எண்ணங்களே வாழ்க்கையாக...!

செல்வந்தர்கள் தொடர்ந்து செல்வந்தர்களாகிக்கொண்டே போவதும். வறியவர்கள் தொடர்ந்து வறுமையில் வாடுவதும் வளர்ந்து வரும் நாடுகளில் இயல்பாகவே கானப்படுகிறது.. ஏன் இந்த ஏற்ற இறக்கம்..? பலமுறை நான் சிந்தித்ததுண்டு.. ஓரே சமூகத்துக்குள் பசிக்கு உணவு தேடி அலைபவனும் உண்டு,பசி என்றால் என்னவென்றே தெரியாதவனும் உண்டு.. இவை அனைத்துக்கும் என்னதான் தீர்வு.


பசித்தவனுக்கு உணவளித்தால் அவனின் அந்த நேர பசி தீரலாம்.. அது தற்காலிகம்தான். அதன் பின் அவனின் உணவுத்தேவைக்கு யார் பொறுப்பு. தொடர்ந்து ஒவவொருவராக உணவளிப்பதா.. அவ்வாறு செய்தால் அவன் பிரச்சினை தீரலாம்.. ஆனால் அதுவே தீர்வாகாது அது சாத்தியப்படவும் மாட்டாது.. ஒரே தீர்வு அவர்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்படவேண்டும் இது இரண்டு வழிகளில் நிகழலாம்.. முதலாவது குறித்த அரசாங்கத்தின் ஒரு சிறந்த திட்டத்தின் மூலமாக இரண்டாவது தானே உணர்ந்து தன் வாழ்க்கை தரத்தை உயர்த்த முயற்சிப்பதன் மூலமாக..


இதில் அரசாங்க திட்டங்கள் என்பது இலவசம் என்ற பெயரில் மக்களை சோம்பேரிகளாக்கும் திட்டங்களே.. நான் முன் கூறியது போல பசித்தவனுக்கு உணவளிப்பது போல்தான் இத்திட்டம்... உதாரணமாக இலங்கையில் தற்போது அமுலில் உள்ள "சமுர்த்தி" திட்டத்தை கூறலாம் இதில் வறிய வசதியற்ற குடும்பங்களுக்கு மாதா மாதம் குறிப்பிட்ட உதவித்தொகை வழங்கப்படுகிறது பொருட்களாக.. ஆகவே கஷ்டப்படும் குடும்பங்களுக்கு இது கொஞ்சம் நிவாரணமாக அமைந்தாலும் எத்தனை நாளைக்கு இதுவே தீர்வாக அமையும்.. வேலை ஏதும் செய்யாமல் இதையே நம்பி காலத்தை ஓட்டுபவர்கலும் உண்டு.. இவ்வாறானவர்களின் வாழ்க்கைத்தரம் எங்கே உயரும்.. தொடர்ந்தும் வறுமை வறுமை வறுமைதான்.. இங்கே அரசாங்கத்தை முழுமையாக குற்றம் பிடிக்க முடியாது.. இந்தியாவில் வறியவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் முயற்சிகளை பற்றி எனக்குத்தெரியவில்லை இந்திய நண்பர்கள் சொல்லலாம்..


இங்கு தானாக உணர்ந்து உழைத்து உயருவதே சிறந்த வழியாகலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.. இந்த உயர்வுக்கு முதலில் வழிவகுப்பது நம் எண்ணங்கள் சிந்தனைகள் மாறுபடவேண்டும்.. நம் எண்ணங்கள் எவ்வாறிருக்கிறதோ நம் செயல்களும் அவ்வாறே அமையலாம்.. நம் செயல்களை பொருத்தே நம் வாழ்கைத்தரமும் நிர்ண்யிக்கப்படுகிறது.. "எண்ணங்கள்" இதை ஆங்கிலத்தில் "Attitude" என்பார்கள்.. நம் எண்ணங்கள் சிறந்தவையாக இருந்தால் நம் செயல்களும் சிறந்தவையாகவே இருக்கும்..

