நீயே வேண்டும்...!


தினமும்
கடந்து செல்கிறாய்
எம் தேசத்தை
வெறுமைகளை வீசியவாறு
கனவுகளை கொன்றவாறு...
உனக்குத்தெரியுமா
உன் முகம் பார்த்தே
வாழப்பழகியவர்கள்
எம்மக்கள்..
வந்தால் செழிப்பாவோம்
இல்லையென்றால்
வறண்டு போவோம்..
குளங்களோடு சேர்த்து
உள்ளங்களும் நிறையும்
உன் வருகையால்..
எம் மனசுகள்
பூ மாலைகள் கேட்டதில்லை
எம் உதடுகள்
என்றைக்காவது பூக்க
புன்னகைகள் கேட்கிறோம்...
இன்றாவது
பொழிந்துவிட்டுப்போ
மழை மேகமே..!


விரல்கள்
உன்னைத்தீண்டும்
போதெல்லாம்
கண்கள்
நனைகிறது..
கண்ணீர் தந்தாலும்
கண்கள் நனைத்தாலும்
நீயே வேண்டும்..
என் பசி தீர்க்க
என் சமையல்
ருசி பார்க்க..
என் இனிய
வெங்காயமே..!

14 comments:

Unknown said...

அழகிய ஓவியம் போன்ற கவிதை
இரண்டும் முத்துக்கள்!

முதல் ஓட்டு!

புலவர் சா இராமாநுசம்

Riyas said...

மிக்க நன்றி,, புலவரே!

உங்களைப்போன்றவர்களின் பாராட்டே எனக்கான அதியுயர்ந்த பரிசு..

SURYAJEEVA said...

அருமை; உடல் நலன் காக்க என்ற வார்த்தையும் இருந்தால் இன்னும் அறிவியல் வாசமுடன் இருந்திருக்கும்

Mohamed Faaique said...

சூப்பர் ரியாஸ்....

முதல் கவிதை ஆரம்பிக்கும் போதே, அது மழை பற்றிதான் என்று எண்ணிவிட்டேன்..

கோடை இந்த முறை கொஞம் அதிகமாகவே வாட்டி விட்டது...
இப்போது நாட்டில் மழை பெய்வதாக கேள்வி.. உங்க ஊரில் இன்னும் இல்லையா???

வெங்காயம்...ஹி..ஹி..
கவிதை சூப்பராக இருக்கு...

Unknown said...

சூப்பர் முதல் கவிதையே அருமையான கவிதை

அம்பலத்தார் said...

அருமையான கவிவரிகள்.

அம்பலத்தார் said...

மழையும், வெங்காயமும் எம்மவர் வாழ்வில் இன்றியமையாத தேவைகள். ஆதங்கம் புரிகிறது..

'பரிவை' சே.குமார் said...

கவிதை சூப்பராக இருக்கு.

Rathnavel Natarajan said...

அருமையான கவிதைகள்.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_15.html

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
நலமா?

வித்தியாசமான கருப் பொருளில் கவிதை என்று நினைத்து இறுதி வரிகளைப் பார்த்தேன்..

சஸ்பென்ஸ் வைத்து எழுதியிருக்கிறீங்க.

பூடகமான சொல்லாடலால் கவிதை அழகு பெற்றிருக்கிறது.

ஹேமா said...

ரியாஸ்...வெங்காயம் நிச்சயமாய் தனக்கான கவிதை பார்த்தால் சந்தோஷப்படும் !

K.s.s.Rajh said...

/////விரல்கள்
உன்னைத்தீண்டும்
போதெல்லாம்
கண்கள்
நனைகிறது..
கண்ணீர் தந்தாலும்
கண்கள் நனைத்தாலும்
நீயே வேண்டும்..
என் பசி தீர்க்க
என் சமையல்
ருசி பார்க்க..
என் இனிய
வெங்காயமே..!/////

ஆகா வெங்காயத்துக்கு கவிதை சூப்பர் பாஸ்

தனிமரம் said...

கண்ணீர் தந்தாலும் ருசி வெங்காயம் !
வித்தியாசமான கவிதை நண்பா!

Anonymous said...

மழை + வெங்காயம் கவிதை... சூப்பர் ரியாஸ்....

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...