ஜாக்கிரதை..!


கவிதை எழுத
எழுத வைத்திருந்த
பேனாவை
திருடிவிட்டார்கள்!
கண் மூடி யோசித்து
கண் திறந்தால்..
"திருடர்கள் ஜாக்கிரதை"
தலைப்பில்


சாலைகளில்
நடக்கும் போதெல்லாம்
ஆங்காங்கே தடுக்கி விழுந்து
விபத்துக்குள்ளாகிறது
மனசு.
பாதையோரங்களில்
தொங்கவிட்டால் என்ன..
"அழகிகள் ஜாக்கிரதை"
பதாகைகள்


வீட்டுக்கு வராதீர்கள்
வந்தால் தாக்கப்படலாம்
நல்லெண்ண
எச்சரிக்கையுடன்
வீட்டுக்கு முன்னால்
தொங்குகிறது..
"நாய்கள் ஜாக்கிரதை"
பதாகைகள்..!

16 comments:

Mahan.Thamesh said...

நல்லா இருக்கு நண்பா கவிதை

Anonymous said...

நல்ல சிந்தனை நகைச்சுவையுடன் ))

அம்பாளடியாள் said...

சிந்தனை அருவியாக் கொட்டியுள்ளது சகோ .வாழ்த்துக்கள் .
வாருங்கள் என் தளத்திற்கும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .........

K.s.s.Rajh said...

நச்சினு பல கவிதைகள் சூப்பர் பாஸ்

SURYAJEEVA said...

ஹ ஹா

சி.பி.செந்தில்குமார் said...

ஒரே ஜாக்கிரதை மயமா இருக்கே?

Mohamed Faaique said...

ரொம்ப முன் ஜாக்கிரத பேர்வழி`யா இருப்பீங்க போலிருக்கே!!!

சேகர் said...

அருமையான பதிவு நண்பா

கோகுல் said...

கணினியை திறந்தவுடன்
பதிவர்கள் ஜாக்கிரதை!

ஹா ஹா!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

த. ஜார்ஜ் said...

//சாலைகளில்
நடக்கும் போதெல்லாம்
ஆங்காங்கே தடுக்கி விழுந்து
விபத்துக்குள்ளாகிறது
மனசு.// ஜாஆஆஆக்கிரதையா போ ராசா.

Anonymous said...

கவிதைகள் அருமை...சாரி ஜாக்கிரதை...

arasan said...

இரண்டாம் கவிதை மிக ரசித்தேன் ..
தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்

அம்பலத்தார் said...

சிந்தனை அருவியாக ஓடுகிறது வாழ்த்துக்கள்

ஆமினா said...

தங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்!
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_30.html

வாழ்த்துக்கள்

மழை said...

சாலைகளில்
நடக்கும் போதெல்லாம்
ஆங்காங்கே தடுக்கி விழுந்து
விபத்துக்குள்ளாகிறது
மனசு.
பாதையோரங்களில்
தொங்கவிட்டால் என்ன..
"அழகிகள் ஜாக்கிரதை"
பதாகைகள்//

superb...

Vaa Kannamma Tamil Song Lyrics in English

  Maadhar mukampoal olivida vallaiyel Kaadhalai vaazhi madhi Malaranna kannaal mukamoththi yaayin Palarkaanath thoandral madhi  Vaa pada pad...