March 27, 2010

சமர்ப்பணம்                                என் தந்தையின் நினைவுகள்.....!

அன்பானவர்களே.. நான் மொஹமட் ரியாஸ் சொந்த இடம் இலங்கை.
தற்பொழுது அபு தாபியிலிருந்து, நீண்ட காலமாகவே எழுத வேண்டுமென்ற ஆர்வமிருந்தாலும் அதற்கான வாய்ப்போ வசதியோ கிடைக்கவேயில்லை நானே எழுதி நானே படித்து நானே கிழித்து போட்டிருக்கிறேன் எத்தனையோ தடவை. அன்மையிலேயே அறிந்து கொண்டேன் வ்லைப்பூ மற்றும் பதிவுகள்/இடுகைகள் சம்பந்தமாக அதன்படி
எப்படியாவாது எழுத வேண்டுமென்ற ஆர்வத்தில் தமிழ் யுனிகோடு தெரியாமல் ஒவ்வொரு எழுத்தாக தேடி எழுதிக்கொண்டிருக்கிறேன்.

                 எழுதும் முதல் பதிவு எதைப்பற்றி எழுதினால் நல்லாயிருக்கும் என்ற சிந்தனையின் போதுதான் எங்களுக்காகவே வாழ்ந்து மறைந்த ஒருவரை பற்றி எழுத முடிவு செய்தேன் அவர்தான் என் தந்தை அவர் பிறந்தது இலங்கையின் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள ஒரு பிந்தங்கிய கிராமத்தில். கிராமம் என்பதாலும் தனது குடும்பத்தின் வறுமை நிலை காரனமாகவும் பெரிதாக கல்வி கற்க வாய்ப்பு கிடைக்கவில்லை சிறிய வயது முதல்  தனது தந்தையுடன் சேர்ந்து விவசாயத்திலே ஈடுபட்டு ரொம்பவே கஸ்டப்பட்டார் அவ்வாறு சிறிது சிறிதாக வாழ்கையுடன் போராடியே முன்னுக்கு வந்த அவர், தனது 15 வது வயதில் தனக்கென்றொரு தனியான வியாபார நிலையமொன்றையும் ஆரம்பித்து தனது முழு முயற்சியினாலும் உழைப்பாலும் முன்னேறி தனக்கென்றொரு வீடொன்றையும் நிர்மானித்தார்.

                                தனது 24வது வயதில் தனது சொந்த மாமன் மகளை கைப்பிடித்தார் அவர்தான் என் அம்மா.இருவரின் சந்தோசமான அழகான அமைதியான இல்லற வாழ்கையின் அடையாளங்களாய் மூண்று பிள்ளைகள் மூண்றாவதாக பிறந்தவனே நான் எனக்கு ஒரு சகோதரன் ஒரு சகோதரி.
                                 இவ்வாறு தனது வாழ்கை பாதையில் பிள்ளைகளுடனும் வியாபாரத்துடனும் பயனித்துக்கொண்டிருந்தபோதுதான் என் தந்தையின் வாழ்கையில் பெரியதொரு சோதனை ஏற்பட்டது அதுவே வியாபாரத்தில் ஏற்பட்ட திடீர் நஸ்டம் இதனால் அதிகளவு கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது தொடர்ந்து வாங்கிய கடனினால் கடன் சுமை தலைக்கு மேல் அதிகரிக்கவே என்ன செய்வதென்று தெரியாமல் உடைந்து போன நேரத்திலேதான் எல்லோருக்கும் புகலிடம் கிடைக்கும் அரேபிய தேசத்தில் என் தந்தைக்கும் கிடைத்தது வீட்டு சாரதி வேலை மூலமாக.
                                
