தூரத்து வானில் விடியல்...!

அதிகாலயிலேயே... எழுந்த ஆப்தீன் இறைவனை வணங்கிவிட்டு மனைவியின் தேநீருக்காய் காத்திருந்தார்...


"இந்தாங்க தேத்தண்ணி....," மனைவியிடமிருந்து...

வெறும் தேநீர்தான் பாலோடு கலந்து பருகுமளவுக்கு வசதியில்லை ஆப்தீன் குடும்பத்துக்கு.

தேநீர் பருகிக்கொண்டே...! " கொஞ்ச நாளா கூலி வேல இல்லாம கையில காசுமில்ல... கடயில போய் கடனுக்கு கொஞ்சம் சாமான் கேட்டா.. ஏதோ பிச்ச கேட்கிறமாதிரி கேவலமா பாக்காங்க...


இடைநடுவே மனைவி... " அதாங்க எனக்கும் ஒன்னும் புரியல்ல சமைக்கிறதுக்கு கூட அரிசி பருப்புன்னு எதுவும் இல்ல... ரெண்டு புள்ளங்கலோட படிப்பு செலவுக்கும் காசு வேணும். இஸ்கூல்லயிருந்து பசியோடு வர்ற புள்ளங்களுக்கு சோத்த குடுக்காம நம்மட கஷ்டமெல்லாம் சொல்லிட்டிருக்கேளுமா... அதுங்களாயவது நல்லா படிக்க வெச்சாத்தான் நம்ம பட்ற கஷ்டம் நாளக்கி அதுங்க படாம நல்லாயிருக்குங்க..!"


தேநீர் கோப்பையுடன்... "முன்னெல்லாம் ஒவ்வொரு நாளும் கூலி வேல செய்தா எவ்வளவாவது காசு கையிலிருக்கும்.. இப்ப அதுக்கும் வழியில்ல. எல்லாத்துக்கும் மெசின் வந்திருச்சி.. நாத்து நட்றதிலிருந்து வேளான்மை அறுப்பு வரையும் எல்லாம் மெசின் போட்டுத்தான் செய்றாங்க.. அதால கூலி வேலக்கி யாரும் ஆட்கள் எடுக்கிறதில்ல.."

" இப்படி எல்லாத்துக்கும் மெசின் வந்துட்டா கூலி வேல செய்ற சனங்க கதி என்னாகுங்க" என்ற மனைவியின் கேள்விக்கு...



"எல்லாத்துக்கும் படைச்சவன் ஒரு வழிய வெச்சிருப்பான் பார்ப்போம்" என்ற பெருமூச்சுடன் தேநீரும் தீர்ந்தது புத்துணர்ச்சி மட்டும் எஞ்சியிருக்க...


'ஹஸினா....' 'என்னங்க....'


"எனக்கு ரொம்ப நாளா ஒரு யோசனயிருக்கு.." 'என்னங்க அது'


"இந்த கூலி வேலய நம்பியிருக்காம ஏதாவது கைத்தொழில் தொடங்கினா எப்டி..."

'அதுக்கு காசுக்கு எங்கங்க போறது'


"காசெல்லாம் தேவையேயில்ல ஹஸினா... நம்மட உடல் உழப்பிருக்கு, தோட்டத்துல மண் தண்ணியிருக்கு, காட்டுக்கு போனா விறகு இருக்கு. இதெல்லாம் வெச்சி தோட்டத்துலயே செங்கள் செய்து வித்தா நாலு காசு கெடக்கிம்தானே.."


'நல்ல யோசனதாங்க... முயற்சி செய்யாமலே தோற்கிறத விட முயற்சி செய்தே தோற்கிறது.. வெற்றி பெறுவதை விட மேலுன்னு பெரியவங்க சொல்லுவாங்க... முயற்சி செய்துதான் பார்ப்போமே...'


"கட்டிடம் கட்றதுக்கு நம்ம ஊரு சனமெல்லாம் பக்கத்து ஊருக்குப்போய்த்தான் செங்கள் வாங்கிட்டு வர்றாங்க. நாமே செய்து வித்தா வாங்கமாட்டாங்களா என்ன...! நம்ம காதர் நானாகிட்ட செங்கள் செய்ற தட்டச்சு இருக்குன்னு சொன்னாரு நான் இப்பவே போய் வாங்கிட்டு வாறேன்.."

'இருங்க ரொட்டி சுட்டிருக்கேன் சம்பல் செய்து தர்றேன் சாப்பிட்டு போங்க" என்ற மனைவியின் குரலோடு.... தூரத்து வானில் விடியல் தெரிந்தது.......


இது எனது முதல் முயற்சி குறைகளைச்சுட்டிகாட்டுங்கள். தயது செய்து ஓட்டு போட மட்டும் மறவாதிர்கள்.. உங்கள் ஓட்டுகள்தான் நிறையபேரிடம் இதை கொண்டு போய் சேர்க்கும்..

8 comments:

Ahamed irshad said...

நல்லாயிருக்கு.. தொடருங்க..

கவி அழகன் said...

தேத்தண்ணி அருமை

jillthanni said...

நல்ல முயற்சி ரியாஸ்
கதை ஃப்ளோ நல்லாவே இருக்கு
ரசித்தேன்
முயற்சி திருவினையாக்கும்

jillthanni said...

நல்ல முயற்சி ரியாஸ்
கதை ஃப்ளோ நல்லாவே இருக்கு
ரசித்தேன்
முயற்சி திருவினையாக்கும்

S Maharajan said...

அருமை தொடருங்க..

ஜெய்லானி said...

கதை நல்லா இருக்கு கதாசிரியர் ரியாஸ் அவர்களே!!

எல் கே said...

arumai continuee

Asiya Omar said...

அருமையான கருத்துள்ள கதை.ரியாஸ்,பாராட்ட வார்தைகளே இல்லை.தொடர்ந்து எழுதுங்க,இன்ஷா அல்லாஹ்!

Kanguva Mannippu Song Lyrics

Mannippu Song Lyrics in Kanguva      Mannippu Song Lyrics in English Aaraaro Aariraro Aaraari Raaro Aaraaro Aariraro Aaro Aaro Aariraro Aara...