ஈழப் போராட்டமும் இனப்படுகொலைகளும்.!


இலங்கை எனும் அழகான சின்னத்தீவீல் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக நடந்த ஒரு கொடூர யுத்தம் இன்றும் பலரது மனங்களில் மாறாத வடுக்களாக வேதனை முற்களாக இன்னும் குத்திக்கொண்டே இருக்கிறது.
ஈழப்போராட்டத்தை பற்றி பல முறை எழுத முறபட்ட போதிலும் உலகமே வியந்து பார்த்த ஒரு போராட்டத்தை பற்றி எழுது எனக்கு என்ன தகுதியிருக்கிறது எனகென்ன அறிவிக்கிறது என்று சிந்தித்து அப்படியே விட்டிருக்கிறேன். இருந்தாலும் சில தயக்கங்களுடன் எழுத விளைகிறேன். ஓர் இலங்கையன் என்ற அடிப்படையில் யுத்தம் நடந்த காலப்பகுதியில் இலங்கையில் வாழ்ந்தவன் என்ற அடிப்படையில் பக்கச்சார்பற்றே பார்க்க விரும்புகிறேன்.இதில் பிழைகள் இருக்கலாம், உங்களுக்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம், உங்களுக்கு பிடிக்காமல் கூட போகலாம். இது என் மனதில் இருந்த கருத்துக்கள் மட்டுமே..




ஈழப்போராட்டம் எதற்காக உருவானது அதனை தூண்டிய காரணங்கள் என்ன.. எனக்குத்தெரிந்த வரையில் சிறுபான்மையாகிய தமிழர்களின்/தமிழ் இனத்தின் சுய உரிமை/சம உரிமை மறுக்கப்பட்டமையும் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதை தடுக்கும் சிங்களவர்களின் நடவடிக்கைகளுமே ஆகும். என் தந்தை என்னிடம் சில சிங்கள முதலாளிகளை(பணக்காரர்களை) சுட்டிக்காட்டி கூறுவார் "இவனெல்லாம் அந்தக்காலத்துல உண்பதற்கு வழியில்லாமல் இருந்தவனுகள் இன்றைக்கு இந்த நிலைமைக்கு காரணம் அப்பாவி தமிழர்களிடம் கொள்ளை அடித்த பணம்தான்.. என்று கூறுவார். உண்மைதான் 1980 களில் ஆரம்ப பகுதிகளில் யாழ்ப்பாணத்திலிருந்து எங்கள் ஊர்ப்பகுதிகளுக்கு வர்த்தக நோக்கில வரும் தமிழர்களிடம் கொள்ளையடிப்பதும். அதை கொடுக்க மறுப்பவர்களை கொன்றாவது பணத்தை சூறையாடுவதும் அன்றைய சிங்களவர்களின் வாடிக்கையாக இருந்திருக்கிறது. இவவாறான பல சம்பவங்களுமே இந்த போராட்டத்தை தூண்டியவை. சிங்களவர்களில் நல்லவர்களே இல்லையா என்று கேட்பவர்களுக்கு இருக்கிறார்கள் மிகக்குறைவானவர்கள்.. அதிகமானவர்களுக்கு மற்ற இனத்தவரை நசுக்கி,அடிமைப்படுத்தி தான் தன் இனம் மட்டும் வாழ் வேண்டும் என்ற எண்ணமே.. "இது பெளத்தர்களின் தேசம்" என பஸ் வண்டியின் பின்னால் எழுதப்பட்டுள்ள வாசகங்களே இவர்களின் மனநிலையை நன்றாக உணர்த்துகிறது.

இவ்வாறு உரிமையினை வென்றெடுப்பதற்க்காக ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகள் இயக்கமாக மாறி யுத்தமாக விஷ்வரூபம் எடுத்து தனி நாடாக பிரித்து கொடு என்ற நிலைக்குச்சென்றதே ஆயுதம் ஏந்த வேண்டி ஏற்பட்டதன் முதற்படி. தனியுரிமை சுயயுரிமை கேட்டவர்கள், தனி நாடு என்ற ஒன்று உருவானால்தான் அதை பெற முடியும் என புலிகள் இயக்கம் நம்பியது மட்டுமல்லாமல் மக்களையும் அதன் பக்கம் இழுத்தது. விரும்பியோ விரும்பாமலோ அதனுடன் இனைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மக்களுக்கு. ஜுலை கலவரம்,யாழ் நூலக எறிப்பு மற்றும் இன்னும் சில சமபவங்கள் தமிழர்கள் மனதில் அழியாத வடுவாக மாறி அதுவே பகையுனர்வாக பிரிவினைவாதமாக மாறியது.. இது அவர்களின் மனநிலையில் இருந்து பார்த்தால் நியாயமானதாகவும் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது நியாயமற்ற செயலாகவும் இதற்கு இது மட்டும்தான் தீர்வாக இருந்திருக்க முடியுமா..?வடக்கு கிழக்கு பகுதியை பிரித்து கேட்டார்கள் அப்போ ஏனைய பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் நிலை..? போன்ற கேள்விகள் தோன்றியது.  10 வீதத்திற்கும் குறைவான ஒரு சிறுபான்மையினருக்கு நாட்டின் பெரும் நிலப்பகுதியொன்றை பிரித்துக்கொடுக்க 80 வீதத்திற்கும் அதிகமான பெரும்பான்மை அரசு விரும்பவுமில்லை!

