பூ மரங்களில்லா சாலைகளில்
பூவாசம் என்ன அதிசயம்
பூக்கள் நடக்கிறதோ!
பூக்கூடை நடக்கிறதோ!
இல்லை.
பூக்காரி நடக்கிறாள்
பூக்கூடையுடன்...!
இரட்டைக்குழந்தையா நீ
வெட்கமும்
உன்னோடுதான் பிறந்ததா...!
நானும் அழகானவந்தான்
என் மனதை பறிக்கிறாய்
பூக்களுடன் சேர்த்து...!
உன்னைத்தீண்ட முடியாமல்
மண்னில் விழுந்து
மரணித்துப்போகிறது
மழைத்துளிகள்...!
நேற்றைய இரவு அழகானது
இன்று அவளில்லை
அழகில்லை..!
புன்னகை தேசத்திலா
நீ பிறந்தது
நான் பிறந்தது
புன்னகை தொலைந்த தேசத்தில்..!
சொல்லப்பட்டவை யாவும் பொய்
அது கவிதை
நான் கவிஞன்..!
டிஸ்கி: இண்ட்லி ஓட்டுப்பட்டை பெற முடியாமல் உள்ளது..எனக்கு உதவி செய்ய விரும்பினால் இண்ட்லி ஓட்டுப்பட்டை கோடிங்கை copy செய்து எனது கமெண்டில் paste செய்யுங்கள்,, லிங்க் தரவேண்டாம்,, நன்றி
நோயின்றி வாழ வேண்டுமா நீர் அருந்துங்கள்.
vote pls..
24 comments:
இன்ட்லியில் பெற முடியல பாஸ்! எனதுதளத்தில் Copy எடுத்தேன்!!
ஆனா HTML கோடிங்கை கமெண்ட்ல போட முடியல!
:-(
//உன்னைத்தீண்ட முடியாமல்
மண்னில் விழுந்து
மரணித்துப்போகிறது
மழைத்துளிகள்...!//
Super Boss!
அமர்க்களமான
அற்புதமான
அசத்தலான
அழகிய கவிதை நண்பா.
@ஜீ
உங்க முயற்சிக்கு நன்றி நண்பா.. என்னாலும் இண்ட்லியில் எடுக்க முடியல்ல பார்ப்போம்,,
முடிந்தால் எனது மெயிலுக்கு அனுப்புங்க,,
modirizi@gmail.com
//நானும் அழகானவந்தான்.....! ///
அப்படியே கொஞ்சம் தாடி வச்சுக்கோங்க. மதுர பாஷை கத்துக்கோங்க....
சீக்கிரமே உங்கள சத்யம் தியேட்டர் ஸ்க்ரீன்ல வந்து பாப்போம் :)
பூக்காரி நடக்கிறாள் மிக அருமை...
வணக்கம் ரியாஸ். என் ப்திவிர்க்கு வந்து கருத்து சொன்னதற்க்கு நன்றி.
உங்க கவிதை பூ மாதிரியே அழகாக உள்ளது.
நான் முன்னொரு காலத்தில் எழுதிய ”ஜாதிப்பூ” என்ற சிறுகதையின் ஆரம்பம்:
”பூக்களை விட அந்த பூக்காரி மிகவும் அழகு”
என்று வரும். அந்த ஞாபகம் வந்தது
நல்ல கவிதை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
http://www.vandhemadharam.com/2010/10/vote-button_08.html
இன்டிலி கோடிங் இங்கே இருக்கு ட்ரை பண்ணுங்கோ
//புன்னகை தேசத்திலா
நீ பிறந்தது
நான் பிறந்தது
புன்னகை தொலைந்த தேசத்தில்..!
/// ம்ம்..
கவிதை அழகு நண்பரே
கவிதை அருமை நண்பரே .
நடையும், வரிகளும் அருமை
நன்றி
பிளாக் பற்றிய பல்வேறு தகவல்களுக்கு பிளாக்கர் நண்பன் தளம் சென்று பார்க்கவும் http// bloggernanban.blogspot.com. உங்கள் கவிதை மிகவும் அருமை. html code paste ஆக மறுக்கிறது. ப்ளாக்கர் நண்பனில் உங்கள் பதிவை பிரபலமாக்குவது எப்படி பகுதி2ல் கோட் கிடைக்கும்
சிறந்த சிந்தனை நண்பரே ..
வாழ்த்துகள்
அழகு,அழகு!
@ஆமினா..
ஐய்யய்யோ கவிதைக்கு மட்டும்தான் இது.. உங்க கற்பனை சத்யம் தியேட்டர் வர பெயிட்டு ஹா ஹா
வருகைக்கு நன்றி
@கந்தசாமி,,
ரொம்ப நன்றிங்க உங்க உதவியுடன் வந்தேமாதரம் தளத்திலிருந்து கோடிங்கை எடுத்து இண்ட்லியை இனைத்துவிட்டேன்..
வருகைக்கு நன்றி
@வை.கோபாலகிருஷ்ணன்,,
உங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் ரொம்ப நன்றி சார்,,,
@பாலா
@Ramvi
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
@thalir
உங்கள் முதல் வருகைக்கும் தகவலுக்கும் ரொம்ப நன்றி
@MR
@சென்னை பித்தன்
@அரசன்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..
அவள்+வெட்கம் இரட்டைக் குழந்தைகளா.......அருமை ரியாஸ். நல்ல வரிகள்.
பொய்களைக் கோர்த்தாலும் பூக்காரி அழகிதான்.கவிஞன் மிக மிக அழகாயிருக்கிறான் !
//மண்னில் விழுந்து
மரணித்துப்போகிறது
மழைத்துளிகள்...!//
கவிதை வரிகள் மாரியாக பொழிகின்றன...நல்ல கவிதை
தங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்
கரேக்ட்டா வந்துடுங்க :)
http://kuttisuvarkkam.blogspot.com/2011/07/blog-post_22.html
Post a Comment