மறக்கமுடியாதவர்கள்...!

நம் அன்றாட வாழ்வில் நடைபெரும் சில திடீர் சுவாரஸ்யமான சம்பவங்கள் மற்றும் அதனுடன் சம்பந்தபடுபவர்களை வாழ்கையில் எப்போதும் மறக்கமுடியாமல் இருக்கும். அவ்வாறானவர்களுக்கு "நன்றி" என்ற ஒரு வார்த்தையை மட்டும் பரிசளிப்பது போதுமானதாக தெரியவில்லை எனக்கு.. அவ்வாறானவர்களுக்காகவே இந்தப்பதிவு


எனது வாழ்கையில் நிறைய பேரை மறக்கமுடியவில்லையாகினும்

குறித்த சிலரை மட்டும் இங்கே தருகிறேன் ஏனையவர்கள் எதிர்கால பதிவுகளில் வருவார்கள்.

# ஒரு பாகிஸ்தானிய பெரியவர்..

ஒரு மாதத்திற்கு முன் அபுதாபி TCA ஏரியாவில் பிற்பகல் 2.30 மணியளவில் வேலைக்குச்செல்வதற்காய் வண்டி வரும் வரையில் ஓர் ரெஸ்டோரண்ட் பக்கத்தில் நிண்றுகொண்டிந்த வேளை பசி கலந்த தாகம் ஏற்படவே உள்ளே சென்று ஏதாவது சாப்பிடுவோமா என்ற எண்ணத்தில் அங்கிருந்த உணவுகளை நோட்டமிட்டேன். அது எதுவும் எனக்கு சரி வராததால் தண்ணி மட்டும் குடித்துவிட்டு வெளியே வந்து நின்று கொண்டேன். அப்போது அதையெல்லாம் அவதானித்த ஒரு பாகிஸ்தானிய பெரியவர் அருகே வந்து. "என்ன பிரச்சினை காசில்லயா.. வா நான் வாங்கித்தரேன் ஏ.. தண்ணிய மட்டும் குடிச்சுட்டு வந்தாய்.. காசில்லாட்டி சொல்லு நான் வாங்கித்தரேன்" என்றார் அப்போது என் மனது அடைந்த பூரிப்பு வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. அப்போது நினைத்துக்கொண்டேன் மனிதநேயம் இன்னும் சாகவில்லை இப்படியான நல்ல மனிதர்களும் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று.. அந்தப்பெரியவரையும் என்னால் மறக்கவே முடியாது. நான் அவரை பார்த்தது முதலும் கடைசியுமாக அப்போதே..

# சம்பிக சந்தகெலும்..( என் நண்பன்) ஒரு சிங்கள இளைஞன்.

ஒரு அற்புதமான குனம் படைத்தவன் இவன். இவனைப்போன்ற நல்ல குனம் படைத்த மனிசத்தனம் கொண்ட ஒருவனை இதுவரை நான் சந்தித்ததில்லை. பொதுவாக சிங்களவர்கள் நல்லவர்களில்லை
என்ற அதுவரை என்னில் பதிந்திருந்த எண்ணத்தை அவனைப்பார்த்தபிறகு மாற்றிக்கொண்டேன். எல்லோரும் அப்படியில்லை நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று.. நான் கொழும்புக்கு முதன் முதலாக வேலைக்கு வந்தபோது எனக்கு ஆதரவளித்தவன் இவனே. எனக்கு வாகனம் ஓட்ட கற்றுக்கொடுத்தவனும் இவனே. ஒரு நல்ல நண்பனுக்கு என்னவெல்லாம் நல்ல பண்புகள் இருக்கவேண்டுமோ அவை அனைத்தும் இவனிடம் நான் கண்டேன். இவனையும் என் வாழும் காலம் வரை மறக்கவே முடியாது...

