கடந்தகாலம்....!

தூக்கம்
கொள்ளையடிக்கப்பட்ட
இரவொன்றில்.
எனக்குப்பிடித்த
இருளோடும்
தனிமையோடும்
உறவாடிக்கொண்டிருந்தேன்...
எங்கெங்கோ சுற்றி
எதையோயெல்லாம்
எட்டிப்பிடித்த மனசு
திசைமாறிய காற்றாய்
திடீரென
பின்னோக்கி நகர்ந்தது
சில ஆண்டுகள்....
இதயப்பறவை
சிறகு முளைத்து
பறக்க தொடங்கிய காலமது
எல்லாமிருந்தும்
ஏதோவொரு வெறுமை
என்னுலகத்தில்...
ஏதோவொன்றை தொலைத்ததாய்
ஏக்கங்களும்
என்னுணர்வுகளும்..
அதிகம்
சிரித்ததில்லை நான்
சில காரணங்களுக்காய்...
வருந்தியிருக்கிறேன்
மனதோடு
பல காரணங்களுக்காய்...
காயங்கள் இல்லை
தோல்விகளும் இல்லை
வலிகள் மட்டும்
நெஞ்சோடு
தொடும் தூரத்திலிருந்தும்
தொடமுடியாதவொன்றுக்காய்...
தொலைந்தபின்னும்
தொலையவில்லை
ஏக்கங்கள்.
மழை வந்துபோன பின்னும்
தொடரும்
மேகங்கள் போல....
தேடல்கள்
தொடர்கிறது
காலம் கடந்தும்
கிடைக்கலாம்
என்ற நம்பிக்கையில்....!

(கற்பனையல்ல கடந்தகால நிஜம்)

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2