Chinna Chinna Kangal lyrics in Tamil Goat Movie Song

Goat Movie Song Lyrics in Tamil 

 Chinna Chinna Kangal lyrics in Tamil

 

Chinna Chinna Kangal lyrics in Tamil Goat Movie Song

பெண் : சின்ன சின்ன கண்கள்
சிரிக்கிறதோ..
கருவறை மீண்டும்
மணக்கிறதோ..

பெண் : எட்டு வைத்து வானம்
வருகிறதோ..
தித்திப்புயல் நெஞ்சில்
மூழ்கிறதோ..

பெண் : கண்ணே.. இனி ஒரு போதும்
பிரிவே இல்லை!
பிஞ்சே.. நீ ஒரு கோடி
தாயின் பிள்ளை!

பெண் : உறவெல்லாம் ஒன்றாக
விழியெல்லாம் தேனாக
இரவெல்லாம் தூளாக
பறவைக்கூட்டில் விண்மீன் பூக்க…

பெண் : வாராத மாமணியாய்
வந்தாயே உய்வாக
மனசெல்லாம் ஒளி வீச
உன் மீசை கூட மழலை பேச..

பெண் : சின்ன சின்ன கண்கள்
சிரிக்கிறதோ..
கருவறை மீண்டும்
மணக்கிறதோ..

பெண் : எட்டு வைத்து வானம்
வருகிறதோ..
தித்திப்புயல் நெஞ்சில்
மூழ்கிறதோ..

ஆண் : மழை பொழிகிற இரண்டாம் நாளில்
விழும் துளியில் மாசில்லை
இது ஒரு வகை இரண்டாம் பிறவி
வாழ்வில் இனிமேல் குறையில்லை..

ஆண் : யுத்தம் புரிகிற மண்ணில் மண்ணில்
ரத்த பந்தம் போல் பலமில்லை..
வா எழுந்திடு.. வாள் சுழற்றிடு..
வான் கிழித்திடு.. பயமில்லை!

ஆண் : கீச்சை மறந்துப்போன
கிளியின் மௌனம் போல..
இதயம் தவித்த போது
நீ இசையாய் உள்ளே வந்தாயே!

ஆண் : உறவில்லாம் ஒன்றாக
விழியெல்லாம் தேனாக
இருளெல்லாம் தூளாக
பறவைக்கூட்டில் விண்மீன் பூக்க…

ஆண் : தோழி உனைப் பார்த்ததும்
நேற்றின் முகம் யோசனை..
ரெட்டை ஜடை வாசனை..
நீதானா? நிஜம்தானா?

ஆண் : வயதின் முதல் காதலா?
வார்த்தை இல்லா வெய்யிலா?
சாட்சி இல்லா சாரலா?
நீ தானா? நிஜம் தானா?

ஆண் : அடி ஏதும் அறியா என் நெஞ்சில்
இறகாக விழுந்தாயே..
காலம் பருவம் கடந்தாலும்
கலையாமல் நின்றாயே!

ஆண் : போவோம் பல நாட்கள்
பின்னே பின்னே..
வாழ்வோம் நாம்
வளராத பிள்ளை போலே…


பெண் : சின்ன சின்ன கண்கள்
சிரிக்கிறதோ..
கருவறை மீண்டும்
மணக்கிறதோ..

பெண் : எட்டு வைத்து வானம்
வருகிறதோ..
தித்திப்புயல் நெஞ்சில்
மூழ்கிறதோ..

பாடகர்கள் : தளபதி விஜய், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ராஜா பவதாரணி
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

No comments:

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...