சுடச்சுட பழைய சோறு...!

ஒரு சமையல் குறிப்பு..


சமையல் கில்லாடிகளான நம்ம அக்காமார்களுக்கு போட்டியா நானும் இன்று சமையல் குறிப்பு தரப்போறன்.. ஏய்யா உனக்கு இந்த வேண்டாத வேல.. ஏன் இந்த கொலவெறி அப்பிடி நீங்க மனசுக்குள் நினைக்கிறது எனக்கு கேட்குதுங்கோ... கண்ட கண்ட மொக்கையெல்லாம் போட்டியே ஒரு சமயல் குறிப்பு போட்டியான்னு நாளைய பதிவுலகம் நம்மல பார்த்து ஒரு கேள்வி கேட்ககூடாது பாருங்க... அதுதான் இந்த முயற்சி அப்பிடியே வாங்க போவோம் சமயலறைக்கு...

நான் இன்றைக்கு சொல்லப்போறது புதிதாக சமைப்பது சமபந்தமாக இல்லிங்கோ... சமைத்த உணவை எப்படி ரீமேக் செய்து எப்படி சுவையாக சாப்பிடலாம் என்பது பற்றித்தான்.. இது மத்திய கிழக்கில் வேலை செய்யும் சமைத்து சாப்பிடும் நண்பர்களுக்கு ரொம்பவே பயன்படும்.. அதாவது வேலைக்கு செல்வதால் ஒரு நாளைக்கு ஒரு வேளையே சமைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து மூன்று வேளையும் சாப்பிடுவதே இங்குள்ள நிலை.. அப்படி சாப்பிடும் போது அந்த உணவு வகைகள் குளிர்ந்த நிலையிலையே கானப்படும் 'குளிர்ல வைத்தா குளிராத்தான்யா இருக்கும் பின்ன சூடாவா இருக்கும்' அப்டி யாரோ சொல்றது கேட்குது.. இதோ வந்துட்டேன்...

அப்படி குளிர்ந்த உணவு வகைகளை அப்படியே சாப்பிட்டால் அதில் அவ்வளவு ருசி இருக்காது.. அதை கொஞ்சம் சுவை கூட்டி சுடச்சுட எப்படி சாப்பிடுவதென்பதை இப்ப பார்க்க போறோம்,,

தேவையானவை

பழைய சோறு
பழைய கறி
ஒரு முட்டை (ஒருவருக்கு)
கொஞ்சம் நெய் அல்லது எண்னெய்

ஒரு பிரைபேனில் அதுதாங்க வறுக்க பொரிக்க எடுபோமே அந்த பாத்திரம் அடுப்பில் வைத்து அதிலே ஒரு சொட்டு நெய் அல்லது எண்னெய் விட்டு கரண்டியால் தடவிக்கொள்ளவும்.. பின் முட்டையை உடைத்து ஊத்தி அதையும் தடவிக்கொள்ளவும்.பின் சோற்றையும் கறியையும் போட்டு நன்றாக கிளரவும். இதற்கு கோழியோ இறைச்சியோ, மாட்டிறைச்சியோ தேவையில்லை சாதாரன பருப்பு, கிழங்கு இருந்தாலே சுவையாக இருக்கும். அதுவும் கறி கொஞ்சம் இருந்தாலே போதும். இறுதியில் பிரைட் றைஸ் போல பழைய சோறு ஆகிவிடும். ஒரு பத்து நிமிடத்தில் பழைய சோறும் கறியும் சுவையான சுடச்சுட சமைத்த உணவாக மாறிவிடும்.. எப்புடி நாங்களும் சமைப்போமில்ல..

இவ்வளவு நாளும் அக்காமார்கள் புதுசு புதுசா எப்படி சமைக்கிறது என்பதைத்தான் சொல்லித்தந்தார்கள் இப்படி ஒன்றும் சொல்லித்தரலையே என்று. எல்லோரும் என்னை புகழ்வது விளங்குது.. வாங்க வாங்க வரிசையில வந்து தாங்க உங்க அன்பு பரிசை.

