Nenjukulla Thudikira Idhayatha Lyrics in Kannaal Pesavaa

 Nenjukulla Thudikira idhayatha Song Lyrics In Kannaal Pesavaa

Music :Deva
Singer :Sujatha
Starring : Arun Vijay, Suwalakshmi

Nenjukulla Thudikira Song Lyrics in Tamil

Nenjukulla Thudikira Song Lyrics in Tamil


நெஞ்சுக்குள்ள துடிக்கற
இதயத்த விட்டு விட்டு மூச்சு போகுதே
ஒரு வழி தெறியாம
தேடுதய்யா அந்த மூச்சு காத்தையே

நெஞ்சுக்குள்ள துடிக்கற
இதயத்த விட்டு விட்டு மூச்சு போகுதே
ஒரு வழி தெறியாம
தேடுதய்யா அந்த மூச்சு காத்தையே

வானம் அங்கிருக்க
வெண் வான்மதி இங்கிருக்க
ரெண்டும் விலகிட வாழ்ந்திடுமா
ஒரு வழி சொல்லு கை பிடிக்க
~~~~~~
அலங்கரிச்ச தேரு போல
ஊர்வலமாய் வந்தாலே  
சக்கரங்கள் உடைந்து போக
வீதியிலே நின்னாலே
 
நந்தவன அழகைப்  போல
நாளெல்லாம் பூத்தாலே
ஈரம் தான் காய்ந்து போக
பாலைவனம் ஆனாலே

ஏங்கும் காதல் சேர
விதி வாசல் திறக்கலையே
பொங்கும் ஊத்தைப் போல
என் காதல் வத்தலையே

கண்ணிரண்டில் ஒன்னு தான் பிரியுதா
கரு வண்டு கண்ணையே குடையுதா
செம்பருத்தி இதழால் விழியா
பெண்ணொருத்தி காணாத வலியா

(நெஞ்சுக்குள்ள துடிக்கற ...)

ஆசை என்னும் மண்ணில் தான்
காதல் விதை விதைத்தாலே
முள்ளுச்செடி முளைச்சுப் போனால்
நெஞ்சுக்குள்ள குத்திடுமோ

வானளவு ஆசை வைச்சேன்
கடுகளவு ஆகிடுமா
கடல் அளவு நேசம் வைச்சேன்
சிறு துளியாய் மாறிடுமா

நான் வாங்கும் மூச்சே
உன் பேச்சுக் கேட்காதா?
ரெத்தம் எல்லாம் கொதிச்சே
உன் பெயரைச் சொல்லுதே  

பூவெல்லாம் பூக்காத பூமியா
வான் மழை பெய்யாத மேகமா
முத்தெல்லாம் விழையாத சிப்பியா
நட்சத்திரம் பூக்காத வானமா

Tamil Sad Female Song Lyrics

No comments:

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...