                                தனியான வியாபாரத்தாபனம் நடத்தியவர் வீட்டு சாரதியாக் வேலைக்கு செல்வதா.... அந்த நேரத்தில் அவரது மனசு எவ்வளவு துடித்திருக்கும் அந்த இறைவனே அறிவான்.சந்தோசங்களை தொலைத்தவாரு குடும்பம் பிள்ளைகளை விட்டு முதல் முறையாக தாயகத்தை விட்டு கடல் தாண்டி புறப்பட்டார்.... அப்போது எனக்கு வயது நான்கு. ஒன்றல்ல இரன்றல்ல பத்து வருடங்கள் கடுமையான் கஸ்டத்துக்கு ம்த்தியில் பனிபுரிந்தார் தனிமைகளை மட்டும் துனையாக்கிக்கொண்டு.

                               பின் நாடு திரும்பி என் சகோதரியின் திருமணத்தை எடுத்த பின் மீண்டும் உழைக்க தொடங்கினார் எங்களின் நலனுக்காகவே.... ஓய்வெடுக்கும்படி நாங்கள் எவ்வளவுதான் வற்புறுத்தியும் கேட்க்வேயில்லை "15 வயசுலயிருந்து உழச்ச கை கால்கள வெச்சிட்டு எப்டி என்னால சும்மாயிருக்க முடியும்" என்றே சொல்வார். அவர் பட்ட கஸ்டங்கள் எங்களுக்கு வரக்கூடாது என்பதற்காக என்னையும் பிரபலமான் பாட்சாலையொன்றில் சேர்த்து செலவழித்து படிக்க வைத்தார்.

                              இவ்வாறு காலங்கள் ஓடிக்கொண்டிருக்கும் போதுதான் எனக்கும் அபு தாபியில் நல்லதொரு வேலை வாய்ப்பு கிடைத்தது.... அவரே விமான நிலையம் வரை வந்து கட்டித்தழுவி வழியனுப்பி வைத்தார் கண்னீரில் நனைந்த கண்களுடன்..... அதுவே எங்கள் கடைசி தழுவல் கடைசி சந்திப்பாயிருக்குமென நான் ஒரு போதும் நினைக்கவில்லை.

                                இங்கே வந்து 15 நாட்களிலேதான் அந்த துயரச்செய்தி காதுகளை எட்டியது திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் என் தந்தை இறந்து விட்டதாக.....  அப்போது சில நிமிடங்கள் நானும் இறந்தே பிறந்தேன் யாரிடம் சொல்லி என்ன லாபம் தனிமையிலேயே அழுதேன் என்ன செய்வது நானே அழுது நானே என்னை தேற்றிக்கொண்டேன். ஒண்றிருக்கும் போது அதன் அருமையோ பெருமையோ யாருக்கும் புரிவதில்லை அது இல்லாம்ல் போகும் போதுதான் அதன் அருமையும் வலியும் அப்போது புரிந்தது எனக்கு.

                                  சில நேரங்களில் பாசத்தை உள்ளே வைத்துக்கொண்டு வெளியே கொஞ்சம் கடுமையாகவே நடந்துகொள்வார் அவ்வாறான பொழுதுகளில் நான் அவருடன் முரண்பட்டுக்கொண்டதுமுண்டு அவ்வாறான் பொழுதுகளில் அவரின் மனதை புன் படுத்திவிட்டோமோ என்ற நினைப்பு என்னை சஞ்சலப்படுத்திக்கொண்டேயிருக்கிறது. அவர் எங்களை விட்டுப்பிரிந்து ஐந்து மாதங்கள் கழிந்தபோதும் அவரின் ஞாபகங்கள் மனதோடு இன்னும் ஈரமாகவே.... சில சமயங்களில் கண்னீரையும் வரவழைக்கிறது.....

                                  அதன் பாதிப்பாகவே இந்த பதிவும் ஆகவே எனது இந்த முதல் பதிவு என் தந்தைக்கே சம்ர்ப்பணமாகட்டும்.....


அன்புட்ன்,,

ரியாஸ்


8 comments:

ஹாய் அரும்பாவூர் said...

