இரவுக்காதலன்..!!


இரவு அழகானது
நிலவோடு
உன் நினைவுகளையும்
சுமந்து வருவதால்..!

வார்த்தைகள் சேகரிக்கிறேன்
உன்னுடன் பேச
பரிட்சைக்காய் பயிலும்
பள்ளி சிறுவன் போல..!

விலைகொடுத்து வாங்கிவிட்டாயா
வெட்கங்களை
உன் நிழலும் நாணுகிறதே
உன்னைப்போலவே..!

ஒப்பந்தம் செய்துகொண்டேன்
கனவுகளோடு
ஒளிப்பதிவு செய்யக்கோரி
உன் முகத்தை மட்டும்..!

புன்னகைகள்
சுமந்து செல்கிறால்
புத்தகங்கள் சுமந்து செல்லும்
பள்ளிச்சிறுமி போல்..!

34 comments:

சுதா SJ said...

//புன்னகைகள்
சுமந்து செல்கிறால்
புத்தகங்கள் சுமந்து செல்லும்
பள்ளிச்சிறுமி போல்..!//


எனக்கு மிகவும் பிடித்த இடம்.

மிக நன்றாக இருக்கு நண்பா.. உங்களுக்கு கவிதை மிக அழகாக வருகிறது

சுதா SJ said...

பாஸ்
தமிழ்மணத்தில் ஒட்டு போட முடியவில்லையே???
கவனியுங்கள்...

MANO நாஞ்சில் மனோ said...

விலைகொடுத்து வாங்கிவிட்டாயா
வெட்கங்களை
உன் நிழலும் நாணுகிறதே
உன்னைப்போலவே//

அடடடடா அருமை அருமை ரியாஸ்.....!!!

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் இணைச்சி ஒட்டும் போட்டுட்டேன்...

Riyas said...

@துஷ்யந்தன்

//பாஸ்
தமிழ்மணத்தில் ஒட்டு போட முடியவில்லையே???
கவனியுங்கள்..//

வாங்க பாஸ், தமிழ்மணத்தில் உடனடியா இனைக்க முடிவதில்லை..இப்போ சரி

நன்றிங்க வருகைக்கு

Riyas said...

@MANO நாஞ்சில் மனோ

வாங்க மனோ சார்,

வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி,,

தமிழ்மணத்தில் இனைத்தமைக்கும் ரொம்ப நன்றி.

Rathnavel Natarajan said...

அருமை.

Riyas said...

#Rathnavel

நன்றிங்க ஐயா

Mohamed Faaique said...

///ஒப்பந்தம் செய்துகொண்டேன்
கனவுகளோடு
ஒளிப்பதிவு செய்யக்கோரி
உன் முகத்தை மட்டும்..!///

என்ன பாஸ்?? ரூட் மாறுரீங்க... வீட்டுல பொண்ணு பாக்குராங்க... அப்டிதானே!!!!

K.s.s.Rajh said...

///ஒப்பந்தம் செய்துகொண்டேன்
கனவுகளோடு
ஒளிப்பதிவு செய்யக்கோரி
உன் முகத்தை மட்டும்..!///

அருமை நண்பா அழகான வரிகள்

அது எப்படி ஒப்பந்தம் செய்வது என்று சொன்னா எங்களுக்கும் உதவுமே.........ஹி.ஹி.ஹி.ஹி.ஹி

Anonymous said...

ஒப்பந்தம் செய்துகொண்டேன்
கனவுகளோடு
ஒளிப்பதிவு செய்யக்கோரி
உன் முகத்தை மட்டும்..!
/// சூப்பர் பாஸ் ...

'பரிவை' சே.குமார் said...

//விலைகொடுத்து வாங்கிவிட்டாயா
வெட்கங்களை
உன் நிழலும் நாணுகிறதே
உன்னைப்போலவே..!//
வரிகள் அழகு. கவிதை அருமை.

rajamelaiyur said...

//
வார்த்தைகள் சேகரிக்கிறேன்
உன்னுடன் பேச
பரிட்சைக்காய் பயிலும்
பள்ளி சிறுவன் போல..!
//
அருமையான வரிகள்

rajamelaiyur said...

நல்ல கவிதை

மாய உலகம் said...