இதன் பிறகே புலிகள் அமைப்பின் பலிவாங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமானது.. ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின்/இனத்தின் கோபங்கள் விளைவுகளாக வெளிப்படும்போது அது குரூரமானதாகவும் வன்மம் நிறைந்ததாகவும் இருப்பதில் எந்த சநதேகமும் இல்லை. ஆனால் இங்கேயும் குரூரமானதாகவே இருந்தது புலிகள் அமைப்பின் நடவடிக்கைகள்.. இதன் எதிரொலியாக இரானுவமும் அதன் பங்கிங்கு தமிழ் பிரதேசங்களில் கோரத்தாண்டவம் ஆடியது.. பல அப்பாவி தமிழர்,குழந்தைகள்,பெண்கள் என பாகுபாடின்றி கொல்லப்பட்டனர்.. புலிகள் ஒருவரைக்கொன்றால் இரானுவனம் இருவரைக்கொன்றது. இரு சாராரும் யுத்த தர்மங்களை கடைபிடிக்க தவறியிருந்தனர்.இது போதாதென்று 1987 யில் அமைதிகாக்க வந்த இந்திய ரானுவம் செய்த அட்டூழியங்கள் கொஞ்சமல்ல என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். பல அப்பாவி பெண்களின் கற்பையும் சூறையாடி வாழ்க்கையை நாசப்படுத்தியிருக்கிறார்கள். அமைதி காக்க வந்து இருந்தவர்கள் அமைதியையும் கெடுத்திருக்கிறார்கள் இவர்கள். இதையே தற்போது அமெரிக்க ரானுவம் செய்து வருகிறது ஈராக்கிலும் ஆபகானிஸ்தானிலும். இதனாலயே எந்த நாட்டு ரானுவம் ஆனாலும் அவர்கள் முகத்தில் காறித்துப்ப நினைக்கிறது மனசு..

புலிகள் அமைப்பின் தற்கொலைத்தாக்குதல்களால் வடக்கு கிழக்கு மட்டுமல்ல முழு இலங்கையுமே யுத்த பிரதேசமாகவே கானப்பட்டது. பஸ் வண்டிகளுக்குள்,பொதுக்கூட்டங்களில்,கடைத்தெருக்களில் குண்டுகள் கணக்கின்றி வெடித்தன. இதனால் நூற்றுக்கனக்கானோர் கொல்லப்பட்டும் காயப்பட்டும் யுத்தக்களம் போல் காட்சியளித்தது. வெளியில் செல்வதற்கே மக்கள் பயப்பட்டனர். கொழும்பு போன்ற பிரதேசங்களுக்குச் சென்றால் திரும்பி உயிருடன் வீட்டிற்கு வருவதற்கு உத்தரவாதம் இல்லாமல் இருந்தது. இது தவிர எல்லைப்பகுதி கிராமங்களுக்குள் நுழைந்து பெண்கள்,குழந்தைகள் என்று பாராமல் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்பாவி விவசாயிகள் பலர் வயிற்றுப்பிழைப்புக்காக வேலை செய்து கொண்டிருக்கும் வேலையில் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கைகள் ஒவ்வொரு நாளும் இலங்கை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபட்டு சிங்கள மக்கள் மனதில் கோபத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தப்பட்டது. இன்றைய சனல் 4 வீடியோவை பார்த்ததும் எமக்கு எப்படி கோபம் வருகிறதோ அது போன்றே அன்றைய வீடியோக்களும் அவர்களுக்கு கோபத்தை ஊட்டியது. இதனால நல்லவர்களாக கருதப்பட்ட கொஞ்சம் சிங்களவர்கள் மனங்களும் மாறியது புலிகள் என்றாலே அது கொல்லப்படவேண்டியவர்கள் என்ற நிலையை தோற்றுவித்தது. இவர்கள் எவ்வளவு பகையுடன் இருந்தார்கள் என்பது இறுதி யுத்தத்தில் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோது முழு இலங்கை சிங்களவர்களுமே அதை ஒரு வாரத்திற்கு மேலாக கோலாகலமாக கொண்டாடியதே சான்று..

முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரை ஈழப்போராட்டம் நியாயமானதுதான் என்றாலும் அன்றைய புலிகளின் தேவையற்ற சில நடவடிக்கையால்  அதிருப்தியுடனே கானப்பட்டது.. காத்தாங்குடி சம்பவம் மற்றும் இரானுவத்திற்கு தகவல் கொடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மண்ணார் மாவட்டத்தின் பல ஊர்களின் மக்களும் இரவோடு இரவாக உடுத்த உடையுடன் துறத்தியடிக்கப்பட்ட சம்பவம்! இன்னும் சில.. அப்போது எனக்கு 7 வயதிருக்கும் திடிரெண்டு ஓர் நாள் காலையில் 5 பஸ் வண்டிகளில் மக்கள் வந்திறங்குகிறார்கள் எங்கள் ஊர் பாடசாலைக்கு. யாரெண்டு பார்த்தால் புலிகளால் துறத்தியடிக்கப்பட்ட அகதிகளாம்.. பெண்கள் கைகளில் கைக்குழந்தைகளுடனும், வயோதிபர்கள், வாலிபர்கள், வயசுப்பெண்கள் என கண்ணீருடன் வந்திறங்கிய காட்சி இன்னும் என் கண்களில் மறையாமல்.. அவர்களுக்கு எப்படி அந்த சம்பவம் மறந்திருக்க கூடும். அவர்களின் இயல்பான வாழ்க்கையை கட்டமைத்துக்கொள்ள எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் எவ்வளவு காலமானது என்பது அவர்களுக்கு தெரியும்.. இன்னும் அவர்கள் அகதிகள் என்ற அடைமொழியுடனே வாழ்கிறார்கள்..

இலங்கை அரசையும் இரானுவத்தையும் குறைத்து மதிப்பிட்டு விஷமமாக யோசிக்க மாட்டார்கள் என்றென்னினார்களா புலிகள்! அல்லது தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தியே சிங்கள இனத்தை அழித்துவிடலாம் என்றென்னினார்களா..? விளங்கவில்லை எனக்கு..ஆனால்  அரசு யோசிக்க தொடங்கியதன் முதற்கட்டம்தான் இறுதிக்கட்ட யுத்தத்தின் ஆரம்பம்.. இறுதி யுத்ததின் அழிவுகளும் உயிர்சேதங்களும் இழப்புகளும் அதிகமதிகம் தமிழ் மக்களுக்கே இதில் மறுப்பதற்க்கு ஒன்றுமில்லை.. முள்ளிவாய்க்கால் சம்பவம் மற்றும் பல்லாயிரக்கனக்கான மக்கள் சரியான உணவின்றி அடிப்படை வசதிகளின்றி பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என திறந்த வெளி முகாமில் சிறிய கூடாரங்களுக்குள் கண்ணீருடன் வாழ்ந்த சோகக்காட்சி மனதை கனக்க செய்தவை இதுபோல இனிமேலும் எந்த சமூகத்துக்கும் நடக்ககூடாது! முழு யுத்தத்தையும் எடுத்து நோக்கினால் அழிவுகளும் இழப்புகளும் எல்லோருக்குமே.! வடக்கு கிழக்கில் ஒவ்வொரு ஊர்களிலும் எப்படி இயக்கத்திற்காகவேண்டி தந்தையை பறிகொடுத்த பிள்ளைகளும் கனவனை பறி கொடுத்த மனைவியும் பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோரும் ஊனமுற்றவர்களும் இருக்கிறார்களோ அதுபோலவே ஒவ்வொரு சிங்கள ஊர்களிலும் இவ்வாறான காட்சிகளை கான முடியும்.. வலியும் வேதனைகளும் எல்லோருக்கும் ஒன்றுதானே..

நடந்தவற்றை பேசுவதிலோ கிளறுவதிலோ எவ்வித பலனும் கிடைக்கப்போவதில்லை.. இனியாவது மக்களுக்கு நல்லது நடக்க பிரார்த்திப்போம் முயற்சிப்போம் சகோதரர்களாய் ஒன்றினைவோம் ஒற்றுமைப்படுவோம்.. முல்வேலிகளுக்கும் முகாம்களுக்குள்ளும் மாட்டிக்கொண்டிருக்கும் எம் சகோதரர்கள் இயல்பு வாழ்க்கை வாழ உதவுவோம் ஒன்றுபடுவோம்..

 தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்..


20 comments:

ஹுஸைனம்மா said...

உங்கள் மனநிலை புரிகீறது. கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும். இனியேனும் நிலைமை சீராக இறைவனைப் பிரார்த்திப்போம். சில தமிழ் அமைப்பு உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றி பெற்றதாகச் செய்திகள் படித்தேன். நல்ல துவக்கமாக இருக்கட்டும், இன்ஷா அல்லாஹ்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

தங்கள் மீது ஸலாம் நிலவட்டுமாக சகோ.ரியாஸ்...

//இனியாவது மக்களுக்கு நல்லது நடக்க பிரார்த்திப்போம் முயற்சிப்போம் சகோதரர்களாய் ஒன்றினைவோம் ஒற்றுமைப்படுவோம்..//---உங்கள் கோணத்தில் மிகவும் நேர்மையாக உங்கள் உணர்வுகளை வெள்ளமாக கொட்டி இருக்கிறீர்கள், சகோ.

மிக உருக்கமான உன்னதமான கட்டுரை.

இதில், சில வாக்கியங்கள்...
என்னால் மறக்க இயலாதன...

//"இது பெளத்தர்களின் தேசம்" என பஸ் வண்டியின் பின்னால் எழுதப்பட்டுள்ள வாசகங்களே இவர்களின் மனநிலையை நன்றாக உணர்த்துகிறது.//

//...இதனாலயே எந்த நாட்டு ரானுவம் ஆனாலும் அவர்கள் முகத்தில் காறித்துப்ப நினைக்கிறது மனசு.//

//..யாரெண்டு பார்த்தால் புலிகளால் துறத்தியடிக்கப்பட்ட அகதிகளாம்...//

//இதுபோல இனிமேலும் எந்த சமூகத்துக்கும் நடக்ககூடாது!//

மிக நல்லதொரு கட்டுரை சகோ. நன்றி.

Unknown said...

ஈழப்போராட்டம் பற்றிய நிறைய தகவல்களை தொகுத்து சொல்லியிருக்கிறீர்கள்.. நன்றிகள்..

Riyas said...

@ஹுசைனம்மா..

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

Riyas said...

@முஹம்மது ஆஷீக்

உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி

Riyas said...

@பாரத் பாரதி

உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

Mohamed Faaique said...

2004இல் நடந்த யுத்த நிறுத்ததில் புலிகளுக்கு சாதகமாகவே இருந்தது. இருந்தும் சொந்த இலாபங்களுக்காக வேண்டி மூதூர் முஸ்லிம்ளின் தண்ணீரை தடை செய்து, மக்களை விரட்டியடித்து மீண்டும் போரை வாண்டட்`ஆக ஏற்படுத்தினார்கள். அதைப் பற்றி கவலைப்பட கூட சந்தர்ர்ப்பம் கிடைத்திருக்காது. அதற்குள்ளே எல்லாம் முடிந்துவிட்டது. கடைசியில் பாதுக்கப் பட்டது தமிழ் மக்க்ள்தான்...

நல்ல பதிவு நன்பா...

Anonymous said...

நல்லா எழுதி இருக்கீங்க...வாழ்த்துக்கள்

ஆமினா said...

அற்புதமான கட்டுரை....

இனியேனும் அமைதியாய் வாழ இறைவனை பிரார்த்திப்போம்....

மாய உலகம் said...

ஈழத்துப்போராட்டம் பற்றி நிறைய தகவல்கள் இந்த பதிவின் மூலம் அறிந்தேன்..நன்றி

baleno said...

ஈழப்போராட்டத்தை பற்றி பல முறை எழுத முறபட்ட போதிலும் உலகமே வியந்து பார்த்த ஒரு போராட்டத்தை பற்றி எழுது எனக்கு என்ன தகுதியிருக்கிறது எனகென்ன அறிவிக்கிறது என்று சிந்தித்து அப்படியே விட்டிருக்கிறேன்.

நீங்கள் முதலே தாராளமாக எழுதியிருக்கலாம். உலகமே வியந்து பார்த்த ஒரு போராட்டம், தோற்க முடியாத தமிழர் படை என்று நாங்கள் எங்களுக்கே காதில் பூ சுற்றி மகிழ்ந்தோம். ஆனால் உலகம் அதை brutal போராட்டமாகவே பார்த்தது. இறுதிக் கட்ட போரில் தனது பாதுகாப்பிற்க்காக பணயமாக பிடித்து வைத்திருந்த மக்களை புலிகள் வெளியேற அனுமதித்திருந்தால் பெருமளவு உயிர் இழப்புக்கள் தவிர்க்கபட்டிருக்கும்.

