சில நேரங்களில் கவிதையாக எதையோ எழுத தொடங்க.. அதில் வார்த்தைகள் தடுமாறி எங்கோ போயிடும் அவ்வாறு வழி தவறிய இரண்டு கவிதைகள் இங்கே.. எவ்வாறு இதை முற்றுப்பெற வைப்பதென்பது தெரியாமல் ரொம்ப நாளாக யோசிக்கிறேன்.
ஓர் இரவுப் பொழுதில்...!
இரவுப்போர்வைக்குள் ஒழிந்த
வானம்.
இருளகற்ற வந்த
நிலவு.
மனசின் ஓரங்களில்
ஒரு மென்சோகம்
கிடைக்காத ஒன்றுக்காய்.
கேட்டால் கிடைத்திருக்கலாம்
கேட்கவுமில்லை
கிடைக்கவுமில்லை...
இப்பொழுதெல்லாம்
வரைமுறை தாண்டுவதுதான்
வரலாறாகிறது
முட்டாள்
பூவுக்குள் வாழ்ந்துகொண்டு
வாசம் தேடி அலைகிறேன்
கண்களை துரத்திவிட்டு
கனவுகளை அனைத்துக்கொள்கிறேன்
சூரியனில்லா
பகல் தேடுகின்றேன்
நிலவில்லா
வானம் தேடுகின்றேன்
ஓர் இரவுப் பொழுதில்...!
இரவுப்போர்வைக்குள் ஒழிந்த
வானம்.
இருளகற்ற வந்த
நிலவு.
மனசின் ஓரங்களில்
ஒரு மென்சோகம்
கிடைக்காத ஒன்றுக்காய்.
கேட்டால் கிடைத்திருக்கலாம்
கேட்கவுமில்லை
கிடைக்கவுமில்லை...
இப்பொழுதெல்லாம்
வரைமுறை தாண்டுவதுதான்
வரலாறாகிறது
முட்டாள்
பூவுக்குள் வாழ்ந்துகொண்டு
வாசம் தேடி அலைகிறேன்
கண்களை துரத்திவிட்டு
கனவுகளை அனைத்துக்கொள்கிறேன்
சூரியனில்லா
பகல் தேடுகின்றேன்
நிலவில்லா
வானம் தேடுகின்றேன்
13 comments:
nice poem.both are super
நன்கு அமைந்து உள்ளது.
இரண்டு நல்ல இருக்குது... "முட்டாள்" இன்னும் அருமையாக இருக்கிறது.
ரியாஸ்....இரண்டு எண்ணங்களுமே அருமை.விரக்தி,வேதனை கலந்திருக்கு.
உங்க மனசு இருக்கிற நிலையைக் காட்டுது கவிதை !
இரண்டு கவிதைகளுமே அருமை... கவிதைகளுக்கு ஏற்ற படங்களை இணைத்திருக்கிறீர்கள்...
அருமை ரியாஸ்.
Kavithaikal Arumai...
அருமை
ஓர் இரவுப் பொழுதில் காதலை சொல்லாம இருப்பது பத்தினதுங்களா ?
//சூரியனில்லா
பகல் தேடுகின்றேன்
நிலவில்லா
வானம் தேடுகின்றேன் //
இது நல்லா இருக்கு
இரண்டு கவிதைகளுமே அருமை நண்பரே
இரண்டு கவிதைகளும் அருமை...
//மனசின் ஓரங்களில்
ஒரு மென்சோகம்
கிடைக்காத ஒன்றுக்காய்.
கேட்டால் கிடைத்திருக்கலாம்
கேட்கவுமில்லை
கிடைக்கவுமில்லை..//
யதார்த்தம்,,
அருமையான பதிவு
உங்க முயற்சி நல்லாயிருக்குங்க...
Post a Comment