Meiyazhagan Veri song lyrics in Tamil

 Veri song lyrics in Tamil Meyyazhagan
 மெய்யழகன் வெறி பாடல் வரிகள்
 
Veri song lyrics in Tamil Meyyazhagan

வெறி  வெறி  வெறி  வெறி
வெறி  வெறி  வெறி  வெறி
கொரவை இடு  டேய்
நெரி  நெரி  நெரி  நெரி
நெரி  நெரி  நெரி  நெரி
திமில பிடி டேய்  

மாக்காள வா மோத
டேய் மறப்பண்பாடு கொண்டாடு
நீ.. ஆடு

வெறி  வெறி  வெறி  வெறி
வெறி  வெறி  வெறி  வெறி
கொரவை இடு  டேய்
நெரி  நெரி  நெரி  நெரி
நெரி  நெரி  நெரி  நெரி
திமில பிடி டேய்

கழற்வாய்  வெறியா
முறுக்கி  மிடுக்கித்  தருக்கிச்  செருக்கி 
கொடல  உருவி
வட்டக்கரியா
வால்  சுத்துல
கால் சுத்துல
வா மாப்புள
முறுக்கு பத்தல
எந்திரி எந்திரி எந்திரி எந்திரி
எந்திரி எந்திரி ஏறு தழுவு
மஞ்சலி வாலா
வா சந்துல மார் தெம்புல
கூர் கொம்புல  நான் அஞ்சல

 
குடி சிறந்திட விடி விடிந்திட
மிடி மலர்ந்திட இனம் குளிர்ந்திட
கொடி பறந்திட படி இணைந்திட
சதி முறிந்திட மொழி வளர்ந்திட
நிலம் வியந்திட பலம் புரிந்திட
குரல் விளங்கிட நலம் விளைந்திட
புகை அடங்கிட பகை விலகிட
தகை நிலைத்திட நகை ஒதுங்கிட
தை  பிறந்திட செய்  செழித்திட
தாய்  மகிழ்ந்திட சேய்  தொடர்ந்திட
ஊர்  இணைந்திட  பேர்  அதிர்ந்திட
பார்   மலைத்திட யார்  தடுத்திட
{வா  இனமே  நாள்  இதுவே}
வா  வனைந்திட  நாள்  சமைத்திட
கோள்  வணங்கிட  ஊழ்  இணங்கிட
நான்  விரட்டிட  நீ  விரட்டிட
தாய்  தமிழினம்  தீ  பிடித்திட

யானை  கட்டி  போராடிச்சு
முறைத்த  வச்சு  புலி  அடிச்சு
அறம்  எடுத்து  அரசமைச்சு
குடிய  காத்த  வீரா
குத்து  பட்டு  வெட்டு  பட்டு
குன்டு  பட்டு  நொந்து  கெட்டு
பச்ச  துரோகம்  கடந்து
வந்த  பச்ச  தமிழ்  நாட்டுக்காரா

முறுக்கி  மிடுக்கி
த்  தருக்கிச்  செருக்கி
உடல
த் திருகி ஆணைசொரியா
வால்  சுத்துல
கால் சுத்துல
வா மாப்புள
ஆள் பத்தல
எந்திரி எந்திரி எந்திரி எந்திரி
எந்திரி எந்திரி மாடு  பழகு
குத்துகுழம்பா
வா சந்துல மார் தெம்புல
கூர் கொம்புல  நான் அஞ்சல

நாம் மட்டும் தான்
நம் மண்ணின் காவலே
வா வீரத்தின் காதலின்
தோன்றலே..

ரத்தத்தில்  சித்தத்தில்
வீரன்  நீ ..
எண்ணில்  உன்னில்  எல்லாம்
தமிழ்  தீ

நாம் மட்டும் தான்
நம் மண்ணின் காவலே
வா வீரத்தின் காதலின் பேரனே
தமிழா எழடா
முறுக்கி  மிடுக்கித்  தருக்கிச்  செருக்கி
உடல திருகி தமிழா  தமிழா
வால்  சுத்துல
கால் சுத்துல
வா மாப்புள
ஆள் பத்தல
எந்திரி எந்திரி எந்திரி எந்திரி
எந்திரி எந்திரி மாடு  பழகு
சேயோன் புதல்வா
வா சந்துல மார் தெம்புல
கூர் கொம்புல  நான் அஞ்சல
 
Veri Song Lyrics in English
 
Lyrics Video Check Our Youtube
Meiyazhagan Song Lyrics 
 Singers : V. M. Mahalingam, Aruna and Chorus
Music Director : Govind Vasantha
Lyricist : Karthik Netha
Starring :Karthi, Arvind Swami
Director : C.Premkumar


No comments:

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...