எங்க போறீங்க நில்லுங்க இன்னும் முடியல்ல... ஒன்று வாங்கினா ஒன்று இலவசம் என்கிறமாதிரி ஒரு சமையல் குறிப்பு படிச்சா ஒரு மருத்துவ குறிப்பு இலவசம். அடுத்ததா ஒரு மருத்துவ குறிப்பு. 'இன்றைக்கு ஒரு வழிபன்னாம போக மாட்டான்' நீங்க சொல்றது கேட்குது.. கொஞ்சம் பொறுத்துக்குங்க..

இப்ப நிறைய பேருக்குள்ள பிரச்சினை தலைமுடி உதிர்வது.. இதற்காக கண்ட கண்ட மருந்துகள், எண்னெய் வகைகள் நிறைய விலை கொடுத்து வாங்கி ஏமாறுகிறார்கள்.. முடி உதிர்வதை தடுக்க,குறைக்க ஒரு இலகு வழி தலையை இரண்டு கை விரல்களாலும் மசாஜ் செய்வது. இதை தனக்குத்தானே செய்துகொள்ளவும் முடியும் பிறரைக்கொண்டு செய்யயும் முடியும்.. வெறுமனே முடியை மட்டும் கிளராமல் கொஞ்சம் அழுத்தமாக செய்ய வேண்டும். இது எப்படி சாத்தியப்படும் என்று விஞ்ஞான விளக்கம் எல்லாம் கேட்கப்படாது.. முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் நூற்றுக்கு நூறு வீதம் சாத்தியப்படாவிட்டாலும் கொஞ்சமாவது சாத்தியப்படும்.. இது நான் அனுபவம் மூலம் கண்ட உண்மையும் கூட...

வழுக்கை தலை உள்ளவர்கள் மசாஜ் செய்தால் முடி வளருமா எனக்கேட்டால் இப்போதைக்கு சொல்ல முடியாது.. ஏண்டா வழுக்கை தலை உள்ள எலியை தேடிக்கிட்டிருக்கேன்.. ஏதாவது புதிய மருந்து கண்டு புடிச்சா எலிக்குத்தான் முதல்ல கொடுப்பாங்களாமே.. அதுதான் நானும் எலியை வைத்து ஆராய்ச்சி செய்து பார்க்கலாமென்றுதான்.. ஆனா இன்னும் வழுக்கை தலை உள்ள எலிதான் கிடைக்கல்ல... தாமஸ் அல்வா எடிசன் மாதிரி நாங்களும் யோசிப்போமில்ல...

நான் கடைசியாக இட்ட இடுகைக்கு (முடியல்லயே) தமிழிசில் 43 ஓட்டு போட்டு என்னை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கிய அனைவருக்கும் மிக்க நன்றிகள்.... கடலில் தூக்கிப்போடப்பட்ட மலையாளி என்ன ஆனார் என நிறைய பேர் கேட்டிருந்தார்கள்... அவர் அப்படியே கடலிலிருந்து கரையேறி இப்போது காட்டுவாசிகள் வாழும் ஒரு தீவில் டீக்கடை வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன...

மறக்காமே ஒரு ஓட்டு போட்டுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்க மக்களே..

25 comments:

ஜில்தண்ணி said...

//கண்ட கண்ட மொக்கையெல்லாம் போட்டியே ஒரு சமயல் குறிப்பு போட்டியான்னு நாளைய பதிவுலகம் நம்மல பார்த்து ஒரு கேள்வி கேட்ககூடாது பாருங்க..//

ஆடடா இதுதான் தொலை நோக்கு பார்வையா,என்னே ஞானம் :)

அட அடுப்ப பத்த வைக்க சொல்ல உட்டுடீங்களே :)

வழுக்கை தலையில் மசாஜ் செய்தால் இருக்குற ஒன்னு ரெண்டு முடியும் போயிடும்,அப்பறம் மொட்ட தான்

நல்ல பகிர்வு

நானானி said...

//வேலைக்கு செல்வதால் ஒரு நாளைக்கு ஒரு வேளையே சமைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து மூன்று வேளையும் சாப்பிடுவதே இங்குள்ள நிலை.. //

ரொம்பவே பாவம்.

