வாசிகசாலை
புத்தகங்களாய் நான்வந்தும்
வாசிக்காமல் செல்லும்
வாசகியாய் நீ..!
அமெரிக்கனின்
ஆணவம்
உனக்குள்..
ஈராக் தாயின்
கண்ணீர்
எனக்குள்...!
பாலைவன
பயனியாய் நான்
மின்னல்
காட்டி
ஏமாற்றிச்செல்லும்
மழை மேகமாய் நீ...!
அவள்
ஒரேயொரு
பார்வைதான்
இவன்
மனசு முழுக்க
காட்டுத்தீயாய்...!
தூண்டிலில்
மாட்டிக்கொண்ட
புழுவாய் என் மனசு
நழுவிச்செல்லும்
மீனாய் அவள்...!
அருங்காட்சியகத்தில்
அடுக்கப்பட்ட
அழகு பொருளாய்
அவள்
பார்த்துவிட்டுமட்டும்
பயனிக்கும்
பார்வையாளனாய் நான்...!
என் வீட்டு
ஜன்னலில்
பக்லில்தான் நிலவு
பக்கத்து வீட்டு
வாசலில்
புன்னகைத்தபடி...!
பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போடுங்கள்...
உங்கள் ஓட்டுகள் என் தேசிய விருதுகள்..
7 comments:
//என் வீட்டு
ஜன்னலில்
பக்லில்தான் நிலவு
பக்கத்து வீட்டு
வாசலில்
புன்னைத்தபடி...!//
இது சூப்பர் :))
எழுத்துப்பிழையை கொஞ்சம் சரிபண்ணிடுங்க ரியாஸ்
மிக்க நன்றி ரகு.
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.
//பகலில்தான் நிலவு
பக்கத்து வீட்டு
வாசலில்
புன்னகைத்தபடி...!//
பகல் கனவோ :))
நல்லா இருக்கு ரியாஸ்
###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################
நன்றி ஜெய்லானி...
உங்கள் வருகைக்கும்.. உங்கள் விருதுக்கும்..
யார் அந்த அவள்.............?????
அழகு ரியாஷ் தொடரட்டும்
தமிழ் எழுத்துப்பனி
நீங்களும் அவளும் கவிதையும் சூப்பர்.
Post a Comment