சிரிக்காதே...!




இனிமேலும்
பொது இடங்களில்
சிரிக்காதே
பெண்னே...
பாவம்
எத்தனை முறைதான்
ஏமாந்து போவான்.
தெருவோர
குருட்டுப்பிச்சைக்காரன்.
சிந்தியது
அவன் சில்லறைகள்
என நினைத்து...!

9 comments:

Riyas said...

ரொம்ப நன்றி ஸாதிகா அக்கா.. தெரிவித்தமைக்கு.
இப்போது comment option சரி செய்துள்ளேன்..

ஸாதிகா said...

//அவன் சில்லறைகள்
என நினைத்து...!
// அப்ப பெண்களின் சிரிப்பு சில்லறைகள் என்கின்றீர்கள் ரியாஸ் அப்படித்தானே?:-)(சும்மா தமாஷ்)கவிதையில் மெருகு கூடிக்கொண்டே போகின்றது.சூப்பர்.

jillthanni said...

நல்லா சொன்னீங்க
சில்லரைய சிதற விடாம இருந்தா சரி :)))

Unknown said...

good

அன்புடன் நான் said...

கவிதை மிக அழகு. பாராட்டுக்கள்.

Asiya Omar said...

நல்ல சிந்தனையுள்ள கவிதை.அருமை.

எம் அப்துல் காதர் said...

அன்பு ரியாஸ்,

கவிதை அருமை!

உங்கள் வீட்டில் காலடி வைக்கு முன்னரே என்னை அள்ளிகொண்டீர்கள். மனம் துள்ளிக் குதிக்கிறது நண்பரே! பெண்களைப் பற்றிய வர்ணனைக் கவிதைகள் படிக்கப் படிக்க திகட்டாது. ஏனெனில் பெண்களே ஒரு கவிதை தானே! கவிதைக்கு கவிதையால் அலங்கரித்து விட்டீர்கள்! வாழ்த்துகள்!

Jaleela Kamal said...

நல்ல கவிதை

goma said...

...சில்லரையும் சிரிப்பும் பார்வை இழந்தவனின் ஏமாற்றமும் ,இணைந்து விழுந்தது ஒரு கவிதை.அருமை

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...