Singer Hariharan Tamil Songs List

 இந்தியாவின் மிகச்சிறந்த கஸல் பாடகர்களில் முதன்மையானவர் ஹரிஹரன்.
அவரே இசையமைத்து, ஏராளமான கஸல் ஆல்பங்கள் வெளியிட்டதோடு, ஏற்கெனவே பிரபலமான பல கஸல்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை வேறு ராகங்களில் பாடி வெற்றிகரமாகப் ஃப்யூஷன் இசையை வடிவமைத்தார்.
ஹரிஹரனின் தேன் குரலால் கவரப்பட்ட ரஹ்மான் 'ரோஜா' திரைப்படத்தில் இடம்பெற்ற "தமிழா தமிழா..." பாடல் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார்.
முதல் பாட்டிலேயே "யார் இந்தத் தேன் குரலோன்?" என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் ஹரிஹரன். 


திரும்பவும் ஹரிஹரனை அழைத்து ரஹ்மான் பாட வைத்த பாடல்தான் அவரைப் புகழின் உச்சியில் ஏற்றியது. பம்பாய் திரைப்படத்தில் இடம்பெறும் "உயிரே உயிரே...".
தமிழா! தமிழா! நாளை நம் நாளே! என்று பாடியது போலவே தனக்கென்று மாபெரும் இசை சாம்ராஜ்யத்தை உலகம் முழுவதும் உருவாக்கினார்.
'சரிகமப' நிகழ்ச்சியில் இடம்பெற்ற உணர்வு பூர்வமான காட்சிகளே இதற்கான சாட்சிகள். 



"வாசத்தமிழிசையில் வழியும் செந்தேனை
வாரி எனக்களித்த வள்ளல் நீ தானே!"
ஹரிஹரன் பாடிய இந்த வரிகளைக் கேட்கும் போதெல்லாம் ஹரிஹரனை மனதில் வைத்தே வாலி இவற்றை எழுதியதாகத் தோன்றும்.
அவர் பாடிய பாடல்கள் அத்தனையும் தேன் சிந்தும் பாடல்கள். 


❤ கள்ளின் போதையும், காட்டுத்தேனின் இனிப்பும், கார்காலத்து மின்னலின் ஜொலிப்பும் கலந்த ஹரிஹரனின் குரலில் ரஹ்மான் தமிழுக்களித்த  அமிழ்தங்கள்.
"உயிரே உயிரே வந்து என்னோடு கலந்து விடு..."
"நிலா காய்கிறது நேரம் தேய்கிறது..."
"வெண்ணிலவே வெண்ணிலவே..."
"குறுக்குச் சிறுத்தவளே..."
"டெலிஃபோன் மணி போல் சிரிப்பவள் இவளா..."
"மலர்களே மலர்களே இது என்ன கனவா..."
"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்..."
"அன்பே அன்பே கொல்லாதே..."
"பச்சை நிறமே பச்சை நிறமே..."
"ஒரு பொய்யாவது சொல் கண்ணே..."
"சந்திரனை தொட்டது யார்..."
"கண்ணை கட்டிக் கொள்ளாதே..."
"சுற்றும் விழிச்சுடர்தான் கண்ணம்மா..."
"குச்சி குச்சி ராக்கம்மா..."
"தொட்டால் பூ மலரும்..."
"மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்..."
"கலைமானே உன் தலை கோதவா..."
"விடுகதையா இந்த வாழ்க்கை..."
"உதயா உதயா உளறுகிறேன்..."
"அழகிய சின்றெல்லா..."
"ஹை ராமா ஓர் வாரமா..."


இளையராஜா இசையில் ஹரிஹரன் பாடிய முதற்பாடல் காதலர்களின் தேசிய கீதமான "என்னை தாலாட்ட வருவாளோ...". பாடி முடித்த பின்னர் இளையராஜா பாராட்டியது வாழ்நாளில் மறக்க முடியாத பாராட்டு என்று மேடையொன்றில் கூறியிருந்தார்.
தனது இசை நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் இந்தப் பாடலைத் தவறாமல் பாடுவது ஹரிஹரனின் வழக்கம்.
காசி படத்தில் இடம்பெறும் உயிரை உருக்கும் ஆறு பாடல்களையும் ஹரிஹரனையே பாட வைத்தார் இளையராஜா.
"இறைவனிடம் வரங்கள் கேட்டேன்
ஸ்வரங்களை அவனே கொடுத்தான்"
இளையராஜாவுக்கு மட்டுமன்றி ஹரிஹரனுக்கும் பொருந்தும் வரிகள்.
"என் மன வானில்..."
"ஆத்தோரத்திலே ஆலமரம்..."  
"புண்ணியம் தேடி..."
"மானுத்தோலு ஒன்று..."
"ரொக்கம் இருக்கிற..."
"நான் காணும் உலகங்கள்..."
ஆறும் சுந்தரத் தமிழின் வரங்கள். இளையராஜா இசையில் ஹரிஹரன் பாடிய முத்துக்கள்.
"தென்றல் வரும் வழியை..."
"மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்..."
"நிலவு பாட்டு நிலவு பாட்டு..."
"இளவேனிற் கால பஞ்சமி..."
"கஜிராஹோ கனவிலோர்..."
"காற்றில் வரும் கீதமே..."
"நந்தவன குயிலே..."
"நீ தூங்கும் நேரத்தில்..."
"வானவில்லே வானவில்லே..."


