இன்னும் நாற்பது ஆண்டுகளில்,ஐம்பது ஆண்டுகளில் எண்னை வளம் இல்லாமல் போகலாம்,குடி நீர் இல்லாமல் போகலாம்,உணவு பற்றாக்குறை ஏற்படலாம்,காலநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரிக்கலாம் என சிந்திப்போர் கவலைப்படுவோர் எத்தனையோ பேர் உண்டு இப்பூமியில் என்னையும் சேர்த்துத்தான் (எனது முன்னதான
"மழை தருமோ இந்த மேகம்" என்ற பதிவில் இதைப்பற்றி சொல்லிருக்கேன் ஆனாலும் இவை எல்லாவற்றையும் விட மேலாக உலகிலேயே மிக அரிதாக கிடைக்ககூடியதொன்று அதுவும் இன்னும் கொஞ்ச காலத்தில் அவவாரானதொரு வசனம் இருந்ததைக்கூட மக்கள் மறந்திடலாம் அதுதான் "மனிதநேயம்"இதைப்பற்றி நாம் கவலைப்படுகிறோமா... இதை எங்கே பெற்றுக்கொள்ளலாம்.. அதன் விலை
என்ன...?
அவரவர் மதங்களும் கலாச்சாரங்களும் அவரவர்களுக்கு முக்கியம்தான்.எந்த மதமானாலும் எந்த கலாச்சாரமானாலும் எந்த இனமானாலும் எந்த நாடானாலும் எந்த நிறமானாலும் நாம் எல்லோரும் மனிதர்கள் என்ற ஒரு புள்ளியில் இனைகிறோம் அல்லவா... அது வெறும் இனைப்பாகயில்லாமல் மனிதநேயம் என்ற பொதுக்கோட்பாட்டுடன் இனைந்தால் மனிதனுடன் மனிதநேயமும் உயிர் வாழும் அல்லவா
கொடுமைகள்,கொடூரங்கள்,உயிர்ப்பலிகள்,வன்முறைகள்,இரத்தங்கள்,அவலங்கள்,
அகதிகள் எதற்காக இதற்கெல்லாம் காரனம் எதுவோ... எல்லாவற்றிக்கும் மூலக்காரனம் மனித நேயம் தொலைந்து போனமையே.இது தொடர்ந்தால் மனித உயிர்களும் மலிவாய் போய்விடலாம் இவ்வுலகில்.
.
மற்றவர்களுக்குக்கு உதவவும் வேண்டாம்.. உணவளிக்கவும் வேண்டாம்.. உயிரோடு வாழவிடுங்கள். அவர்கள் தொடர்வார்கள் அவர்களின் வாழ்க்கையை. பரந்து விரிந்த இந்த பூமியில் எங்கும் கிடைக்கலாம் அவர்களுக்கான உண்வோ.. உடையோ.. உறையுலோ...
இதைச்சொல்லும் போது யாழ்ப்பானத்தைச் சேர்ந்த "தமிழினி" எழுதிய கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வந்தது இதோ...
ஓசோன் துளைகளை
விட்டு விடுங்கள்
துப்பாக்கி முனைகளின்
துளைகளை
அடைக்கப்பாருங்கள்
பூமி தொடர்ந்தும் சுவாசிக்கும்.
இரத்தமோடும் இப்பூமியிலேதான் பூக்களும் புன்னைகளும் ஆங்காங்கே கொட்டிக்கிடக்கிறது வாங்க நிரப்பலாம் இப்பூமியை பூக்களாலும் புன்னகைகளாலும்.வழி செய்வோம் மனிதநேயம் வளர.
நான் சொன்னது சரியா.. பிழையா.. மறக்காமல் சொல்லிட்டு போங்க மகா ஜனங்களே..
அப்படியே ஒரு ஓட்டு போட்டவாறு..
Riyas
No comments:
Post a Comment