மத்திய கிழக்கு நாடுகளில் இது கோடை காலம். வெயிலோ வெயில். அவ்வாறானதொரு வெயில். கொள்ளை வெயில் என்று சொல்வது இதைத்தானோ. அவ்வாறானதொரு உஷ்ன நிலை, வெப்பம்,வெட்கை,வேர்வை இதுதான் தொடக்கம் வருகின்ற மாதங்களில் இன்னும் அதிகரிக்கும் என சொல்கிறார்கள். நினைக்கவே கொஞ்சம் சுடுகிறது மனசு.எனக்கு மத்திய கிழக்கு முதல் அனுபவம் என்பதால் சமாளிப்பது கொஞ்சம் கடினமாகவேயிருக்கிறது..
அபுதாபி முசாபாவில் குளிரூட்டப்பட்ட அலுவலகத்தில் வேலை செய்யும் நான். தங்குமிடம் அபுதாபியில் இருக்கிறது. அவையிரண்டுக்கும் போய் வருகின்ற வேளையிலும் அவ்வப்போது வெளியில் செல்கின்ற போதும் இவ்வாறான வெயில் உணரப்படுகின்றதென்றால். காலையிலிருந்து மாலை வரை வெயிலிலே வேலைசெய்யும் கட்டிடங்கள் கட்டுமானங்கள் கட்டும் தொழிலாளர்கள், பாதை செப்பனிடுபவர்கள், தோட்ட வேலை செய்பவர்கள், குப்பை சேகரிக்கும் தொழிலாளர்கள் இன்னும் எத்தனையோ வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அவர்களின் நிலையை எண்ணிப்பார்க்கும் போது உண்மையிலேயே பாவம் அவர்கள்.
அவர்கள் உலகில் எந்த தேசமாகவும் இருக்கலாம்.. எல்லோரும் மனிதர்கள்
என்ற அடிப்படையில் மனிதநேயத்தோடு நோக்கலாம் அல்லவா. அவர்களுக்கு எங்களால் என்ன செய்ய முடியும். இவ்வாறு அவர்களைப்பற்றி கொஞ்சம் சிந்திப்பது மனம் வருந்துவதைத்தவிர.. நாம் கடந்து செல்லும் பாதைகளில் இவ்வாறான எத்தனையோ மனிதர்களை நாம் தினமும் கடந்து செல்கிறோம்.
வறுமையின் காரனமாக சொந்த நாடுகளை விட்டு வந்து இங்கே வெயிலோடும் வியர்வையோடும் போராடுகிறார்கள்.. இவர்கள், இங்கே இவர்கள் கஷ்டப்பட்டு உழைத்தால்தான் அங்கே அவர்களின் மனைவி பிள்ளை குட்டிகள் நிம்மதியாக மூண்று வேளை சாப்பிடுவார்கள். இப்போதெல்லாம் குழாயிலிருந்து வெளிவரும் நீர் சுடு கொதிக்கும் சுடு நீராகவே வருகிறது அது இன்னுமொரு கொடுமை இங்கே. அதிகமான கட்டிடங்களில் கூலர்/ஹீட்டர் வசதியில்லை.
அபுதாபியில் இன்னுமொரு கஷ்டநிலை bed space என்ற வரையரைக்குள் இரட்டை கட்டில்களில் வாழவேண்டியிருப்பது ஒரு அறையில் எட்டு, பத்து, பனிரெண்டு பேர் கூட தங்கவேண்டிய நிலை.. "ஆடிஅடங்கும் வாழ்கையடா ஆறடி நிலமே சொந்தமடா" என்ற பழைய பாடல் இங்கேயும் ரொம்ப பொருந்தும் அதுவும் ஆறடி இடத்தில் மேல் ஒருவர் கீழ் ஒருவர்..
யாசர் என்ற எனது நண்பநொருவன். 'உன் பிளாக்கில் எதையோயெல்லாம் எழுதுகிறாய் இவர்களை பற்றியும் கொஞ்சம் எழுது' என்று சொன்னான் அந்த நண்பனுக்கு எனது நன்றிகள். எனக்கும் சந்தோஷம் இவ்வாறான மக்களின் வாழ்கையைப்பற்றிச்சொல்ல எனது பிளாக் பயன்பட்டதை நினைத்து..
நீங்களும் ஏதாவது சொல்லுங்கள் இதைப்பற்றி..

23 comments:
இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்,முஸாஃபா வில் உள்ள லேபர் கேம்ப் அங்கு அவர்களோட வாழ்க்கை முறை என்று,நானும் அவர்களை பார்த்து சங்கடப்பட்ட நாட்கள் எத்தனையோ.