# எஹியான்.. கணக்கியலாளர்

நான் சந்தித்தவர்களில் இவரும் ஓர் உண்ணதமான மனிதர். நான் பிறந்து வளர்ந்தது ஒரு பிந்தங்கிய கிராமத்தில் என்பதால்.. Advance level அதாவது பிளஸ் 2 வரையுமே படிக்க முடிந்தது. மேல் படிப்பை தொடர தகுதியிருந்தும் வசதியில்லாததனால் தொடர முடியவில்லை. படித்துவிட்டு வீட்டில் 2 வருடம் சும்மாவேயிருந்த நேரம்தான் இவர் மூலமாக கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் நல்லதொரு வேலை கிடைத்தது.. கிராமப்புற பகுதிகளிலிருந்து கொழும்புக்கு வேலை தேடி வருவதென்பது கடினமான விடயம்.. அவர் செய்த உதவியால் எனக்கு இலகுவாக அந்த வேலை கிடைத்தது.. 5 வருடங்கள் அந்த நிறுவனத்தில் வேலை செய்தேன், வாழ்க்கையே வெறுத்துப்போய் அலைந்த எனக்கு புது வாழ்க்கை கிடைத்த உணர்வு. ஒரு வேலைதான் சமுகத்தில் அவனுக்கான அடையாளம் என்பதையும் உணர்ந்து கொண்டேன். அவ்வேலையே என்னை இவ்வளவு தூரம் கொண்டுவந்தது... அதற்கு துனைபுரிந்த "எஹியான்" அவர்களுக்கு மரியாதை கலந்த நன்றிகள் என்றென்றும் உரித்தாகட்டும்..


# இராகவன் நைஜீரியா.. பதிவர்

நான் பிளாக் எழுத தொடங்கி முதலில் பதிந்தது என் தந்தையின் நினைவுகளைச்சுமந்த "சமர்ப்பணம்" என்ற இடுகை அந்த இடுகைகு இவர் எழுதிய பின்னூட்டங்களையும் இவரையும் மறக்கவே முடியாது.. அன்றிருந்து இன்றுவரை எனது பதிவுகளுக்கு வாழ்த்தும் ஊக்கமும் தருபவர்.
எனது முதல் இடுகைக்கு இவரின் பின்னூட்டம் இவ்வாறிருந்தது.

இராகவன் நைஜிரியா said...

தங்களின் முதல் இடுகை கண்ணீரை வரவழைத்துவிட்டது நண்பரே.

தந்தையின் பிரிவு - எப்போதும் மறக்க இயலாதது.
எல்லாம் வல்ல கருணை கொண்ட ஆண்டவன் உங்களுக்கு மன நிம்மதியை அருளுவாராக.

// தமிழ் யுனிகோடு தெரியாமல் ஒவ்வொரு எழுத்தாக தேடி எழுதிக்கொண்டிருக்கிறேன்.//

நண்பரே இதற்கு சரியான தீர்வு - NHM writer.
கீழ் கண்ட லிங்கில் இருந்து டவுன் லோடு செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யுங்க.. தமிழில் தட்டச்சுவது சுலபமாகிவிடும்..

software.nhm.in/products/writer

28 March, 2010 09:16


இராகவன் நைஜிரியா said...


விட்ஜெட்டில் ஃபாலோயர் விட்ஜெட் சேர்த்துவிடுங்க.

இந்த வேர்ட் வெரிபிகேஷனை எடுத்துடுங்க.

பின்னூட்டம் போடும் போது வேர்ட் வெரிபிகேஷன் கொஞ்சம் லொள்ளு. அதான்.

கொஞ்ச நாளாக இவரைக்கானவில்லையே என்று இவருக்கு மெயில் அனுப்பியபோது அவ்வளவு வேளைப்பளூவுக்கு மத்தியிலும் இவ்வாறு பதில் அனுப்பியிருந்தார்..


அன்பு நண்பர் ரியாஸ் அவர்களுக்கு

தங்களுடைய மெயிலுக்கு நன்றி. நான் எல்லா வலைப்பூக்களிலும் பின்னூட்டம் போட இஷ்டம்தான். ஆனால், கடந்த சில நாட்களாக இருந்த வேலைப் பளு காரணமாக, என்னால் அதிகமாக பின்னூட்டம் இட இயலாமல் போய்விடுகின்றது.

