மரதன் கடவள இரும்பு மனிதன்!

மரதன்கடவள என்பது இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுர மாவட்டத்தில் கண்டி-யாழ்ப்பாணம் A9 சாலையில் இடம்பெற்றுள்ள ஒரு சிறிய நகரமாகும். இந்த நகரின் பெயரைச்சொன்னவுடன் இந்தப்பிரதேசத்தில் வாழ்ந்து மறைந்த ஒருவரின் பெயரும் நியாபகப்படுத்தபடுகிறதென்றால் அவர்தான் "மரதன்கடவள யக்கடயா"

ஜனாதிபதியுடன் யக்கடயா

இந்த மனிதன் பாக்தாத் திருடன், ரொபின் ஹூட் போன்ற புகழ் பெற்ற குற்றவாளியாக இருந்தாலும், தான் திருடிய பணத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கும் நற்பண்பாளராகவும் திகழ்ந்ததுதான் இவரை எல்லோர் மனதிலும் நிலைத்திருக்க செய்தது.

யக்கடயா என்பது அவரது வீர தீர செயல்களைப் பார்த்து கிராமத்து மக்கள் வைத்த காரணப் பெயராகும். யக்கடயா என்ற பதத்திற்கு இரும்பு மனிதன் என்று பொருள்படும். காரணம் எந்தவொரு இரும்பு கம்பிகளையும் உடைத்தெறியும் ஆற்ற்ல் பெற்றிருந்தமையாகும். யக்கடயாவின் உண்மையான பெயர் சாஞ்சி ஆராச்சிகே ஜினதாஸ என்பதாகும்.

யக்கடயாவின் பிறப்பிடம் கண்டி பேராதெனிய வில் உள்ள குடா இரியாகம வளவ்வை யாகும். இவருக்கு ஒரே ஒரு சகோதரி மாத்திரமே இருந்திருக்கிறாள். சிறு வயதில் யக்கடயா கல்வி கற்ற பாடசாலை ஆசிரியர் ஒருவர் மது போதையில் வந்ததனால் ஆத்திரமடைந்த யக்கடயா ஆசிரியரை தாக்கிவிட்டு பாடசாலையை விட்டு ஓடிவிட்டார். அத்துடன் யக்கடயாவின் பாடசாலைக் கல்வி முடிவுபெற்றது.

அதையடுத்து சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு, படிப்படியாக ஒரு கொள்ளைக்காரனாகவும் ஆகியிருக்கிறார். ஒரு கொள்ளைச்சம்பவத்தின் போது கெக்கிராவ தபால் நிலையத்தின் தபால் அதிபரை சுட்டுக் கொன்ற பின்னர், யக்கடயா பற்றி நாடெங்கிலும் பரவலாக பேசப்பட்டது.
இதன் பின்னர் யக்கடயாவை பொலிஸார் நாடெங்கிலும் வலை விரித்து தேட ஆரம்பித்தனர். அதனால் பொலிஸாரிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக யக்கடயா வடபகுதிக்கு ரயிலில் சென்று, பருத்தித்துறையில் இருந்து 20 மைல் தூரத்தை நீந்தியே கடந்து இந்திய கரையை அடைந்ததாக அறிவிக்கப்படுகிறது.

யக்கடயாவிற்கு நன்றாக தமிழ் பேச முடியும். அதனால் யக்கடயா இந்தியாவில்(தமிழ்நாட்டில்) எவ்வித பிரச்சினையுமின்றி பல வருடங்கள் நிம்மதியாக இருந்தார். பல நாள் கள்ளன் ஒருநாள் அகப்படுவான் என்பதற்கு அமைய 7 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட யக்கடயா, இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு அவருக்கு எதிரான கொலை குற்றத்திற்காக மரண தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார்.
16 ஆண்டுகள் சிறையில் இருந்த யகடயா பின்னர் விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டபின்னர் எந்தவொரு தகவலும் பலவருடங்களாக எவருக்குமே தெரியவில்லை. யக்கடயா ஒரு கொலை காரனாகவும் கொள்ளைக்காரனாகவும் இருந்தாலும் அவர் அப்பாவி மக்களை துன்புறுத்தும் பழக்கத்தை கொண்டிருக்கவில்லை. செல்வந்தரிடம் அடித்து பறிக்கும் பணத்தை ஏழை மக்களுக்கு பகிர்ந்து கொடுத்தார்.

யக்கடயா சைவ உணவையே உண்டு வந்ததுடன், தனது வாழ்க்கையில் என்றுமே சிகரட் புகைத்தல், மது அருந்துதல் பழக்கத்திற்கு அடிமையானதே இல்லை. மரதன்கடவள கிராமப்பகுதியிலே அதிகமாக சுற்றித்திருந்ததால்தான் அவருக்கு "மரதன்கடவள யக்கடயா" என்ற புனைப் பெயரும் கிடைக்கப்பெற்றது.

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் யக்கடயா தேசிய வெள்ளை உடை அணிந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார். பின்னர் விடைபெற்றுச் சென்றார். அதற்கு பின்னர் அவரைப்பற்றிய எவ்வித தகவலும் வெளிவரவில்லை.யக்கடயாவின் தேக நிலை மோசமடைந் ததை அடுத்து அவர் முல்லேரியா தேசிய மனநோய் ஆஸ்பத்திரியில் சில காலமாக சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து, கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இவர் ஒக்டோபர் 9 2011 அன்று111 வயதில் மரணமானார்.

நல்ல மனிதர்களும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கொலையாளிகளாகவும், கொள்ளையர்களாகவும் மாறுகிறார்கள் என்பதற்கு யக்கடயாவின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணமாகும்.

நன்றி: தினகரன்

1 comment:

ஆத்மா said...

நல்ல மனிதர்.
இவரைப் போன்று இன்னுமொரு நபரையும் அறிமுகப்படுத்தியிருந்தீர்களே அவரையும் இரும்பு மனிதர் என்று சொன்னதாக ஞாபகம்...

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...