எனது தந்தை அடிக்கடி கூறும் விடயங்களில் ஒன்று, எந்த பொருளையும் வீணாக்ககூடாது வீணாக பயன்படுத்தக்கூடாது என்பதே. எந்த பொருளையும் இலகுவில் தூக்கியெறிந்துவிட மாட்டார் ஒரு குண்டூசியானாலும் எடுத்து வைத்துக்கொள்வார் எப்போதாவது உபயோகப்படக்கூடும் என்ற எண்ணத்தில். அளவு கடந்த ஆடம்பரமும் அவருக்கு பிடிப்பதில்லை! இந்தப்பழக்கம் இன்றுவரை என்னிடமும் தொடர்கிறது! வாழ்க்கை கஷ்டங்களையும், வறுமையையும் புரிய வைத்து வழத்ததால், இன்று ஓரளவு வசதி வாய்ப்புகள் வந்த போதும் வீணான செலவுகளை எதிர்கொள்ள நேர்கையில் மனசு கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது.
அலுவலகங்களிலாட்டும் வெள்ளைத்தாள், டிஸு பேப்பர் போன்ற பொருட்களைகூட வீணாக பயன்படுத்துவோரைக்கண்டாலே ஒருவித கோபம் ஏற்படுகிறது. அவற்றை அறிவுறுத்த முடியாத நிலையில் மனதுக்குள்ளயே பொங்க வேண்டியிருக்கிறது. அப்படியே அறிவுறுத்தினாலும் அநேகரின் பதில் "இது கம்பனி சொத்துத்தானே உங்க வீட்டு சொத்து அல்லவே" என்பதுதான்! தனது வீட்டையும் தொழில் செய்யும் இடத்தையும் ஒன்றாக நினைத்து மதிக்காத வரை அவர்களின் தொழிலில் அபிவிருத்தி ஏற்படாதென்பது எனது நம்பிக்கை.
இன்றைய உலகமயமாக்கலின் சாபக்கேடுகளில் ஒன்று நாம் விரும்பியோ விரும்பாமலோ வீணான செலவுகளின் பக்கம் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறோம். சமூகமாக வாழவேண்டிய கட்டாயம் இருப்பதால் அவற்றை தவிர்த்து விடவும் முடிவதில்லை பெரும்பாலான நேரங்களில். ஆடம்பரமாக வாழ நினைத்து அழிந்து போனவர்கள் பலரை என் வாழ்க்கையில் நான் பார்த்திருக்கிறேன். வாழ்க்கையை ஆடம்பரமாக அமைத்துக்கொள்வதென்பது தவறல்ல. ஆனால், ஆடம்பரம் அளவுக்கு மீறி போகக்கூடாது தன்னுடைய நுகர்வு சக்திக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
இன்று வெளிநாடுகளில் வேலைசெய்யும் பல இழைஞர்கள் உழைக்கும் பணத்தை ஆடம்பரத்துக்காகவும், கண்னை மயக்கும் பணக்கார மேல்தட்டு நுகர்வு பொருட்களுக்காகவும் செலவிட்டு மாதயிறுதியில் சிங்கில் டீக்கு கூட காசில்லாமல் சிங்கி அடிக்கிறார்கள். ஆசிய நாடுகளில், மேலைதேய நாட்டு முதலாளித்துவத்தினால் இநநாட்டு நடுத்தர மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதற்காகவே உருவாக்கப்பட்டதே மெக்டொனல்ட், கே.எப்.சி போன்ற நவீன கண்னை மயக்கும் பாஸ் பூட் உணவகங்கள். இவைகளில் ஒரு கோழி துண்டு வாங்கும் காசிற்கு முழு குடும்பத்திற்கும் தேவையான கோழி வாங்கி சமைத்தோ பொறித்தோ இன்னும் சுவையாக சாப்பிடலாம்.
இப்பொழுதெல்லாம் இதுமாதிரியான உணவகங்களில் சாப்பிடுவதுதான் கௌரவம் என்றாகிவிட்டது.
நான் முன்பு எழுதிய குட்டி கவிதைகளில் ஒன்று நியாபகத்துக்கு வருகிறது.
கே எப் சி
கோழி சாப்பிட வேண்டும்
நீண்டநாள் ஆசை
நிறைவேறியது!
நீண்டநாளாய் வளர்த்த
வீட்டுச்சேவலை
விற்றதின் மூலம்!
இப்படித்தான் இருக்கிறது இன்றைய நிறைய பேரின் வாழ்க்கை முறை!
எங்கள் தந்தை எங்களை விட்டுப்பிரிந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டது :-(
9 comments:
தமிழக முஸ்லீம் சமூகத்தையே மோசமாக மக்கள் கருதும் வகையிலான வாசகங்களை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி எழுதி உள்ளதும் விகடனில் பிரசுரமானது.
>>>→அட..த்தூ... விஷம் பரப்பும் புரட்டு விகடன்.←<<<
.
இன்றும் என்றும் உங்கள் மனதில் வாழ்கிறார்...
முழுவதும் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்
ஒரேயடியாகக் கருமியாக இல்லாமல், சிக்கனமாகவும் சிறப்பாகவும் வாழ்வது தான் என்றும் நல்லது.
தாங்கள் தங்கள் தந்தையிடமிருந்து நல்லதை நல்லவிதமாக எடுத்துக்கொண்டுள்ளீர்கள்.
எல்லாப்பிள்ளைகளும் அப்படி இருப்பது இல்லை.
தாங்கள் ஆயிரத்தில் அல்ல லட்சத்தில் ஒருவர்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
nalla pakirvu..
kavithai manathai thottathu...
//அலுவலகங்களிலாட்டும் வெள்ளைத்தாள், டிஸு பேப்பர் போன்ற பொருட்களைகூட வீணாக பயன்படுத்துவோரைக்கண்டாலே ஒருவித கோபம் ஏற்படுகிறது.//என்னை போல் நீங்களும் நினைப்பது மகிழ்ச்சியாய் இருக்கு. இதை நாம் பிறருக்கு சொன்னால் நம்மை ஏளனமாய் பார்க்கிறார்கள். இவர் ஒருத்தர் தான் மாற்ற போறார் என்று பேச்சு வேறு. என் நண்பனிடம் நான் சொன்ன பதில் காகிதங்களை சேமிப்பதால் என்னால் ஒரு மரக் கிளையை காப்பாற்ற முடிந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே என்று.
சிக்கனம் மிகவும் பிரதானம்!
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை சகோ!
தந்தை சொல் மந்திரம் அல்லவா?
மாஷா அல்லாஹ், அருமையான பதிவு!! உங்களைப் போன்ற சிலராவது இருப்பதைப் பார்க்கும்போது மனதுக்கு இதமாய இருக்கிறது. இந்தியாவைவிட, வெளிநாடுகளில் இந்தியர்கள் செய்யும் வீணாக்குதல் அதிகமாக இருக்கும்போல. அதுவும் இங்கு ஆஃபீஸ்களில் டாக்குமெண்ட்களைத் தேவையில்லாமல் பிரிண்ட் செய்து காகிதங்களை வீணாக்குவதைப் பார்த்தால்.. கண்ணில் இரத்தமே வரும்!!
Post a Comment