எப்போதாவது , சற்று ஓய்வு கிடைக்கும் போது வருவேன். எந்த வலைப்பூவின் இடுகை என்னுடைய டாஷ் போர்டில் இருக்கின்றதோ, அதில் ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு ஓடிவிடுகின்றேன்.

விரைவில் வேலைகள் சரியாகி, குறைந்துவிடும்.

உங்கள் வலைப்பூக்களுக்கு தவறாமல் வர முயற்சி செய்கின்றேன்.

என்றென்றும் அன்புடன்

இராகவன்

இவரையும் என்னால் மறக்கவே முடியவில்லை

"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதை அன்றே மறப்பது நன்று"

என்ற திருக்குறளை அதிகமாக நேசிக்கிறவன் நான்...

இவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

தொடரும் நன்றி நவிலல்...

12 comments:

Jaleela Kamal said...

உங்களுக்கு மறக்க முடியாதவர்கள். அனைவரை பற்றி எழுதியதும் ரொம்ப அருமை.
அதான் பிளாக் பெயரே நான் வாழும் உலகமா?

(நானும் பதிவு போட வரும் போது டாஷ் போர்டில் கண்ணில் படும் பதிவுகளுக்கு பதில் போடுவது)
இன்று உங்கள் பதிவு என் கண்ணில் பட்டது. முதல் பின்னூட்டம்.

வேலை வாங்கி கொடுத்த எஹியானை உலகில் நீங்கள் என்றுமே மறக்க முடியாது.

Riyas said...

ரொம்ப நன்றி ஜலிலா அக்கா..

//அதான் பிளாக் பெயரே நான் வாழும் உலகமா?//

அப்படியும் இருக்கலாம்..

நாடோடி said...

ந‌ல்ல‌ விச‌ய‌ம் ரியாஸ்... தொட‌ர்ந்து எழுதுங்க‌...

அஹமது இர்ஷாத் said...

Different Post...Good

இராகவன் நைஜிரியா said...

ஆஹா.. அண்ணே... என்னாது இது.. தங்கள் அன்புக்கு நன்றிகள் பல.

மனிதம் இறந்துவிடவில்லை.. அது வாழ்ந்து கொண்டு இருக்கின்றது என்பதற்கு தங்களின் இடுகை ஒரு உதாரணம்.

மீண்டும் நன்றிகள் பல.

என்றென்றும் அன்புடன்

Iyappan Krishnan said...

மனிதம் இறந்துவிடவில்லை.. அது வாழ்ந்து கொண்டு இருக்கின்றது என்பதற்கு தங்களின் இடுகை ஒரு உதாரணம்.

பரிசல்காரன் said...

பதிவர்களிலேயே சிறந்த பண்பாளர்களில் இராகவன் அவர்களும் ஒருவர்.

நல்ல இடுகை!

jillthanni said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே :)))

தங்கள் மனதை பிரதிபளித்த பதிவு இது

ஸாதிகா said...

அனுபவத்தை அழகுற பகிர்ந்தமைக்கு நன்றி.தொடருங்கள்.

அன்புடன் நான் said...

உங்க பகிர்வு அத்தனையும் வியக்க வைக்கிறது...

ஆமாம் நைஜீரியா ராகவனைத்தான் காணல.

பகிர்வுக்கு நன்றிங்க.

Btc Guider said...

அஸ்ஸலாமு அழைக்கும் Riyas

தமிழிஷில் பதிவிடமுடியவில்லை என்று கூற்றியுள்ளீர்கள்.பதிவிடும்போது என்ன செய்தி வருகின்றது என்று சொன்னால் என்னால் ஏதும் முடிகின்றதா என்று சொல்ல முடியும். googletalk மூலமாக தொடர்பு கொள்ளவும். globerah@gmail.com

M. Azard (ADrockz) said...

ரியாஸ் நானா .. கலக்குறீங்க, நல்ல பதிவு, நன்றி மறவாமைக்கு ஓர் உதாரணம் :)

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2