விலைகொடுத்து வாங்கிவிட்டாயா
வெட்கங்களை
உன் நிழலும் நாணுகிறதே
உன்னைப்போலவே..!//

உங்களது திறமை மிளிர்கிறது நண்பா

மாய உலகம் said...

ஒப்பந்தம் செய்துகொண்டேன்
கனவுகளோடு
ஒளிப்பதிவு செய்யக்கோரி
உன் முகத்தை மட்டும்..!//

அற்புதமான சிந்தனை.... வாழ்த்துக்கள் சகோதரரே

மாய உலகம் said...

தமிழ் மணம் 7

காந்தி பனங்கூர் said...

அனைத்து வரிகளும் ஆழமான காதலுட எழுதியிருக்கீங்க நண்பா. அருமை அருமை.

காந்தி பனங்கூர் said...

த.ம.8

Anonymous said...

//ஒப்பந்தம் செய்துகொண்டேன்
கனவுகளோடு
ஒளிப்பதிவு செய்யக்கோரி
உன் முகத்தை மட்டும்..!////

இதுபோன்ற வரிகள் கவிதையின் தரத்தை அதிகம் உயர்த்துகிறது...

வாழ்த்துக்கள்

Riyas said...

@ Mohamed Faaique said...

//என்ன பாஸ்?? ரூட் மாறுரீங்க... வீட்டுல பொண்ணு பாக்குராங்க... அப்டிதானே!!!//

எப்புடி பாஸ் கரெக்டா கண்டுபுடிச்சிங்க,, போங்க பாஸ் சின்னப்புள்ளக்கிட்டபோய் இதெல்லாம் சொல்லிக்கிட்டு,,

Riyas said...

@கந்தசாமி.

@சே.குமார்


@"என் ராஜபாட்டை"- ராஜா

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பர்களே,,

Riyas said...

@ K.s.s.Rajh

வாங்க மச்சான்.



//அது எப்படி ஒப்பந்தம் செய்வது என்று சொன்னா எங்களுக்கும் உதவுமே.........ஹி.ஹி.ஹி.ஹி.ஹி// ஓஹோ உங்களுக்கும் தேவையோ அதெல்லாம் ரகசியம்,, தனியா என்ன தொடர்பு கொள்ளுங்க சொல்றன், ஹி ஹி

10 September, 2011 05:41

Riyas said...

@மாய உலகம்

உங்கள் தொடர்ச்சியான வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி நண்பா..

Riyas said...

@காந்தி பனங்கூர்

உங்கள் முதல் வருகைக்கு நன்றி நண்பரே

Riyas said...

@ஷீ-நிசி

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க

Anonymous said...

கவிதை அருமை...அருமையான வரிகள்...

..புன்னகைகள்
சுமந்து செல்கிறால்(ள்)
புத்தகங்கள் சுமந்து செல்லும்
பள்ளிச்சிறுமி போல்..

குறையொன்றுமில்லை. said...

உங்களுக்கு கவிதை எழுத நல்லா வருது. தொடருங்க. நல்லா இருக்கு.

Anonymous said...

மிக நல்ல கவிதை. நல்ல வார்த்தைக் கட்டும். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
நிலவில் அவள் முகத்தைத் தரிசித்து, மனதில் அவள் நினைவினைத் தட்டியெழுப்பும் அருமையான கவிதையினைத் தந்திருக்கிறீர்கள்.

//பரிட்சைக்காய் பயிலும்
பள்ளி சிறுவன் போல..!//

உவமானம் கலக்கல் பாஸ்..

அவளுடன் முதன் முதலில் பேசுவதே ஒரு பரீட்சை தானே...
அவ்......

அம்பாளடியாள் said...

அருமையான வார்த்தை ஜாலம்.....வாழ்த்துக்கள் .
என்தளத்தில் இன்று ஒரு பாடல் காத்திருக்கின்றது வந்து உங்கள் கருத்தினை பொழியுங்கள் சகோ .
வாக்களிக்க மறந்துவிடாதீர்கள் ஹி...ஹி ..ஹி ..
மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .......

மாய உலகம் said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

அம்பாளடியாள் said...

எங்க சார் அடுத்த பதிவையும் காணல உங்க வரவையும்
காணல?....

cineikons said...

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...