தினமும் சாகிறார்கள்...!


வழிந்தோடுகிறது
நேற்று பெய்த மழை நீர்
வயல் வரப்புகளிலும்
ஏழை விவசாயிகள் முகங்களிலும்
பசுமையாக...
வாழ்க்கையே
வானத்து  மழையோடுதான்
வந்து பொழிந்தால்
வளம்பெறும் அவர்களுலகம்...
வறண்டு போகிறது
வயல்களும்
வயிறுகளும்
வர மறுக்கும் மழையினால்...
இயற்கையோடுதான் பிறப்பும்
இயற்கையோடுதான் வாழ்வும்
இயற்கையோடுதான் சாவும்
தினமும் சாகிறார்கள்
தினமும் வாழ்வதற்காய்....

இது வெறும் கற்பனை அல்ல.. எங்கள் ஊர் பகுதிகளில் வானத்து மழையை மாத்திரம் நம்பி விவசாயம் செய்யும் மக்களின் வாழ்க்கை....

சும்மா இதையும் கிளிக் பன்னிட்டுப்போங்க,,,, நண்பனின் வலைத்தளம்..
பழம் சாப்பிட ஆசையா
vote pls...

13 comments:

ஆமினா said...

//இயற்கையோடுதான் பிறப்பும்
இயற்கையோடுதான் வாழ்வும்
இயற்கையோடுதான் சாவும்
தினமும் சாகிறார்கள்
தினமும் வாழ்வதற்காய்....///
மனதை பாதித்த வரிகள்

அருமை

Shiva sky said...

சிறந்த பதிவு

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகிய கவிதை...

Unknown said...

அவ்வ்வ்வ் கவிதை!!!

Mohamed Faaique said...

சூப்பர் கவிதை கடைசி வரிகள் தூள்..
மனதை கொஞ்சம் உலுக்குகிறது...

N.H. Narasimma Prasad said...

நல்ல கவிதை...

சே.குமார் said...

உண்மைதான் நண்பா...
நானும் வானம் பார்த்த பூமியில் இருந்து வந்தவந்தான்.
நல்ல கவிதை.

Karthikeyan Rajendran said...

சொன்னது, அருமை

Unknown said...

மண்மணம் வீசும் கவிதை
அருமை
புலவர் சா இராமாநுசம்

பாலா said...

விவசாயிகளின் வாழ்க்கை எப்போதுமே இப்படித்தான். எங்கள் ஊரும் வானம் பார்த்த பூமிதான்.

Priya said...

நல்ல கவிதை!

அந்நியன் 2 said...

மக்கள் கஷ்ட்டங்களை கவிதை மூலமாக வெளியாக்கியமைக்கு நன்றி சகோ.

இளைஞர்கள் மத்தியிலும் படிக்கும் மாண்வர்கள் மத்தியிலும் இக்கவிதையினை எத்தி வைத்தால் பலன் கிடைக்கும்.

Jaleela Kamal said...

மிக அருமை

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...