நிகழ்காலம்...!

திறந்தே கிடக்கிறது
மனசின் கதவு
வருவதும்
போவதுமாய்
எதிர்கால கனவுகளும்
இறந்தகால நிஜங்களும்
தவியாய் தவிக்கிறது
இவையிரண்டுக்கிடையில்
சிக்கிக்கொண்ட
நிகழ்காலம்....
தேவைகளும்
ஆசைகளும்
கனவுகளும்
பிறந்துவிட்டது கூடவே
கருவறையிலிருந்து
கால்வைத்தவுடன்...

இறந்தகால இழப்புகளும்
எதிர்கால எதிர்பார்ப்புகளும்
நினைவிலில்லாமல் செய்கிறது
நிகழ்காலத்தை...
சிலர்
நிகழ்காலத்தில்
வாழ்வதேயில்லை
என்கிறது ஒரு ரஷயகவிதை...
"நாளைய வாழ்வு இல்லை என்று
இன்றே வாழ்வது ஞாயமடா"
என்கிறார் 'வைரமுத்து'....
நிலையில்லை
இவ்வையகம்
நினைவில் கொண்டு
நிகழ்காலத்திலும்
வாழ்பபழகுவோம்....

9 comments:

Mohamed Faaique said...

நல்லாயிருக்கு.. ரியாஸ்...

நிகழ்காலத்தில்... said...

மிக்க மகிழ்ச்சி நண்பரே..

அருமையான கருத்து கவிதை வடிவில்..

ஜெய்லானி said...

ஓக்கே..ஓக்கே...!!

தூயவனின் அடிமை said...

அருமையான கவிதை ரியாஸ்.

ஹேமா said...

அத்தனை வரிகளுமே உண்மை ரியாஸ்.நிகழ்காலத்தில் இருந்துகோன்டே எதிர்காலத்தில் மிதப்பவர்கள்தான் நிறைய.

Chitra said...

இறந்தகால இழப்புகளும்
எதிர்கால எதிர்பார்ப்புகளும்
நினைவிலில்லாமல் செய்கிறது
நிகழ்காலத்தை...


.....பலரின் வாழ்க்கையில், இது உண்மையாகி இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

கருத்து கவிதை நல்லாயிருக்கு நண்பரே..

சுஜா செல்லப்பன் said...

நல்ல கவிதை..


இறந்தகால இழப்புகளும்
எதிர்கால எதிர்பார்ப்புகளும்
நினைவிலில்லாமல் செய்கிறது
நிகழ்காலத்தை...

உண்மை..அருமையான வரிகள்

செல்வா said...

//இறந்தகால இழப்புகளும்
எதிர்கால எதிர்பார்ப்புகளும்
நினைவிலில்லாமல் செய்கிறது
நிகழ்காலத்தை...//
அது உண்மைதாங்க ..
எப்படி நிகழ்காலத்தில் வாழ்வது ..
எதிர்கால கனவுகளிலேயே நமது நிகழ்காலம் கழிகிறது ..

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...