சும்மயிருக்க முடியாம கிறுக்கியவை....!

எல்லோரிடமும்
எல்லாமும்
இருக்கிறது
நல்ல
மனசைத்தவிர...!


ஓரே
வழியாகவே
போய்
வருகிறது
இயந்திர வாழ்க்கை
கடிகாரத்தை
போலவே...!


கணனிகளுக்குள்ளும்
கைத்தொலைபேசிகளுக்குள்ளும்
அடைப்பட்டுக்கிடக்கிறது
நம்
விருந்தோம்பல்களும்
நல விசாரிப்புகளும்...!

படித்தவனுக்கு
வேலையுமில்லை
பசித்தவனுக்கு
உணவுமில்லை
இதுதான்
எம் தேசிய கீதமோ...!

நினைப்பவை
கிடைப்பதுமில்லை
கிடைப்பவை
நினைப்பவையாக
இருப்பதுமில்லை
இதுதான்
வாழ்கையா....!

வானம் போல்
வாழ்ந்திட நினைத்தேன்
இன்னும்
கீழேதான்
கிடக்கிறேன்
பூமியாய்.....!

தேடிக்கொண்டிருக்கிறேன்
இன்னும்
வாத்தியாரிடம்
சொன்ன
எதிர்கால
இலற்சியங்களை...


பிடித்திருந்தால் ஏதாவது சொல்லிட்டு ஒரு ஓட்டும் போடுங்க
அப்பதான் உங்க நல்ல மனசு எனக்குத்தெரியும்..

14 comments:

jillthanni said...

\\ நினைப்பவை
கிடைப்பதுமில்லை
கிடைப்பவை
நினைப்பவையாக
இருப்பதுமில்லை
இதுதான்
வாழ்கையா....!\\

நல்ல ஃப்ளோ இருக்கு உங்கள் வரிகளில்
சில பிழைகள் இருக்கு திருத்துங்கள்
\\ வார்த்தியாரிடம்\\
\\ இலடசியங்களை \\

தொடர்ந்து கிறுக்குங்கள்

Riyas said...

நன்றி ஜில்தண்னி உங்கள் கருத்திற்கும் ஆலோசனைக்கும்

Ahamed irshad said...

Nice....

//தேடிக்கொண்டிருக்கிறேன்
இன்னும்
வாத்தியாரிடம்
சொன்ன
எதிர்கால
இலற்சியங்களை.//

i Like This Lines... good.

Muthuraj said...

//ஓரே
வழியாகவே
போய்
வருகிறது
இயந்திர வாழ்க்கை
கடிகாரத்தை
போலவே...!//

நல்ல உவமை.....

ஜெய்லானி said...

நல்லா இருக்கு. இன்னும் கிறுக்குங்க.

கமலேஷ் said...

ரொம்ப நல்ல இருக்கு நண்பரே...வாழ்த்துக்கள்..தொடருங்கள்...

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

எல்லோரிடமும்
எல்லாமும்
இருக்கிறது
நல்ல
மனசைத்தவிர...!

100 % true

நண்பன் said...

ஆஹா. இதல்லவோ கவிதை இப்போதுள்ள நிலைமையை உணர்த்துகிறது தாங்களின் கவிதை

வாழ்க வளமுடன்

Riyas said...

நன்றி உங்கள் அனைவருக்கும்.. தொடர்ந்து உங்கள் ஆதரவே என் எழுத்தை ஊக்குவிக்கும்..
இர்சாத்
ஜெய்லானி
முத்துராஜ்
கமலேஷ்
தமிழன்
புர்கானிப்ராகிம்
மற்றும் வாக்களித்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அனைத்துக் கவிதைகளும் அருமை!

kameshbujjee said...

நல்ல இருக்கு உங்க கிறுக்கல்

Riyas said...

Thanks...

Nizamudeen and Kameshbujjee

பனித்துளி சங்கர் said...

அழுத்தமான வார்த்தைகள் மிகவும் அருமை !

Riyas said...

நன்றி பனித்துளி சங்கர்.

வருகைக்கும் பின் தொடர்ந்தமைக்கும்..

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2