நன்றி ஆசியாக்கா..
இன்னும் எழுதியிருக்கலாம்.. வாசிப்பவர்களுக்கு இலகுவாக்க சுருக்கிக்கொண்டேன். நன்றி
இங்கே வெறும் பத்தாயிரம் முதலீட்டில் சாலை ஓரம் ஒரு இட்லி கடை போட்டால் மாலையில் நான்கு மணிநேரம் மட்டும் வியாபாரம் செய்தால் போதும் தினமும் ஆயிரம் ரூபாய் கிடைக்கும்..
வெளிநாட்டு ஆசைக்கு மூட்டை கட்டுங்கள் நண்பர்களே.
பாவம் , என்ன சொல்றதுன்னே தெரியல...!!!
ரொம்பவும் மனதை நெகிழ வைத்த கட்டுரை இது!
நன்றி..
ஜெய்லானி
கே.ஆர்.பி.செந்தில்
ஆரண்யநிவாஸ்
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.
வலையுலகில் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்
புதிய பதிவில் கமெண்ட் ஆஃப்ஷனே இல்லை.சரி செய்யவும்.
மிக்க நன்றி ஸாதிகா அக்கா உங்கள் உதவி மறக்கமுடியாதது.. இப்போது சரி செய்துள்ளேன்.
வெளிநாட்டு வாழ்க்கையே கஷ்டமான ஒன்று.
கோடை காலங்களில் 12 இல் இருந்து 4 மணி வரை வேலை செய்யக்கூடாது என்ற தடை இருக்குமே?அபுதாபியில் கிடையாதா?
அங்கேயும் பெட் ஸ்பேஸ் கொடுமை இருக்கா?நிறுவனங்களே தங்கும் இடத்தை கொடுக்க நிர்பந்திக்கப்படவேண்டும்.
நன்றி ஸ்டார்ஜன் வருகைக்கும் கருத்திற்கும்..
நன்றி வடுவூர் குமார்..
கோடை காலங்களில் 12 முதல் 3 மணிவரை கட்டாய ஓய்வு வழங்கவேண்டுமென சொல்லப்பட்டிருப்பதாக அறிந்தேன்.. பெட் ஸபேஸ் கொடுமை இங்கேதான் அதிகம் என நினைக்கிறேன்..
காலை வெயிலே கொளுத்துகிறது. இறைவன் இவர்களுக்காகவாவது கருணை புரிய வேண்டும். மதிய இடைவேளை (12.30-3.00) இந்த வருடம் மூன்று மாதங்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். உச்சி வெயிலிலிருந்து கொஞ்சம் விடுதலை.
மனித நேய பதிவுங்க....
இந்த கொடுமை மற்றவர்களுக்கு புரியமாட்டேன் எங்கிறது... உனக்கென்ன.... நீ வெளிநாட்டி வேலை செய்கிறாய் என்பார்கள்....
நண்பர்களே!
இது போன்ற சூழ்நிலையில் நாங்கள் ஒரு வருடம் வேலை செய்தால் எங்களின் ஆயுளில் இரண்டு வருடம் தேய்மானம் என்று பொருள்.
பகிர்வுக்கு நன்றிங்க.
நன்றி ஹுஸைனம்மா வருகைக்கும் கருத்திற்கும்..
நன்றி சி.கருணாகரசு
//இந்த கொடுமை மற்றவர்களுக்கு புரியமாட்டேன் எங்கிறது... உனக்கென்ன.... நீ வெளிநாட்டி வேலை செய்கிறாய் என்பார்கள்....
நண்பர்களே!
இது போன்ற சூழ்நிலையில் நாங்கள் ஒரு வருடம் வேலை செய்தால் எங்களின் ஆயுளில் இரண்டு வருடம் தேய்மானம் என்று பொருள்.//
மிகச்சரியாக சொன்னீர்கள்
நாங்கள்லாம் இந்தநெருப்புக்கு பலகிட்டோம் சார் குடும்பம் இருக்கே.
எங்க புள்ளைகலாவது படிச்சிப்பெரியாளாகட்டும்
இன்ஸா அல்லாஹ்
Thanks Rajavamsam..
