சிரிப்பு
ஏழைகளின்
மறந்து போன
சின்ன வயசு ஞாபகம்!
மழை
வானிலிருந்து விழும்
விவசாயிகளின்
உணவுப்பருக்கை!
ஊழல்
தினமும்
பழகிப்போன
பத்திரிகைச்செய்தி!
பொம்மை
குழந்தைக்கு கொடுக்காமல்
அலமாரியில் வைக்கப்படும்
காட்சிப்பொருள்!
வரலாறு
இடப்பற்றாக்குறையால்
தூக்கியெறியப்படும்
பழைய புத்தகங்கள்!
கனவு
வெறுப்பவனுக்கும்
தினிக்கப்படும்
இலவச சினிமா!
அண்டைவீட்டுக்காரர்கள்
உயர்ந்த மதில்களால்
மறைக்கப்பட்ட
முகம் தெரியாதோர்!
தாய்மடி
சொர்க்கத்தில்
வாழ்ந்து வந்த
பொற்காலம்!
வாழ்ந்து வந்த
பொற்காலம்!
பணம்
மனிதனை அழிக்க
கண்டுபிடிக்கப்பட்ட
முதல் ஆயுதம்!
ஆசை
மனித இனத்தின்
அழிவின்
ஆரம்பம்!
35 comments:
வந்துட்ட்ட்ட்ட்ட்டேன்ன்ன்ன்ன்ன்....
எல்லாமே சூப்பரா இருக்கு...
பொம்மை, அண்டை வீட்டுக்காரர் நச்....
அருமையான ஹைக்கூ தொகுப்பு !
<>>பொம்மை
குழந்தைக்கு கொடுக்காமல்
அலமாரியில் வைக்கப்படும்
காட்சிப்பொருள்!
idhu இது கலக்கல்
@Mohamed Faaique said...
//வந்துட்ட்ட்ட்ட்ட்டேன்ன்ன்ன்ன்ன்//
வாங்க வாங்க பாஸ்..
@ koodal bala said...
//அருமையான ஹைக்கூ தொகுப்பு//
ரொமப நன்றிங்க.. ஆனா இது ஹைக்கூவா இல்லயான்னு சொல்ல தெரியல்ல எனக்கு,,
@சி.பி.செந்தில்குமார்
வாங்க சிபி சார் வருகைக்கு ரொம்ப நன்றி
கவிதைகள் அருமை நண்பா..
தங்கள் கவிதையைக் கண்டு எனக்கு நினைவுக்கு வந்த கவிதை..
“பொம்மையைத் தாலாட்டிக்
குழந்தை தூங்கிப்போனது“
பணம்
மனிதனை அழிக்க
கண்டுபிடிக்கப்பட்ட
முதல் ஆயுதம்!
மிக அழகாச் சொன்னீங்க.
தாள்களுக்கு மதிப்பு வந்தபின்னர்
உயர்களுக்கு மதிப்பு இல்லாமல் போனது.
நான் தூங்கப்போறேன்.. After night shift
வரிகள் சிறியது
அர்த்தமோ பெரியது
அருமை நண்பரே
பகிர்வுக்கு நன்றி
தமிழ் மணம் 2
//வரலாறு
இடப்பற்றாக்குறையால்
தூக்கியெறியப்படும்
பழைய புத்தகங்கள்!//
அருமை சகோ
சிரிப்பு
ஏழைகளின்
மறந்து போன
சின்ன வயசு ஞாபகம்!//
உண்மையான வரிகள்.......!
சூப்பரா சொல்லிட்டேங்க போங்க....
மழை
வானிலிருந்து விழும்
விவசாயிகளின்
உணவுப்பருக்கை!
உண்மைதான்...
அண்டைவீட்டுக்காரர்கள்
உயர்ந்த மதில்களால்
மறைக்கப்பட்ட
முகம் தெரியாதோர்!
வெளிநாட்டுக் கலாச்சாரம்
வெகுவாய் புகுந்து விளையாடுது...
நம்மையும் அறியாமல்...
//சி.பி.செந்தில்குமார் said...
<>>பொம்மை
குழந்தைக்கு கொடுக்காமல்
அலமாரியில் வைக்கப்படும்
காட்சிப்பொருள்!
இது கலக்கல்///
ரிப்பீட்டு!!!
///சிரிப்பு
ஏழைகளின்
மறந்து போன
சின்ன வயசு ஞாபகம்!
/// ஆரம்பமே அசத்தல் ...
///தாய்மடி
சொர்க்கத்தில்
வாழ்ந்து வந்த
பொற்காலம்!/// உண்மை ..(
மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது என்பதைப்போல
மிகச்சிறிய வரிகளில் சொல்லப் பட்டாலும்
அதிலுள்ள சிந்தனைச் செரிவு மலைக்கவைக்கிறது
தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள் த.ம7
அட கைக்ஹு திருவிழா :)
எல்லாமே அசத்தல் ரகம். ரெம்ப நல்லா இருக்கு, சில வரி கவிதையாக இருந்தாலும் எல்லாமே தேர்ந்தெடுத்த வரிகள், சூப்பர்
அன்பின் நண்பா வேர்களைத்தேடி வந்த தங்களுக்கு
இலக்கியத்தேனீ என்ற விருதினை அன்புடன் வழங்குகிறேன்..
பெற வலைப்பக்கம் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்
http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html
//அண்டைவீட்டுக்காரர்கள்
உயர்ந்த மதில்களால்
மறைக்கப்பட்ட
முகம் தெரியாதோர்//
இதுதான் இன்றைய நகரவாழ்க்கையின் உண்மைநிலை.சூப்பர் நண்பா
துண்டுக் கவிதைகள்-நெஞ்சை
தூண்டும் கவிதைகள்
வண்டென மனமலர்-தேடி
வந்திடும் கவிதைகள்
உண்டிடும் தேனை-அங்கே
உறைந்திடும் கவிதைகள்
கண்டவர் அனைவரும்-மிக
களிபெறு கவிதைகள்
புலவர் சா இராமாநுசம்
@MANO நாஞ்சில் மனோ said...
சூப்பரா சொல்லிட்டேங்க போங்க//
நன்றி பாஸ்
@F.NIHAZA
உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..
@ M.R
மிக்க நன்றிங்க வருகைக்கும் ஓட்டுக்கும்
நறுக்குகளாய் ஹைக்கூ வடிவில் மலர்ந்துள்ள கவிதைகள் அனைத்துமே அசத்தல் பாஸ்.
எதனை எடுத்து விமர்சிப்பது என்று புரியாமல் திண்டாடுகிறேன் பாஸ்.
கனவு
வெறுப்பவனுக்கும்
தினிக்கப்படும்
இலவச சினிமா!//
கலக்கலான ஹைக்கூ கவிதை... கவிதை அனைத்தும் சிறியதாக கொடுத்திருந்தாலும் ஒவ்வொன்றும் மிகப்பெரிய விசயத்தால் மனதை வருடுகிறது...வாழ்த்துக்கள் நண்பா
தமிழ் மணம் 12
பணம், மழை, ஊழல் கலக்கல் ரகம்.
மற்றவையும் அருமை...
நல்ல சிந்தனை கவிதையாய்... இல்லை ஹைக்கூவாய்...
வாழ்த்துக்கள்.
ஹைக்கூ...தூள்...
இரவுச் சூரியனில ஏதோ பூச்சி ஒட்டியிருக்கே அவ்வ்வ்வ்வ்...
ஒவ்வொரு ஹைக்கூவும் கலக்கல்.
Post a Comment