❤ "கொஞ்ச நாள் பொறு தலைவா..." என்று தொடங்கிய ஹரிஹரன், தேவா கூட்டணியில் தேனாறு பாய்ந்தது.
"கொஞ்ச நாள் பொறு தலைவா..."
"வண்ண நிலவே வண்ண நிலவே..."
"அவள் வருவாளா..."
"நாளை காலை நேரில் வருவாளா..."
"உன் உதட்டோர சிவப்பே..."
“செம்மீனா விண்மீனா..."
"சின்ன சின்ன கிளியே..."
"ஊதா ஊதா ஊதாப்பூ..."
"சகலகலாவல்லவனே..."
"ஓ நெஞ்சே நெஞ்சே..."
"உன் பேர் சொல்ல ஆசைதான்..."
"முதன் முதலில் பார்த்தேன்..."
"மாதவா சேது மாதவா..."
"காதலா காதலா காதலால் தவிக்கிறேன்..."
"ஒரு மணி அடித்தால்..."
"மலரோடு பிறந்தவளா..."
"நீதானா நீதானா..."


❤ தேவா போலவே எஸ்.ஏ.ராஜ்குமாரும் ஹரிஹரனை அற்புதமாகப் பயன்படுத்தினார். இவர்களுடைய கூட்டணியில் மந்திரமாய் மனம் தடவும் சந்தனத் தென்றலாய் ஒலித்தன பாடல்கள்.
"என்ன இதுவோ என்னைச் சுற்றியே..."
"ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ..."
"ராசா ராசா உன்னை..."
"இருபது கோடி நிலவுகள் கூடி..."
"தொடு தொடு எனவே..."
"எனக்கொரு சினேகிதி..."
"என்னவோ என்னவோ..."
"நன்றி சொல்ல உனக்கு..."
"ஒரு தேவதை வந்துவிட்டாள்..."
"பிரிவொன்றை சந்தித்தேன்..."
"ஏதோ ஒரு பாட்டு..."
"பூப்போல தீப்போல..."
"வந்தது பெண்ணா..."
"மூக்குத்தி முத்தழகு..."
"என் கண்ணாடி தோப்புக்குள்ளே..."
"காதல் அழகா..."
தொண்ணூறுகள், இரண்டாயிரங்களைப் பொற்காலமாக்கிய இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் ஆஸ்தான பாடகர் ஹரிஹரனே. அவருடைய குரலுக்காகவே தேன் சிந்தும் பாடல்களைப் படைத்திருப்பார்கள். 


வித்யாசாகர், ஹரிஹரன் கூட்டணியில்,
"மலைக்காற்று வந்து தமிழ் பேசுதே..."
"அன்பே அன்பே நீ என் பிள்ளை..."
"தவமின்றி கிடைத்த வரமே..."
"பொய் சொல்லக் கூடாது காதலி..."
"உடையாத வெண்ணிலா..."
"நீ காற்று நான் மரம்..."
"ஒரே மனம் ஒரே குணம்..."
"ஒரு தேதி பார்த்தால்..."
"என்னை கொஞ்ச கொஞ்ச..."


ஹாரிஸ் ஜெயராஜ், ஹரிஹரன் கூட்டணியில்,
"நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை..."
"மூங்கில் காடுகளே..."
"ஆரிய உதடுகள்..."
"முதல் மழை என்னை நனைத்ததே..."
"அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு..."
"ரகசிய கனவுகள்..."
"அய்யங்காரு வீட்டு அழகே..."
"மஞ்சள் வெயில் மறையுதே..."


யுவன், ஹரிஹரன் கூட்டணியில்,
"வெண்மேகம் பெண்ணாக உருவானதோ..."
"சொல்லாமல் தொட்டுச் செல்லும்..."
"வெண்ணிலா வெளியே வருவாயா..."
"இரவா பகலா குளிரா வெயிலா..."
"சுடிதார் அணிந்து வந்த..."


கார்த்திக் ராஜா, ஹரிஹரன் கூட்டணியில்,
"கவிதைகள் சொல்லவா..."
"கொஞ்சும் மஞ்சள் பூக்கள்..."
"செல்லமே செல்லம் என்றாயடி..."
"ரகசியமாய் ரகசியமாய்..."


பரத்வாஜ், ஹரிஹரன் கூட்டணியில்,
"மொட்டுகளே மொட்டுகளே..."
"வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே..."
"உன்னைப் பார்த்த கண்கள்..."
"உனை நான் உனை நான்..."
"காடு திறந்தே கிடக்கின்றது..."


பரணி, ஹரிஹரன் கூட்டணியில்,
"துளி துளியாய் கொட்டும் மழைத்துளியாய்..."
"நிலவே நிலவே சரிகமபதநி..."


சிற்பி, ஹரிஹரன் கூட்டணியில்,
"யாரிந்த தேவதை..."
"நான் வானவில்லையே பார்த்தேன்..."
"நீ இல்லை நிலவில்லை..."
"குமுதம் போல் வந்த..."
"ஆல்ப்ஸ் மலைக்காற்று..."
இவ்வாறு மயிலிறகாய் மனம் வருடும் பாடல்கள் ஏராளம்.
விஜய், அஜித், பிரசாந்த் போன்ற தொண்ணூறுகளின் காதல் நாயகர்களுக்கு கனகச்சிதமாகப் பொருந்தும் அற்புதமான குரல்.
தற்போது பல்வேறு மேடைகளில் கஸல் பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறார்.
தமிழுக்கு நீங்கள் அளித்த பாடல்கள் போல் நீடூழி வாழ்க. ❤

No comments:

Nee Paartha Paarvaikkoru Nandri Hey Ram Song Translation

 Nee Partha Parvaikkoru Nandri Song Lyrics Translation Movie: Hey Ram Lyrics: Kamal Hassan, Jibanananda Das Singers: Asha Bhosle, Hariharan,...