வாங்க சாப்பிடலாம்..!

வந்தன்ம் வந்தனம்... வந்த சனம் குந்தனும்...


விருந்தோம்பல் எங்கிறது இப்ப நம்ம ஊர்களிலேயே அருகிப்போகும் ஒரு விஷயமாகவே மாறிக்கொண்டு வருகிறது.. விருதோம்பல்னா என்னன்னு கேட்கிற ஆட்களும் இருக்குங்கோ.. அவங்களுக்கு விளங்கும்படி சொல்லனும்னா "அதாங்க ஊட்டுக்கு விருந்து துண்ன அழக்கிறதுங்கோ"


அதுதான் நம்ம சொந்த பந்தம் நண்பர்கள் எல்லாம் விருந்துக்கு அழைச்சிருக்கேன்.. வந்து ஜமாயிங்க..


எங்க ஊர்ல எல்லாம் சொல்லுவாங்க வீட்டுக்கு எதிரி வந்தாலும் உள்ள கூப்பிட்டு காப்பியோ டீயோ குடுக்கிறதுதான் நல்ல பண்புன்னு. காப்பி டீய சாப்பிட்டு முடிந்தபிறகு நாலு சாத்து சாத்தித்தான் அனுப்புவாங்க அத விடுங்க...

சரி எல்லாரும் வந்திருக்கிங்க முதல்ல ஏதாவது காப்பி டீ கூல்டிரிங்கஸ் சாப்பிடிரிங்களா...? என்னது நேரா விருந்துக்கு போய்டலாமா..

சரி வாங்க உட்காருங்க... அவசரப்படாதிங்க... அவசரப்படாதிங்க... எல்லோருக்கும் தாராளமா உண்டு...

"ஏலே... எல்லாரும் வந்து உடகாந்துட்டாங்க வந்து பரிமாறுலே.."

பொண்ண கூப்பிட்டாச்சு இப்ப வந்து பரிமாறுவா எல்லாரும் வயிறு நிறைய சாப்பிடுங்க..



"யோவ் தண்ணியில்லயா.."


"யோவ் இது அப்பிடி வீடில்லயா ஆச்சாரமான வீடுயா.."


"தாகத்துக்கு குடிக்கிற தண்ணிய கேட்டன்யா.."


"அ.. அதா.. நான் ஏதோ அந்த தண்ணின்னு நினச்சிட்டேன்"


"விருந்துக்கு கூப்பிட்டுட்டு இம்ச பண்றான்யா..."


உங்களுக்காக கஷ்டப்பட்டு நாலுவகை புரியானி.. செய்திருக்கு விரும்பினத எடுத்துக்குங்கோ....






பார்வைகளால் இலை விரித்தால்.....


புன்னகைகளால் பரிமாறினால்.....


வார்த்தைகளினால் பசியாறினார்கள்......



சரியா சரியா சாப்பிட்டாச்சா... சாப்பிட்டாச்சா..


ஆஹா இன்னும் இருக்குங்க உங்களுக்காக வடலப்பம் செய்திருக்கேன் அதையும் சாப்பிடுங்க..

நல்லபடியா சாப்பிட்டாசசா அப்புறம் கிளம்ப வேண்டியது.. "எனனது" பரிமறின பொண்ணு யாருன்னு தெரியனுமா... அதல்லாம் கேட்கப்படாது...
சரி வயிறு நிறைய சாப்பிட்டிங்கதானே.. அப்புடியே ஒரு ஓட்டு போடரது ஏதாவது திடட தோனிச்சனுனா பின்னூட்டத்துல திட்டிட்டு போறது..

13 comments:

ஜெய்லானி said...

பசி நேரத்தில ஏன் இந்த கொலவெறி ரியாஸ்....

Raghu said...

பிரியாணி வெச்சீங்க‌ ச‌ரி, சைட் டிஷ்லாம் எங்க‌ ரியாஸ்? :))

பனித்துளி சங்கர் said...

ஆஹா சாப்பிட கூப்பிட்டீங்களேனு வந்தேன் காசு எதுவும் கேக்க மாட்டீங்களே

அன்புடன் மலிக்கா said...

பிரமாதம் ரியாஸ் அப்படியே பார்சல் செய்து கேரியலில் அச்சோ கூரியரில் அனுப்பிவிடுங்க!

அப்படியே வந்து விருது கொடுத்துயிருக்கேன் வாங்கிக்கோங்க..http://niroodai.blogspot.com/2010/06/blog-post_02.html

Anonymous said...

ஐ! உங்க ஊரு ஸ்டைல் கருப்பட்டி வட்டலப்பம்! வாய் ஊருதே! :)) அந்த கித்துல் கருப்பட்டி இங்கல்லாம் கிடைக்காதாமே! நாங்கல்லாம் சீனியிலத்தான் செய்வோம், ருசி வேற மாதிரி இருக்கும்

கவி அழகன் said...

நல்ல "படைப்பு" வாழ்த்துக்கள்

Riyas said...

நாஸியா..

//ஐ! உங்க ஊரு ஸ்டைல் கருப்பட்டி வட்டலப்பம்! வாய் ஊருதே! :)) அந்த கித்துல் கருப்பட்டி இங்கல்லாம் கிடைக்காதாமே! நாங்கல்லாம் சீனியிலத்தான் செய்வோம், ருசி வேற மாதிரி இருக்கும்//

நாஸியா.. வட்டலப்பத்த பார்த்து ஓட்டு போட மறந்திட்டிங்களே..

Riyas said...

ரொம்ப நன்றிங்க.. விருந்துக்கு வந்ததற்கு
ஜெய்லானி
ரகு
பனித்துளி சங்கர்
அன்புடன் மலிக்கா
யாதவன்.

Asiya Omar said...

பிரியாணி,வட்லப்பம் அருமையாக இருக்கு,ரியாஸ்,உங்களுக்காக சன்சைன் விருது அன்போடு வழங்கி இருக்கிறேன்.,பெற்று கொள்ளவும்.

Unknown said...

படங்கள் நாவில் நீர் உறவைத்து விட்டன..
மேலும் உங்களுக்கு நன்றாக எழுத வருகிறது..

பாராட்டுகளும் வாழ்த்துகளும் ..

ஸாதிகா said...

பிரியாணி மேளாவா?நடக்கட்டும்..உங்க "பொண்ணு" பறிமாறிய பிரியாணியை ஒரு கட்டுகட்டிவிட்டு ஓட்டும் போட்டுவிட்டேன்.ரசிக்கும் படியாக உள்ளது இவ்விடுகை

Riyas said...

ரொம்ப நன்றிங்க.. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
கே.ஆர்.பி.செந்தில்

நன்றி.. ஸாதிகா அக்கா.உங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும்

Jaleela Kamal said...

ஆஹா யாருமே இப்படி ஒரே பந்தியில நாலு வகை பிரியாணி போட்டதில்லை ரியாஸ் தம்பி.
அதுவும் வட்லப்பத்துடன், நல்ல சாப்பாட்ட்சு, ரொமப் தேங்க்ஸு..

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...