அன்பின் ரியாஸ் அவர்களுக்கு
இதை ஒரு பதிவு என்பதை விட உங்கள் மனதில் உள்ள துக்கத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டடிர்கள்
நிச்சயம் உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாது
கடவுள் உங்களுக்கு நல்ல தைரியத்தை கொடுக்கட்டும்

உங்கள் முதல் பதிவிற்கு வாழ்த்து சொல்ல முடியாது
சகோதரனாக உங்கள் துக்கத்தில் பங்கு பெறுகிறேன்
வருத்தத்துடன் உங்கள் சகோதரன்

Riyas said...

மிக்க மகிழ்ச்சி சகோதரா...

ரியாஸ்

இராகவன் நைஜிரியா said...

தங்களின் முதல் இடுகை கண்ணீரை வரவழைத்துவிட்டது நண்பரே.

தந்தையின் பிரிவு - எப்போதும் மறக்க இயலாதது.

எல்லாம் வல்ல கருணை கொண்ட ஆண்டவன் உங்களுக்கு மன நிம்மதியை அருளுவாராக.

// தமிழ் யுனிகோடு தெரியாமல் ஒவ்வொரு எழுத்தாக தேடி எழுதிக்கொண்டிருக்கிறேன்.//

நண்பரே இதற்கு சரியான தீர்வு - NHM writer.

கீழ் கண்ட லிங்கில் இருந்து டவுன் லோடு செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யுங்க.. தமிழில் தட்டச்சுவது சுலபமாகிவிடும்..

software.nhm.in/products/writer

இராகவன் நைஜிரியா said...

விட்ஜெட்டில் ஃபாலோயர் விட்ஜெட் சேர்த்துவிடுங்க.

இந்த வேர்ட் வெரிபிகேஷனை எடுத்துடுங்க.

பின்னூட்டம் போடும் போது வேர்ட் வெரிபிகேஷன் கொஞ்சம் லொள்ளு. அதான்.

இருமேனிமுபாரக் said...

அன்புச் சகோதரர் ரியாஸ் அவர்களுக்கு....
உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது.ஆறு பிள்ளைகளுக்குத் தந்தையானாலும் என் மீது தனிப்பாசம் கொண்ட என் தந்தை தன் கடைசி நாட்களில் அய்ந்து பிள்ளைகளையும் அருகில் வைத்துக் கொண்டு, என் பிள்ளை எங்கே? என் பிள்ளை எங்கே? என்று கதறியதையும்,கடைசிவரை தந்தையின் முகத்தைப் பார்க்க இயலாமல் போன சோகத்தையும் எண்ணி இன்றும் கதறி அழுவது எனக்கு மட்டும் என்று நினைக்க வில்லை. வாழ்கையில் தோற்றுப் போய் விடக்கூடாது எனும் பயத்தில் அல்லது வேறு வழியின்றி வெளிநாட்டு சம்பாத்தியத்தை நாடி வந்த எண்ணற்ற தமிழர்களில் நீங்களும் நானும் ஒருவரே! இன்னும் வெளியில் சொல்லாமல் அழுது கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் சகோதரர்களுக்கும் இருக்கலாம். அவர்களுக்கும் சேர்த்து உங்களின் இடுகை அர்ப்பணம்.

Riyas said...

இராகவன் அவர்களே உங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி....

ரியாஸ்,

அரபுத்தமிழன் said...

சகோ ரியாஸ், திரு மாதவராஜ் அவர்களின் அறிமுகம் மூலம் இங்கு வந்தேன்.
அனைத்தையும் அவசர கதியில் படித்து வந்த நான் உங்களின் இந்த 'சமர்ப்பணம்' இடுகையில் மனம் ஸ்தம்பித்து ஒட்டிக் கொண்டது.அருமை.
நானும் அபுதாபிதான் (முஸப்பா).

ஜெய்லானி said...

:-(

Related Posts Plugin for WordPress, Blogger...