இன்றாவது வருமா...!

காற்றும் வீசியது
மேகங்களும் அலைந்தது
அங்கும் இங்குமாய்..
இன்றாவது
வருமா மழை..
ஏழை விவசாயியின்
ஏக்கங்கள்
வானத்தை அண்ணாந்து
பார்த்தபடி...
மழை வந்தால்
செழிக்கும்
பயிர்கள் மட்டுமல்ல
இவர்கள்
வாழ்வும்தான்...
வறண்ட பூமி
மேகம் தரும் மழை
கொஞ்சம் நம்பிக்கை
கடும் உழைப்பு
இதுதான் சொத்து
இவர்களின்....
உலகிற்கே
உணவு தருபவர்கள்
உண்பதோ
அரை வயிறு சோறுதான்...
இயற்கை கொஞ்சம்
இறங்கவில்லையானால்
ஒட்டிய வயிறுதான்.
தினமும் மனிதன்
புதியவனாகிறான்
புதுப்புது நுட்பங்களுடன்
இவர்கள் இன்னும்
ஆதிவாசிகளாய்
அதே வறுமையுடன்
இன்றாவது வருமா
மழை....!

16 comments:

Jey said...

கவிதையா எழுதி தள்ளுங்க...அப்புறம் எங்கள மாதிரி கவிதை புரியாதவங்க, பின்னூட்டம் போடலைனு சொல்லுங்க...., நல்லா இருங்கலே....

Jey said...

சென்னை வந்துட்டேன்....+1 சேந்துட்டேன்..., http://pattikattaan.blogspot.com/2010/08/1.html

வந்து படிங்க....

சௌந்தர் said...

நல்லா இருக்கு மழை வருமா ஒரு விவசாயி சொல்லும் சரியான கவிதை

VELU.G said...

நல்லாயிருக்குங்க

kavisiva said...

நல்லாருக்கு ரியாஸ். வான பார்த்த பூமி விவசாயியின் நிலையை கவிதையாய் சொல்லிட்டீங்க

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

விவசாயிக்கான வரிகள் அருமை

"மழை வருமென்று
வானம் பார்த்து காத்திருப்பது
பிழை இல்லை.."

ஹேமா said...

ரியாஸ்...கவிதையும் மழைக்காக ஏங்குது கவிதையும் !

Aathira mullai said...

//மழை வந்தால் செழிக்கும் பயிர் மட்டுமல்ல இவர்கள் வாழ்வும்//
நிதர்சனம்...வருகிறது மழையும் கவிதையும்..

ம.தி.சுதா said...

//...மேகம் தரும் மழை
கொஞ்சம் நம்பிக்கை
கடும் உழைப்பு
இதுதான் சொத்து...// அருமை நம்பிக்கை ஊட்டும் வரிகள்.

Unknown said...

அழகான அர்த்தமுள்ள கவிதை

ஜெய்லானி said...

வரும் ஆனா வராது ...வராது ஆனா வரும் ..!!

நாடோடி said...

க‌விதை ந‌ல்லா இருக்கு ரியாஸ்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

விவசாயியை போல மழைக்காக ஏங்குது கவிதையும் !

elamthenral said...

மிக அருமையாக இருக்கிறது... வாழ்த்துக்கள் ரியாஸ்...

தூயவனின் அடிமை said...

கவிதையால் விவசாயின் மனதை தொட்டுவிட்டிர்கள்

செல்வா said...

//புதியவனாகிறான்
புதுப்புது நுட்பங்களுடன்
இவர்கள் இன்னும்
ஆதிவாசிகளாய்
அதே வறுமையுடன்
இன்றாவது வருமா
மழை....///
கலக்கிட்டீங்க. ஆனா சில சமயம் அவுங்க மழை வேண்டாம்னு நினைப்பாங்க அப்ப மழை வந்திடும் ..1!

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...