Riyas said...

வாங்க ஜில் முதல் ஆள் நீங்கதான் உங்களுக்குத்தான் பழைய சோறும் கறியும்..

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

Riyas said...

@நானானி.
//வேலைக்கு செல்வதால் ஒரு நாளைக்கு ஒரு வேளையே சமைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து மூன்று வேளையும் சாப்பிடுவதே இங்குள்ள நிலை.. //

ரொம்பவே பாவம்.//

வாங்க நானானி.. வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி இதை பாவம் என சொல்வதைவிட இங்கேயுள்ள யதார்த்தம் இதுதான்.

ஜீவன்பென்னி said...

பழைய சோறு சூப்பரா சுவையா இருக்கும் போல. செஞ்சு பாத்துட வேண்டியதுதான்.

ஸாதிகா said...

யம்மா..நீங்களும் மொக்கைப்போட ஆரம்பிச்சாச்சா?உங்கள் குறிப்பை ஃபாலோ பண்ணினால் இருக்கும் தலை முடியெல்லாம் கொட்டி,இந்த சாப்பாட்டை சாப்பிட்டதில் வயிறெல்லாம் வெந்து,நொந்து மனுஷனை பந்து போல் ஆக்கிவிடும்.நான் வரலேப்பா இந்த கேமுக்கு.

அது சரி,உங்களின் இந்த உலக மகா ரெஸிப்பிக்கு நாமம் சூட்டவில்லை?

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமை அருமை.. நல்ல பகிர்வு ரியாஸ்.. டிரை பண்ணி பார்த்திடவேண்டியதுதான்.

Riyas said...

// ஜீவன்பென்னி said...
பழைய சோறு சூப்பரா சுவையா இருக்கும் போல. செஞ்சு பாத்துட வேண்டியதுதான்//

செய்து பாருங்க.. நான் சொன்னது போல..

நன்றி வருகைக்கு..

Riyas said...

வாங்க ஸாதிகா அக்கா..

முதல் முறையா சமையல் குறிப்பும் மருத்துவ குறிப்பும் போட்டிருக்கேன் இப்படி சொல்லிட்டிங்களே..

//அது சரி,உங்களின் இந்த உலக மகா ரெஸிப்பிக்கு நாமம் சூட்டவில்லை?//

இது விளங்கவில்லை..

Riyas said...

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமை அருமை.. நல்ல பகிர்வு ரியாஸ்.. டிரை பண்ணி பார்த்திடவேண்டியதுதான்//

நீங்களும் செய்து பாருங்க.. ஸ்டார்ஜன் சார்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

நாடோடி said...

ந‌ல்ல‌ ரெசிபி டிப்ஸ் ம‌ற்றும் ம‌ருத்துவ‌ டிப்ஸ்.. ப‌கிர்விற்கு ந‌ன்றி..

ஜெய்லானி said...

//முடி உதிர்வதை தடுக்க,குறைக்க ஒரு இலகு வழி தலையை இரண்டு கை விரல்களாலும் மசாஜ் செய்வது//

ஏன் ரியாஸ் , தானா இவன் ஏன் முடியை இப்பிடி பிச்சிகிரான்னு யாரும் கேட்டால் என்ன் சொல்ல..?

ஸாதிகா said...

//அது சரி,உங்களின் இந்த உலக மகா ரெஸிப்பிக்கு நாமம் சூட்டவில்லை?//

பெயர் வைக்கவில்லையா என்று கேட்டேன்.

Jey said...

ஆஹா ஓஹோ பேஸ் பேஸ் ரொம்ப நன்னா இருக்கு:)

Riyas said...

@@ஜெய்லானி.
//ஏன் ரியாஸ் , தானா இவன் ஏன் முடியை இப்பிடி பிச்சிகிரான்னு யாரும் கேட்டால் என்ன் சொல்ல..? //

ஒன்னும் சொல்ல வேண்டாம். சும்மா சிரிச்சா போதும் அப்ப அவங்களுக்கு விளங்கிடும்.

வருகைக்கு நன்றி.. ஜெய்லானி

Riyas said...

நாடோடி..

jey..

உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப மகிழ்ச்சி..

Unknown said...

அழகான சமையல் குறிப்பு.
அசத்தலான வழுக்கை தலை மேட்டர்.
இரண்டும் சூப்பர் ரியாஸ்.
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பதிவு.

செல்வா said...

/// ஏன் இந்த கொலவெறி அப்பிடி நீங்க மனசுக்குள் நினைக்கிறது எனக்கு கேட்குதுங்கோ///
நினைக்கிறது கூடவா கேக்குது .. ஆனா நான் வேற நினைச்சேன் ...

///கண்ட கண்ட மொக்கையெல்லாம் போட்டியே ஒரு சமயல் குறிப்பு போட்டியான்னு நாளைய பதிவுலகம் நம்மல பார்த்து ஒரு கேள்வி கேட்ககூடாது பாருங்க... ///
என்னை சொல்லலைல...!!!

///ஆனா இன்னும் வழுக்கை தலை உள்ள எலிதான் கிடைக்கல்ல...///
ஒரு எலிய புடிச்சு அதோட தலைல வழுக்கை தலை அப்படின்னு எழுதி உங்க ஆராய்சிய தொடர வேண்டியதுதானே ..

pinkyrose said...

ஹாய் ரியாஸ்!

உங்க பழைய சோறு ரெசிப்பி ... பரவாயில்லை அபுதாபிக்கு நன்றி..
இங்க இருந்தா அதுவும் நாங்க செஞ்சா என்ன அழு அழுவுவீங்க.. வேணும் வேணும் நல்லா வேணும்...

(ஹைய்யோ இது நான் சொல்லல அம்மா சொல்வாங்கல்ல அதான்.. :)))

ஹேமா said...

ரியாஸ்...."வெளிநாட்டு வாழ்க்கையும் எங்க சாப்பாடும்"ன்னு போட்டிருக்கலாம்.இதுக்கு ஒரு பில்டப்."சுடசுட பழைய சாதம்".நானும்தான் அனுபவிச்சுக்கொண்டிருக்கிறேனெல்லோ !

வழுக்கைத்தலயும் இப்போ அதுவே நாகரீகமாப்போச்சுங்கோ !

அன்புடன் நான் said...

“முடி”வாதான் இருக்கிங்க போல?

Mufeesahida said...

ஹாய்..றியாஸ் அருமையாக சொல்லி உள்ளீர்களே..
நானும் உங்கள் ஏரியாதான்...
http://mufeessahida.blogspot.com/

நானானி said...

அந்த யதார்த்தத்தைதான் பாவமென்கிறேன். சரிதானே?
அன்றன்று செய்து சுடச்சுட சாப்பிடமுடியாமல், என்றோ செய்ததை சுடவைத்து சாப்பிடுவதே வழக்கமென்றால் கஷ்டமாக இருக்கிறது.

ப்ரியமுடன் வசந்த் said...

அப்பாடி நீங்க நம்மகட்சி...
ஆனா நான் நைட் செய்ததை மறுநாள் பகலில் மட்டும்தான் சூடு செய்து சாப்பிடும் பழக்கம் மூன்று நாட்களுக்கு வைத்து சாப்பிடும் வழக்கம் இல்லை...

//கரையேறி இப்போது காட்டுவாசிகள் வாழும் ஒரு தீவில் டீக்கடை வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன...//

அடப்பாவிகளா அங்க போயுமா நீங்க திருந்தவே மாட்டீங்களாடா மச்சான்?

ஜெய்லானி said...

@@@Riyas /ஒன்னும் சொல்ல வேண்டாம். சும்மா சிரிச்சா போதும் அப்ப அவங்களுக்கு விளங்கிடும்.//

நான் சும்மா சிரிச்சாலே அப்படிதான் பயப்புள்ளாங்க ஓடறானுங்க . இதுல தலைய பிச்சிகிட்டா..???..!!

Kanguva Mannippu Song Lyrics

Mannippu Song Lyrics in Kanguva      Mannippu Song Lyrics in English Aaraaro Aariraro Aaraari Raaro Aaraaro Aariraro Aaro Aaro Aariraro Aara...