சற்றென்று விழித்துக்கொள்ளுங்கள்..!

உங்கள் சாலையோர
பூக்கா மரங்களில் எல்லாம்
பூக்கள் பார்த்ததுண்டா?
இலைகளே அசையாத நேரத்தில்
தென்றல் காற்று
உங்களை தீண்டியதுண்டா?
சூரியன் நச்சரிக்கும்
நடுப்பகல் வேளையொன்றில்
பனித்துளிகளில் கால் பதிந்ததுண்டா?
மேகங்கள் தொலைந்த கோடையில்
மழைச்சாரலில்
மனசு முழுக்க நனைந்ததுண்டா?
மழலைகள் இல்லா தேசத்திலும்
கொஞ்சும்
மழலைச்சிரிப்பில் மயங்கியதுண்டா?
கொலுசுகள் வளையல்கள்
இளையராஜா
இசைபாடி கேட்டதுண்டா?
சற்றென்று
விழித்துக்கொள்ளுங்கள்
இவ்வழியால்தான்
வந்துகொண்டிருக்கிறாள்!!!
!
!
!
!
!
!
!
!
!
!
!



9 comments:

கோவி said...

என்ன ஒரு புனைவு.. அடடா..

Riyas said...

ரொம்ப நன்றி கோவி சார்!

Unknown said...

அருமையான வரிகள் தோழா

ஆத்மா said...

ஆஹா..............என்னா ஒரு கற்பனை....//

மேகங்கள் தொலைந்த கோடையில்
மழைச்சாரலில்
மனசு முழுக்க நனைந்ததுண்டா?
மழலைகள் இல்லா தேசத்திலும்
கொஞ்சும்
மழலைச்சிரிப்பில் மயங்கியதுண்டா?//

அருமை நண்பா....

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை...

Seeni said...

aaaakaaa!

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை வரிகள் ! வாழ்த்துக்கள் !

Thava said...

அழகான கவிதை..வேறென்ன சொல்ல ? அசத்திட்டீங்க..நன்றி.

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2