இங்கே கணவர்கள் விற்கப்படும்..!



ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது....அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..

அது என்னன்னா...!

1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.

2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும்
இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும்.

ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..

அப்டியே வெளிய தான் போக முடியும்.

இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா......கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது

முதல் தளத்துல அறிக்கை பலகைல "முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு

இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா


இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு

இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.

மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு

அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும் ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.

நாலாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.

இதை விட வேற என்ன வேணும்...நல்ல குடும்பம் அமைக்கலாமே?

கடவுளே...மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்." அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.

ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.

அவ்ளோ தான்.....அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ...சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே..அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது...சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..

ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல

"இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை..வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது ..இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான் .

எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...

பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் " அப்டின்னு போட்டிருந்தது .

Author- Unknown
இது பேஸ்புக்கில் படித்தது..  பிறகு HUSBANDS FOR SALE என டைப் செய்து கூகுளில் தேடினால்.. இதன் அசல் ஆங்கில வடிவம் (2008) தெரியவந்தது அது கீழே,,


A store that sells husbands has just opened in New York City , where a
woman may go to choose a husband. Among the instructions at the entrance
is a description of how the store operates.

You may visit the store ONLY ONCE!

There are six floors and the attributes of the men increase as the shopper
ascends the flights. There is, however, a catch .... You may choose any
man from a particular floor, or you may choose to go up a floor, but you
cannot go back down except to exit the building!

So, a woman goes to the Husband Store to find a husband.

On the first floor the sign on the door reads:

Floor 1 - These men have jobs and love the Lord.

The second floor sign reads:

Floor 2 - These men have jobs, love the Lord, and love kids.

The third floor sign reads:

Floor 3 - These men have jobs, love the Lord, love kids, and are extremely
good looking.

'Wow,' she thinks, but feels compelled to keep going. She goes to the
fourth floor and sign reads:

Floor 4 - These men have jobs, love the Lord, love kids, are drop- dead
good looking and help with the housework.

'Oh, mercy me!' she exclaims, 'I can hardly stand it!' Still, she goes to
the fifth floor and sign reads:

Floor 5 - These men have jobs, love the Lord, love kids, are drop- dead
gorgeous, help with the housework, and have a strong romantic streak.

She is so tempted to stay, but she goes to the sixth floor and the sign
reads:

Floor 6 - You are visitor 4,363,012 to this floor. There are no men on
this floor. This floor exists solely as proof that women are impossible to
please. Thank you for shopping at the Husband Store. Watch your step as
you exit the building, and have a nice day!



29 comments:

SURYAJEEVA said...

நல்ல நகைச்சுவை தான், ரொம்ப நொந்து போயிருக்கீங்க போலிருக்கு

Karthikeyan Rajendran said...

எப்படி சார் இப்படியெல்லாம் யோசிக்கறாங்க!!!!!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஓஹோ...ஹோ...

Unknown said...

அருமையோ அருமை
அசத்தல்!

புலவர் சா இராமாநுசம்

Mohamed Faaique said...

///You are visitor 4,363,012 to this floor. There are no men on
this floor.///

இந்த வரியையும் மொழி பெயர்க்க இருந்தது..
இந்தக் கதை ஐரோப்பாவுக்கோ, அமெரிக்காவிற்கோ பொருந்தும்..
நம்ம நாட்டுல புல்லாணாலும் புருசன், கல்லானாலும் கனவன்னு இருந்துருவாங்க.. நாமதான் மோசம்....

aalunga said...

ஹா... ஹா... ஹா..
அருமையான நகைச்சுவை!!

சம்பத்குமார் said...

வணக்கம் சகோதரம்

நல்லதொரு காமெடி ”பஞ்ச்”.

பகிர்விற்க்கு நன்றி..

சம்பத்குமார் said...

இன்று முதல் 210 வது நண்பராக தொடர்வதில் மிக்க மகிழ்ச்சி..

MHM Nimzath said...

ha ha...Supper

Philosophy Prabhakaran said...

ஏற்கனவே படித்திருக்கிறேன்... பகிர்ந்தமைக்கு நன்றி...

K.s.s.Rajh said...

////இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை..வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது ..இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான் .

எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...

பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் " அப்டின்னு போட்டிருந்தது .
////haaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

கோகுல் said...

ஹா ஹா சூப்பரு!

'பரிவை' சே.குமார் said...

ஏற்கனவே படித்திருக்கிறேன்... பகிர்ந்தமைக்கு நன்றி

M.R said...

நல்ல நகைச்சுவை கூடவே பாடம்

தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே

அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி
பகிர்வுக்கு ....

சேகர் said...

நல்ல பதிவு நண்பரே..

Unknown said...

ஹா ஹ ஹஹஹா
அண்ணனுக்கு கல்யாணம் ஆயிருச்சு போல......

Anonymous said...

நல்ல நகைச்சுவை ...தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா...

Anonymous said...

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா...

அன்புடன் மலிக்கா said...

காமெடியார்களாக்கிட்டீங்க கணவர்களை.

நல்ல நகைச்சுவை..

Angel said...

EID MUBARAK to You and your family with all best wishes.

Anonymous said...

இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பா!

-தோழன் மபா, தமிழன் வீதி said...

'அடடே...அருமை போங்க...!'

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நல்ல சரளமான மொழி நடை. வாழ்த்துகள்.

ADMIN said...

பெண்களுக்கு மட்டுமா நமக்கும்தான் ஆர்வம் அதிகரித்துவிட்டது.. ஆறாவது தளத்திலிருந்து தலைகீழாய் தொபுக்கடீர் என்று விழுந்துவிட்டேன்..!!

ADMIN said...

எனது வலையில் இன்று:

உங்கள் செயல்களை யுக்தியுடன் செய்யுங்கள்

நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பு நண்பரே மழலை உலகம் தொடர்பான தங்கள் இடுகையை

எனது வலையில் அறிமுகம் செய்துள்ளேன்..

http://gunathamizh.blogspot.com/2011/11/blog-post_3736.html

காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்

சுதா SJ said...

பாஸ் மாத்தி யோசிச்சுட்டீன்களோ??? ஹா ஹா

rishvan said...

nalla comediy pongaa.... thanks to share this... www.rishvan.com

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...