யாழ்ப்பாணத்திலிருந்து எங்கள் ஊர்ப்பகுதிகளுக்கு வர்த்தக நோக்கில வரும் தமிழர்களிடம் கொள்ளையடிப்பதும். அதை கொடுக்க மறுப்பவர்களை கொன்றாவது பணத்தை சூறையாடுவதும் அன்றைய சிங்களவர்களின் வாடிக்கையாக இருந்திருக்கிறது.

83 இனன கலவரத்தை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு இனத்தில் உள்ள சமுகவிரோதிகளும், இனவெறியர்களும் செய்யும் குற்ற செயல்களை ஒரு இனத்தின் வாடிக்கையாக என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.
http://www.youtube.com/watch?v=wV-W40Mjt40&feature=player_embedded

நிரூபன் said...

Sorry for my mobile comment. This is a good articale. I will post my comment in Tamil tomorrow

Riyas said...

@Baleno

//இறுதிக் கட்ட போரில் தனது பாதுகாப்பிற்க்காக பணயமாக பிடித்து வைத்திருந்த மக்களை புலிகள் வெளியேற அனுமதித்திருந்தால் பெருமளவு உயிர் இழப்புக்கள் தவிர்க்கபட்டிருக்கும்//

ஏற்றுக்கொள்ளக்கூடியதே.. குறைந்தபட்சம் பெண்கள் குழந்தைகளையாவது விட்டிருக்கலாம்..

//தோற்க முடியாத தமிழர் படை என்று நாங்கள் எங்களுக்கே காதில் பூ சுற்றி மகிழ்ந்தோம்//

தோறக முடியாத தமிழர் படை என்று நான் சொல்ல வரவில்லை இலங்கை அரசையும் ரானுவத்தையும் குறைத்து மதிப்பிட்டதுதான் தோல்வியின் ஆரம்பம் என்கிறேன்..

//83 இனன கலவரத்தை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு இனத்தில் உள்ள சமுகவிரோதிகளும், இனவெறியர்களும் செய்யும் குற்ற செயல்களை ஒரு இனத்தின் வாடிக்கையாக என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை//

ஆமாம் அப்போதைய காலகட்டம்தான்

எல்லா சிங்களவர்களும் இனவெறியர்கள் இல்லைதான்.. ஆனால் அதிகமான சிங்களவர்கள் இனவெறியர்களே அதையே நான் குறிப்பிட்டுள்ளேன்,,

சிங்களவர்களில் மிகவும் போற்றப்படக்கூடிய மனிதர்களும் இன்றை வரை இருக்கிறார்கள்..

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பரே

ஆகுலன் said...

உங்களது நடுநிலைமை கருத்துகள் நல்லா இருக்குது.............

சுதா SJ said...

நடு நிலைமையோடு எழுதி இருக்குறீர்கள் நண்பா.
என்னத்த சொல்ல....
"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.." என்று சொல்கிறீர்கள்
மறுக்கவா முடியும்.

நல்ல கட்டுரை, வாழ்த்துக்கள் நண்பா

சி.பி.செந்தில்குமார் said...

நடு நிலைமையுடம் நல்லதொரு அலசல்

காட்டான் said...

வாழ்த்துக்கள் காட்டானும் குழ போட்டான்யா...

வேகநரி said...

நல்ல கட்டுரை. பாராட்டுகள்.
விமர்சனம் செய்தவர்களை கொலை செய்த கூட்டம் அழிக்கபட்டதினால் இப்போ சுதந்திரமாக கட்டுரைகள் எழுத முடிகிறது.

Rathnavel Natarajan said...

இது போதாதென்று 1987 யில் அமைதிகாக்க வந்த இந்திய ரானுவம் செய்த அட்டூழியங்கள் கொஞ்சமல்ல என நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
நல்ல பதிவு. வேதனையாகயிருக்கிறது. இழப்பு எங்கு இருந்தாலும் ஈடு செய்ய முடியாதது.

Unknown said...

பலதகவல்களை தந்துள்ளீர்
மனம் பாரமாக உள்ளது

புலவர் சா இராமாநுசம்

Kanguva Mannippu Song Lyrics

Mannippu Song Lyrics in Kanguva      Mannippu Song Lyrics in English Aaraaro Aariraro Aaraari Raaro Aaraaro Aariraro Aaro Aaro Aariraro Aara...