தாய் மடி...!

சில
இரவுகள் வேண்டுகிறேன்
இறைவனிடம்..
தாய்மடியில்
தலைவைத்து உறங்கிட...!

தவிக்கிறது மனசு
மீண்டும்
குழந்தையாகிட
தாயின் சேலைக்குள்
ஒளிந்து விளையாடும்
குழந்தையை
கானும் போதெல்லாம்...!

தாயே
நான் உன்னருகில்தான்
உன் நினைவுகள்
என்னோடு
வாழும் வரை....!

ஆகாயம் நோக்கிப்போன
பறவை
பசித்தால்
பூமிக்கு வருவது போல
நான் எங்கு சென்றாலும்
என் நினைவுகள்
உன்னை நோக்கியே
வரும்...!

பாலைவன தேசத்திலிருந்து
ரியாஸ்..

17 comments:

பனித்துளி சங்கர் said...

அருமை மறக்காத நினைவுகள் கசிகிறது வார்த்தைகளாக . பகிர்வுக்கு நன்றி

http://rkguru.blogspot.com/ said...

கவிதை அருமை ......வாழ்த்துகள்

ஹேமா said...

மனம் கனக்கிறது ரியாஸ்.புலம்ப மட்டுமே முடிகிறது.இறக்கும் போதாவது என் தாய் மண்ணில் என் நானும் நிறையத் தரம் எழுதிவிட்டேன் !

ராஜவம்சம் said...

சூப்பர்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான கவிதை..
தாய் நினைவுகள் சுமக்கும் வரிகள்..

vanathy said...

கவிதை சூப்பர்.

ஜெய்லானி said...

நினைவுகள் அருமை ரியாஸ்

ஜில்தண்ணி said...

கவிதை - வற்றாத நினைவுகள்

நினைவுகளை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா :)

நாடோடி said...

க‌விதை ந‌ல்லா இருக்கு ரியாஸ்

Allinone said...

மிக அருமை,இதயத்தை தொடும் அருமையான கவிதை.

Raghu said...

சூப்ப‌ர் ரியாஸ்! பாச‌ உண‌ர்வை மிக‌ அழ‌காக‌ அருமையாக‌ வெளிப்ப‌டுத்தியிருக்கீங்க‌..ம‌ன‌ம் க‌ன‌த்துப்போவ‌து உண்மை

Chitra said...

தாயன்புக்கு ஏங்குவதை, அருமையாக வெளிப்படுத்தி இருக்கும் கவிதை. ம்ம்ம்....

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க..

Riyas said...

தமிழிசிடமிருந்து..

Hi Riyas363,

Congrats!

Your story titled 'தாய மடி...!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 22nd July 2010 07:56:04 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/307669

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

pinkyrose said...

உங்க அம்மாட்ட படிச்சு காமிச்சீங்களா ரியாஸ்?!

செல்வா said...

//ஆகாயம் நோக்கிப்போன
பறவை
பசித்தால்
பூமிக்கு வருவது போல
நான் எங்கு சென்றாலும்
என் நினைவுகள்
உன்னை நோக்கியே
வரும்...!///
அருமையான கவிதைங்க ..
விரைவில் உங்கள் அம்மைவைப் பார்க்க வாழ்த்துக்கள் ..

Anonymous said...

Romba arumaya iruku riyas.....innum kavithaigal irundha please balakrishnan111@gmail.com ku mail pani vidunga. thanks

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2