கொஞ்சம்...!

பூவில் கொஞ்சம்
தீயில் கொஞ்சம்
அழகில் கொஞ்சம்
அன்பில் கொஞ்சம்
ஆனதோ பெண்னென்று...!

மயக்கம் கொஞ்சம்
தயக்கம் கொஞ்சம்
காமம் கொஞ்சம்
காதல் கொஞ்சம்
ஆனதோ அவள் விழியென்று...!

நாணம் கொஞ்சம்
நளினம் கொஞ்சம்
பழமை கொஞ்சம்
புதுமை கொஞ்சம்
ஆனதோ அவள் உடலென்று...!

ராகம் கொஞ்சம்
தாளம் கொஞ்சம்
தாகம் கொஞ்சம்
மோகம் கொஞ்சம்
ஆனதோ அவள் மொழியென்று...!

கொஞ்சம்
கொஞ்சம்
கொஞ்சம்
ஆனதோ அவள் எனதென்று....!

,,,,,,,,,,,,,,,,

10 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

கொஞ்சம்....இல்ல, ரொம்பவே நல்லா இருக்கு இந்த
கவிதை.

தமிழ் உதயம் said...

சினிமா பாடலாக்கலாம். கவிதை நன்றாக இருக்கிறது.

Chitra said...

அழகிய கவிதை! very nice. :-)

ஹேமா said...

ரியாஸ்...கொஞ்சம் கொஞ்சமாய் கொஞ்சிய கவிதை மிஞ்சிய அழகு.

ம.தி.சுதா said...

//...பழமை கொஞ்சம்
புதுமை கொஞ்சம்
ஆனதோ அவள் உடலென்று...!//
இது தான் இன்னும் அருமையாக இருக்கிறது... வாழ்த்துக்கள்..

செல்வா said...

கொஞ்சம் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க ..!!
அப்புறம் பிரச்சினை கொஞ்சம் ஆகிடப் போகுது ..!
கவிதை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கு ..!!

ஸாதிகா said...

நறுக்கென்று இருந்தாலும் நல் சுவையாக இருந்தது கவிதை.

RVS said...

இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்..... :):):)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Asiya Omar said...

கொஞ்சம் இல்லை,ரொம்பவே நல்லாயிருக்கு.

Jaleela Kamal said...

கவிதயும் அருமை, ஜில்லுன்னு தண்ணியும் குடிச்சசு சூப்பர்

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...