குழந்தை மனசு...!

நீ...

திருவிழா
உன் மிட்டாய்களுக்காய்
அடம்பிடிக்கிறது
குழந்தை மனசு...!



சிந்திய மழையாய்
சிரித்துவிட்டுப்போகிறாள்
சிறு பிள்ளையாய்
சினுங்குகிறது மனசு...!



எதையோ எல்லாம்
தொலைத்துவிட்டுப்போகிறாள்
இதயத்தை மட்டும்
இறுக்கிப்பிடித்தபடி...!



நானும்
குழந்தையாகிவிடத்தோன்றுகிறது
குழந்தைகளிடம்தானே
அதிகம் பேசுகிறாள்...!



கண்களுக்குள்
கலவரம் செய்து போனவள்
கண்ணீருக்கு முன்
வந்துவிடுவாளா...!

19 comments:

அன்புடன் நான் said...

உங்களுக்கு குழந்தை மனசு....
கவிதை வெகு அழகு....
பாராட்டுக்கள்.

elamthenral said...

ரொம்ப அழகான கவிதை... வாழ்த்துக்கள்..

ஹேமா said...

குழந்தையாய் மாறியாவது காதலை அடைய ஒரு கவிதை.மழையாய் வருகிறாளோ அபுதாபி வரை !

மதுரை சரவணன் said...

//நானும்
குழந்தையாகிவிடத்தோன்றுகிறது
குழந்தைகளிடம்தானே
அதிகம் பேசுகிறாள்...!//
வரிகள் குழந்தையாக்குகின்றன. வாழ்த்துக்கள்

Chitra said...

:-)

ப்ரியமுடன் வசந்த் said...

//எதையோ எல்லாம்
தொலைத்துவிட்டுப்போகிறாள்
இதயத்தை மட்டும்
இறுக்கிப்பிடித்தபடி...!//

ம் நல்லாருக்கு பாஸ்...

இளம் தூயவன் said...

சிந்திய மழையாய்
சிரித்துவிட்டுப்போகிறாள்
சிறு பிள்ளையாய்
சினுங்குகிறது மனசு...!


ரியாஸ் ம் கலக்குங்க.

வேலன். said...

நானும்
குழந்தையாகிவிடத்தோன்றுகிறது
குழந்தைகளிடம்தானே
அதிகம் பேசுகிறாள்...!//

நானும்
குழந்தையாகிவிடத்தோன்றுகிறது
குழந்தைகளிடம்தானே
அதிகம் கொஞ்சுகிறாள்....

என வரிகள் போட்டால் நன்றாக இருக்குமா நண்பரே...

கவிதை அருமை...
வாழ்க வளமுடன்.்
வேலன்.

Swengnr said...

எவ்வளவு வளர்ந்தாலும் நாமும் குழந்தைதான்! நல்ல வரிகள்!

ஸாதிகா said...

//கண்களுக்குள்
கலவரம் செய்து போனவள்
கண்ணீருக்கு முன்
வந்துவிடுவாளா...//அருமை வரிகள்

111 said...

//
கண்களுக்குள்
கலவரம் செய்து போனவள்
கண்ணீருக்கு முன்
வந்துவிடுவாளா...! ///

உங்க குழந்தை மனசுக்காகவாவது வந்துருவாக, கவலைபடதீங்க.

அகல்விளக்கு said...

அருமை ....

வாழ்த்துக்கள்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

நிஜமாவே உங்களுக்கு குழந்தை மனசு ...

கவலைப்படாதிங்க நண்பா கூட்டிகிட்டு வந்திருவோம்....

நாடோடி said...

க‌விதை ந‌ல்லா இருக்கு ரியாஸ்...

Katz said...

//எதையோ எல்லாம்
தொலைத்துவிட்டுப்போகிறாள்
இதயத்தை மட்டும்
இறுக்கிப்பிடித்தபடி...!//

ரசித்தேன்.

"எதையோ எல்லாம்" இங்கறது
"எதை எதையோ" இன்னு இருந்த நல்லாஇருக்கும். Please dont mind

Katz said...

//எதையோ எல்லாம்
தொலைத்துவிட்டுப்போகிறாள்
இதயத்தை மட்டும்
இறுக்கிப்பிடித்தபடி...!
//
ரசித்தேன்

ஜீவன்பென்னி said...

நல்லாயிருக்கு.

வந்தாங்களா இல்லையா?

SIVAGANGA A PLACE TO LIVE said...

badhikkappattavar polum... urukkam unmayai kattugiradhu...

M. Azard (ADrockz) said...

//நானும்
குழந்தையாகிவிடத்தோன்றுகிறது
குழந்தைகளிடம்தானே
அதிகம் பேசுகிறாள்...!//
இளைஞர்களின் ஏக்கம் :P
... சூப்பர்.. வாழ்த்துக்கள்

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...