இறந்துபோகிறேன் நான்...!



பிறந்துவிட்டேன்
மனிதனாய்
வாழத்துடிக்கிறேன்
மனிதனாய்
இறந்துவிட நினைக்கிறேன்
மனிதனாய்...
மனிதனாகவே இல்லை நான்
சில நேரங்களில்.
தோற்றுப்போகிறேன் நான்
ஆசைகளுக்கும்
அவஸ்தைகளுக்குமிடையில்
சண்டையிட்டு..
அடிமையாகிப்போகிறேன் நான்
காமத்திற்கும்
மோக்த்திற்குமிடையில்
மண்டியிட்டு...
இறந்துபோகிறேன் நான்
மீண்டும் எழுகிறேன்
இன்னும் வரவில்லை
மரணம்...!

இது ஒரு பரிசோதனை முயற்சிக்கான மீள்பதிவு, இந்திய நண்பர்கள் உங்களால் தமிழ்மனத்தில் ஓட்டுப்போட முடிகிறதா அல்லது முடியவில்லையா என்பதை கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்

9 comments:

ஜேகே said...

அன்புள்ள றியாஸ்
tamilmanam.net/blog_home_update.php?url=http://riyasdreams.blogspot.com

என்று இணைக்கலாம் என நினைக்கிறேன்!

Riyas said...

வாங்க நண்பரே.. தமிழ்மனத்தில் இனைப்பதில் பிரச்சினையில்லை.. ஆனால் இந்திய நண்பர்களால் ஓட்டுப்போட முடியுமா ஓட்டுப்பட்டை தெரிகிறதா எனக்கேட்டேன்..

K.s.s.Rajh said...

நல்ல கவிதை பாஸ்

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதை நன்றாக உள்ளது நண்பா

நண்பர் ஒருவர் http://www.bloggernanban.com/2012/02/blog-post.html

இதற்குத் தீர்வு சொல்லியிருக்கார் நண்பா.

Admin said...

மீண்டும் எழுதின பதிவு.மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது..

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கவிதை சார் ! நன்றி ! ஓட்டு போட முடிகிறது !

Anonymous said...

நல்ல மீள் கவிதை...-:)

I was able to vote bro...

சசிகலா said...

அருமையான கவிதைங்க . ஒட்டு போடா முடிறது .

Marc said...

அருமையான தொடக்கம் அருமைக் கவிதை வாழ்த்துகள்.

Sugar Baby Song Lyrics Thug Life

 Sugar Baby Song Lyrics In Tamil   பெண் : என்ன வேணும் உனக்கு கொட்டி கொட்டி கிடக்குது இன்னும் என்ன வேணும் உனக்கு சொர்க்கம் இங்கு இருக்கு பெண்...