ஷங்கர் சார் இயக்கிய படமா இது? என்ற எண்ணம் படம் பார்க்கும் போது நிச்சயம் தோணும், முதல் பாகத்தில் இருந்த நேர்த்தி இந்த படத்தில் துளியும் இல்லை ஆறுதலாக இருந்த ஒரே விஷயம் விவேக் சார் மற்றும் இந்தியன் part 3 trailer & ரகுமான் சார் signature bgm.
முதல் பாகத்தில் கமல் சார் makeup பற்றி பேசாத ஆட்களே இல்லை அந்த காலகட்டத்தில், சுகன்யா அவர்களுக்கு மட்டும் சுமாராக இருக்கும், இந்தியன் 2 படத்தில் makeup சுத்தமாக ஒட்டவில்லை,Airport ல் தாய்லாந்து நபர் போல வரும் makeup மட்டுமே நன்றாக இருந்தது.
ஆரம்பம் நன்றாக தான் இருந்தது போக போக தாத்தா கதற வூட்டார்
முதல் பாகத்தில் இருந்த Detail இந்த படத்தில் சுத்தமாக இல்லை, பிரமாண்டம் அந்த தங்க மாளிகை காட்சியில் மட்டுமே இருந்தது மற்றபடி அது கூட இந்த படத்தில் missing, இந்தியன் தாத்தா தப்பு செய்தால் மட்டுமே தண்டிப்பார் ஆனால் இந்த படத்தில் நேர்மையாக metro train ஓட்டுநர் பின்னோக்கி சென்றால் மக்கள் பாதிப்பார்கள் என்று சொல்லியும் இடுப்பில் கை வைத்து காட்டும் இந்தியன் தாத்தாவை என்னவென்று சொல்வது, கைதட்டல் பெறும் என்று வைத்த காட்சியில் மக்கள் அமைதியாக இருந்தார்கள்.
ஒட்டாத பல காட்சிகள் அதுவும் படத்தின் கிளைமாக்ஸ் இப்படியா இருக்கும் ஒரு சேஸிங் நடக்கிறது அதை நிறுத்தி விட்டு ஒரு குடோனில் six pack fight அது முடிந்தவுடன் மறுபடியும் சேஸிங், முடியலடா சாமி.
இந்தியன் 1 படத்தில் திரைக்கதை அவ்வளவு சுவாரசியமாக இருக்கும் ஒவ்வொரு கொலையும் அதற்கான காரணங்களும் தெளிவாக இருக்கும் ஆனால் இதில் வெளி மாநிலங்களில் போய் கொல்கிறார் அதற்கான அழுத்தமான காட்சிகள் இல்லை பார்க்கும் நமக்கு சலிப்பு தான் வருகிறது இந்தியன் தாத்தா Belt கூட முதல் பாகத்தில் பேசி இருக்கும் இந்த படத்தில் கத்திக்கு துருப்பிடித்துவிட்டது.
முதல் பாகத்தில் ஆச்சியிடம் காசு வாங்கும் நபரை நமக்கே கொல்லனும் போல தோனும் இந்த பாகத்தில் அப்படி ஒரு காட்சி கூட தோனவில்லை ,சுமாராக எழுதப்பட்ட காட்சிகள் நமக்கு அந்நியமாக தெரிகிறது.
படத்தில் ஒரு அரசியல் நபர் கூட குத்து வாங்க வில்லை.
முதல் பாகத்தில் இருந்த எந்தவொரு நேர்த்தியான காட்சிகளும் இதில் இல்லை பெரிய ஏமாற்றம், கொடுத்த காசுக்கு பாடல்களாவது ஷங்கர் சார் படத்தில் ஆறுதலாக அமையும் இதில் அதுகூட இல்லை.
1996 ல் பெரிதாக தொழில்நுட்ப வளர்ச்சி தமிழ் சினிமாவில் இல்லாத போதே ஒரு தரமான படத்தை தந்த ஷங்கர் சார், இவ்வளவு வளர்ச்சி வந்த பிறகு இப்படி ஒரு படத்தை தந்தது ஏமாற்றம் தான்.
No comments:
Post a Comment