூ
குக்கூ கூ கூ

No comments:

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...