சிரிப்பூக்கள்...2



மனைவி : நேத்து ஆ‌பி‌ஸ் போ‌னீ‌ங்களே, ஆனா இன்னிக்குத்தான் வீட்டுக்கு வர்றீங்க?
கணவன் : நான் பாட்டுக்கு தூங்கிட்டே இருந்துட்டேன், என்னை யாருமே எழுப்பல அதான்.


என்ன உன் கணவர் ஆபிஸ்லேயிருந்து வந்து, பக்கத்து
வீட்டு கதவைத் தட்டறாரு?
தூக்கம் சரியா கலையலை போல..!

நர்ஸ்: ஏன் டாக்டர் சோகமா இருக்கீங்க?
டாக்டர்: இன்னிக்கு மதியம் நான் ஆபரேஷன் பண்ண நோயாளி இறந்திட்டாரு.
நர்ஸ்: டாக்டர், இன்னைக்கு மதியம் நீங்க பண்ணது ஆபரேஷன் இல்ல அது போஸ்ட்மார்டம்.
டாக்டர்: அப்போ காலைல நான் யாருக்கு போஸ்ட்மார்டம் பண்ணேன்?
நர்ஸ்: ???


என் மனைவி நான் சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா.
ரொம்ப கொடுத்து வைச்சவர் நீங்க, விவரமா சொல்லுங்க.
உதாரணமா நான்தான் சமைப்பேனு சொல்லுவேன். சரின்னுடுவா. நான் தான் துவைப்பேன்னு சொல்லுவேன் சரின்னுடுவா

‎"நான் போலீசிலே சேர்ந்த பிறகு பிறந்த பையன் இவன்." "அப்படியா! என்ன பேரு வச்சிருக்கீங்க?"
"மாமூலன்!"

காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...
காதலி : !!!!

காட்டுவாசி: மாசாலாவைக் கொஞ்சம் தூக்கலா போடணுமா…ஏன்..?
அண்டாவில் மனிதனை வேக வைக்கும் காட்டுவாசி:-
இவன் மண்டையிலே மசாலாவே இல்லையாம்

பேரன்:- அம்மம்மா... பள்ளி விளையாட்டுப்போட்டியில நான் 200 m ஓடபோறன் என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க!
அம்மம்மா:- கவனம் மெதுவா ஓடுப்பா!!
பேரன்:- உங்கிட்ட போய்.

எதுக்கு போலீஸ்காரர்
தபால்காரர் கூட சண்டை போடறாரு?"
"தந்தி வந்துருக்குனு சொல்ரதுக்கு பதில்,
தொந்தி வந்துருக்குனு சொல்லிட்டாராம்!

மாப்பிள்ளைக்கு என்ன போடுவீங்க…?
வரதட்சணைக் கேட்டா கேஸ் போடுவோம்..!


டாக்டர்! எனக்கு பல் ஆடுது!" "எந்த பாட்டுக்கு?"

"இருள் இருள்" என்று சொல்லிக் கொண்டு சும்மாயிருப்பதைவிட ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்ற முயற்சிசெய்.. (நாங்களும் தத்துவம் சொல்லுவம்ல)

12 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

எல்லாமே நன்கு நகைச்சுவையாக உள்ளன. பாராட்டுக்கள்.

ரஹீம் கஸ்ஸாலி said...

ha..ha..nice

Anonymous said...

என்ன உன் கணவர் ஆபிஸ்லேயிருந்து வந்து, பக்கத்து
வீட்டு கதவைத் தட்டறாரு?
தூக்கம் சரியா கலையலை போல..!


நம்ம விஷயம் எப்படி உங்களுக்கு தெரிஞ்சது... -:)

குறையொன்றுமில்லை. said...

வெரி நைஸ்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நகைச் சுவை(த்)தேன்.

Mohamed Faaique said...

புதுசு புதுசா ஜோக் எங தேடுரீங்கனு புரியலயே...

மாய உலகம் said...

ஆப்ரேசன் - போஸ்ட்மார்ட்டம் காமெடி சூப்பர்

SURYAJEEVA said...

இருள் இருள் நு புலம்பினாலும் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்க, இருளில் எழுந்து தடுமாற பயமோ?

Unknown said...

ஹா...ஹா......சுப்பர் பாஸ்

K.s.s.Rajh said...

ஹா.ஹா.ஹா.ஹா. கலக்கல் ஜோக் பாஸ்..கடைசியில் தத்துவம் சூப்பர்

கோகுல் said...

எல்லாமே கலக்கல்!அதிலும் போலிஸ் தொந்தி ஹா ஹா!

அம்பலத்தார் said...

மனதிற்கு இதமான super jokes

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...