//அபுதாபி முசாபாவில் குளிரூட்டப்பட்ட அலுவலகத்தில் வேலை செய்யும் நான். தங்குமிடம் அபுதாபியில் இருக்கிறது. அவையிரண்டுக்கும் போய் வருகின்ற வேளையிலும் அவ்வப்போது வெளியில் செல்கின்ற போதும் இவ்வாறான வெயில் உணரப்படுகின்றதென்றால். காலையிலிருந்து மாலை வரை வெயிலிலே வேலைசெய்யும் கட்டிடங்கள் கட்டுமானங்கள் கட்டும் தொழிலாளர்கள், பாதை செப்பனிடுபவர்கள், தோட்ட வேலை செய்பவர்கள், குப்பை சேகரிக்கும் தொழிலாளர்கள் இன்னும் எத்தனையோ வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அவர்களின் நிலையை எண்ணிப்பார்க்கும் போது உண்மையிலேயே பாவம் அவர்கள்./
இவர்கள் உண்மையிலேயே ரொமப் பாவம்
நானும் போட்டோ எடுத்து வைத்துள்ளேன் பதிவிற்கு.
கொஞ்சம் நேரம் தான் வெளியில் அதோடு உள்ளே நுழைந்தால் ஏசி அதற்கு தொண்டை வற்றி போய் ஒரு மாதிரியா மயக்கம் வருது.
இவர்கள் வேலையே வெளியில் எபப்டி இருக்கும்
தினம் தினம் நினைக்கீறென்.
//இந்த கொடுமை மற்றவர்களுக்கு புரியமாட்டேன் எங்கிறது... உனக்கென்ன.... நீ வெளிநாட்டி வேலை செய்கிறாய் என்பார்கள்....
நண்பர்களே//
இது மட்டுமா? பணத்தையும் அல்லவா கரக்கிறார்கள்
சைக்கிளில் சாமான் கொண்டு கொடுக்கும் குராசரி காரர், அப்ப அவன் வீட்டு கல்யான பெண்ணுக்கு நாம் கூட அவ்வள்வுசெய்யமாட்டோம், அவன் தூங்குவான என்று கூட தெரியல..
காலை 7 ம்ணியிலிருந்து இரவு 12 வரை, எப்படி தான் சுற்று கீறானோ.
என் தம்பி அங்கு ரோட் வொர்க் இஞ்சினியாராக இருந்தான் இரண்டு வருடம். ஜீன்ஸ் பேண்ட் தொப்பலாக நனைந்து விடும்.ஒன் பாத்ரூம் வரவே வராது.அதிகம் வேர்ப்பதால்.திடீரென்று பணியாளர்கள் அப்படியே தொப் என்று மயங்கி விழுவார்கள்.காலையிலேயே பக்கெட்டில் தண்ணீர் பாத்ரூமில் பிடித்து வைத்து வருவார்களாம்.டேங்க் தண்ணீர் சூடாக இருக்குமாம்.நிறைய சொல்லுவான்.அந்த வெயில் பற்றி தெரியாமல் போய் சிக்கி கொள்பவர்கள் தான் அதிகம்.மூன்று மாதங்கள் அந்த வேலைகளை நிறுத்தி வைக்கலாம்.அவர்களுக்கு நஷ்டம் இல்லை.சம்பளம் இல்லாமல் பணியாளர்கள் தான் கஷ்டப்படுவார்கள்.தீர்வே இல்லை..இதற்கு..
ரியாஸ் பாய்...
மிக மிக நன்றாக எழுதி உள்ளீர்கள்... அதுவும் உங்கள் தோழர் யாசர் என்பவர் பேச்சுக்கு மதிப்பளித்து... வாழ்த்துக்கள்...
//அபுதாபியில் இன்னுமொரு கஷ்டநிலை bed space என்ற வரையரைக்குள் இரட்டை கட்டில்களில் வாழவேண்டியிருப்பது ஒரு அறையில் எட்டு, பத்து, பனிரெண்டு பேர் கூட தங்கவேண்டிய நிலை..//
இது அபுதாபி மட்டுமன்றி, எல்லா ஊர்களின் பொதுவான நிலை தான்...
இப்போதுதான் ஜலீலாக்க பதிவு படித்தேன்.
வெளி வேலை செய்பவர்கள்தான் இதில் அதிகம் பாதிப்படைகிறார்கள்.
பகிர்வுக்கு நன்றி ரியாஸ்.
I came to USA for more than 25 years back and ever since living with all the comforts. During 2009 / 2010, I was visiting Abu Dhabi on a regular basis for Project related work. I used to feel terrible and very sad seeing the people working in open spaces and in such unbearable heat. Whenever I was driving to Dubai and back on Thursdays / Fridays weekends, I made it a point to accommodate in my car as many people who had restricted means. On one such occasion, I was invited to a 'shack' shared by friends from Tamil Nadu...I couldn't sleep for weeks seeing the conditions they were living and the sacrifices they were making for their respective family. I don't know the relatives in India realize this.
Post a Comment