ஓர் நாள் இரவு
ஓர் பயணம்
ஓராயிரம் மைல்கள்
ஓடியிருக்கலாம்...!
அது ஐரோப்பா என
அடையாளம்
கண்டேன்
நாகரீக
வாசனையினால்...!
பல தேசங்கள்
கடந்து
பவனிவரும் போது
மரண ஓலங்கள்
காதில் விழவே
கால் வைத்தேன்
பாரினில்...
அது ஜேர்மனிய தேசம்
அறிந்து கொண்டேன்
உயிரிழந்தவர்கள்
யூதர்கள்
ஆனபடியால்...!
மொத்தமாகவும்
சில்லறையாகவும்
வாங்கப்பட்டன
அங்கே
அவர்கள் உயிர்....!
உயிர் கொடுத்தவன்
எங்கோயிருக்க.
இங்கே
உயிர் எடுப்பவன்
எவன்
எனக்கேட்டேன்...!
'நான் தான்'
தூரத்திலிருந்து
ஓர் குரல்.
அது ஹிட்லர்தான்,
அறியத்தந்தது எனக்கு
அவ்வார்த்தையில் வந்த
ஆணவமும்
அகங்காரமும்....!
உயிரெடுக்க
உனக்கென்ன
உரிமையிருக்கு
உரத்துக்கேட்டேன்....!
ஹிட்லரின்
பதிலுக்கு முன்னே
அம்மாவின் குரல்
"ஏழு மணியாச்சு
எழுந்திரு"
ஹிடலரின் பதில்
இன்னும் ஓர் இரவில்
தொடரலாம்....!
Subscribe to:
Post Comments (Atom)
Pushpa 2 Tamil Song Lyrics
Peelingsu tamil lyrics puspa 2
-
சில பாடல்களை ரசிப்பதற்கு அதன் மொழி ஒன்றும் தடையாய் இருப்பதில்லை அதன் இசையும் மெட்டும் பாடகரின் குரலின் இனிமையும் உணர்ச்சிகளுமே அந்தப்பாடலின...
-
The Greatest of All Time! Thalapathy is here. Presenting the song "Spark" from the new Tamil movie "The Greatest Of All Time...
-
தொட்டு தொட்டு போகும் தென்றல் பாடல் வரிகள் படம் : காதல் கொண்டேன் பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா இசை : யுவன் சங்கர் ராஜா பாடல் வரிகள் : ந...
17 comments:
உயிரெடுக்க
உனக்கென்ன
உரிமையிருக்கு
உரத்துக்கேட்டேன்....!
ஹிட்லரின்
பதிலுக்கு முன்னே
அம்மாவின் குரல்
"ஏழு மணியாச்சு
எழுந்திரு"
ஹிடலரின் பதில்
இன்னும் ஓர் இரவில்//
சூப்பர்.... தொடருங்கள்....
//உயிரிழந்தவர்கள்
யூதர்கள்
ஆனபடியால்...!
மொத்தமாகவும்
சில்லரையாகவும்
வாங்கப்பட்டன
அங்கே
அவர்கள் உயிர்....!//
உயிருக்கு எங்கதான் மதிப்பு இருக்கு
ஹிட்லரை எதிர்த்து கேட்ட வார்த்தைகள் அருமை நண்பா
உயிருக்கு எங்கதான் மதிப்பு இருக்கு
ஹிட்லரை எதிர்த்து கேட்ட வார்த்தைகள் அருமை நண்பா
ஹிட்லரை எதிர்த்து கேட்ட வார்த்தைகள் அருமை நண்பா
அருமையான முயற்சி
ஜில்தண்ணி
நன்றி சவுந்தர்..
நன்றி ஜில்தண்ணி
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்..
// உயிரெடுக்க
உனக்கென்ன
உரிமையிருக்கு
உரத்துக்கேட்டேன்....!
ஹிட்லரின்
பதிலுக்கு முன்னே
அம்மாவின் குரல்
"ஏழு மணியாச்சு
எழுந்திரு"
ஹிடலரின் பதில்
இன்னும் ஓர் இரவில்
தொடரலாம்....//
வரலாற்றில் கறை படிந்த பக்கங்கள்.. கனவிலுமா?
சூப்பர்..!!
'நான் தான்'
தூரத்திலிருந்து
ஓர் குரல்.
அது ஹிட்லர்தான்,
good one riyas
உயிர் கொடுத்தவன்
எங்கோயிருக்க.
இங்கே
உயிர் எடுப்பவன்
எவன்
எனக்கேட்டேன்...!
வார்த்தைகளை கனவில் கேட்டாலும்
கம்பீரமான வார்த்தைகள் ரியாஸ்.
வாழ்த்துக்கள்.
கவிதை நல்லா இருக்கு ரியாஸ்,,,
அருமையான கவிதை. பாராட்டுக்கள்!
நன்றி இராகவன்,
நன்றி ஜெய்லானி,
நன்றி ஹாய் அரும்பாவூர்
நன்றி அபுல் பசர்
நன்றி நாடோடி
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்...
வாங்க சித்ரா அக்கா.. உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி..
கவிதை நல்லா இருக்கு Riyas.
ரியாஸ் நானா .. கலக்குறீங்க, நல்ல பதிவு, நன்றி மறவாமைக்கு ஓர் உதாரணம் :)
சார்,
holokaast என்ற ஒன்றே நடக்கவில்லை என்று ஈரானின் பிரதமர் அஹமதிநஜத் சில யூதர்கள் உதவியுடன், ஆராய்ச்சியே நடத்தி அறிக்கை வெளியிட்டனர்.
அதனால், முழுமையாக சொல்ல முடியாது அப்படி ஒன்று கண்டிப்பக நடந்தது என்று, அதனால் நன்கு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
மற்றபடி கவிதையை ரசிக்கலாம்
வாங்க Anonymous நண்பரே..
நான் எழுதியது ஒன்றும் ஆராய்ச்சிக்கட்டுரையில்லையே அதன் உண்மைத்தன்மையை தெளிவுப்படுத்த.. இது ஒரு கனவில் தோன்றியதாக சித்தரிக்கப்பட்ட சாதாரண கவிதையே..
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்..
Post a Comment