உலகில் ஏற்பட்ட அத்தனை தொழில்/கைத்தொழில் புரட்சியின் ஆரம்பம் அவர்களின் எண்ணங்களில் ஏற்பட்ட மாற்றமும் விடாமுயற்சியுமே.. ஜப்பானில் சீனாவில் ஏற்பட்ட வளர்ச்சி அவர்களின் எண்ணங்கள், சிந்தனைகளில் ஏற்பட்ட வளர்ச்சியேயன்றி அவர்களுக்கு எந்தவித அதிஷ்டமும் அடிக்கவில்லை.உலக கோடீஸ்வரர்களாக பெரும் தொழிலதிபர்களாக இருப்பவர்கள் சில பேரே பரம்பரை பணக்காரர்களாக இருந்தவர்கள்.. நிறைய பேரின் வாழ்க்கை வரலாற்றை நாம் பார்த்தால் அவர்களின் எண்ணங்கள்,முயற்சி,உழைப்பு மூலமாகத்தான் வளர்ச்சியடைந்துள்ளார்கள் என்பது புரியும்..உதாரணத்திற்கு உலக பணக்காரர்களில் ஒருவரான 'Warren buffett' ஐ கூறலாம்.


இந்த பரந்துவிரிந்த உலகில் நாம் முன்னேற எத்தனையோ வழிகள் இருக்கலாம்.. அவற்றையெல்லாம் அறிந்து கொள்ள தேடல் வேண்டும்..
குறுகிய நம் சிந்தனைகள்,பார்வைகள் தூரநோக்குடையதாகவும் தெளிவானதாகவும் இருக்கவேண்டும்.. இவற்றுக்கெல்லாம் நமது எண்ணங்கள் நல்லதாகவும் மற்றவருக்கு தீங்காய் அமையாதவாறும் இருக்க வேண்டும்.. அடுத்தவரை வேதனைக்குள்ளாக்கி நாம் கானும் வளர்ச்சி என்றுமே நிலைப்பதுமில்லை வெற்றியளிப்பதுமில்லை இதை நாம் நமது அன்றாட வாழ்க்கையில் காங்கிறோம்..

எப்படி உழைப்பது,எப்படி முன்னேறுவது முடியாது, இயலாது,கடினம் என்ற மனதில் ஊறிய ஒரே எண்ணங்களை விடுத்து.. எதுவும் முடியும் முடியலாம் முயற்சித்தால் என்ற எண்ணங்களை மனதில் விதைத்து. தெளிவான் முடிவுகளை நோக்கி பயணித்தால் வாழ்க்கை பயணம் வெற்றியடையலாம்.. நம்பிக்கை கொள்வோம்.. அறிவுரைகள் சொல்லும் அனுபவமோ,வயசோ எனக்கில்லை இது என் மனதில் தோன்றியவைகள் மாத்திரமே.யாருக்கான அறிவுரையும் அல்ல..

16 comments:

pinkyrose said...

hi me the first..

pinkyrose said...

கடைத்தெருக்களில் அலையும் சிறுவர்கள்,
தட்டேந்திய முதியவர்கள் இப்படி காணும்போதெல்லம்
மனம் வெதும்பி நானும் நினைதிருக்கிறேன்!
அருமை நண்பா!

Riyas said...

//hi me the first//

pinkyrose வாங்க வாங்க வடை+சட்னி வடை சுட்ட ஆயா எல்லாம் உங்களுக்குத்தான் எடுத்துக்குங்கோ..

வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி..

நாடோடி said...

ந‌ல்ல‌ க‌ட்டுரை ரியாஸ்... ஒருவ‌னுக்கு உண‌வாக‌ மீனை கொடுப்ப‌தை விட‌ மீன் பிடிக்க‌ க‌ற்று கொடுப்ப‌தே சிற‌ந்த‌து...

க‌ரிச‌ல்கார‌ன் said...

ந‌ல்ல‌ க‌ட்டுரை ந‌ண்பா
(எப்ப‌டியெல்லாம் யோசிக்க‌றாங்க‌ப்பா)

Thomas Ruban said...

இவ்வுலகில் உழைத்து முன்னேற தயாராக எத்தனையோ பேர் உள்ளார்கள். அவர்களை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டுகொண்டு அவர்கள் முன்னேற வாய்ப்பளிக்க வேண்டும்.

பகிர்வுக்கு நன்றி நண்பா...

ராம்ஜி_யாஹூ said...

அருமையான பதிவு, இதை எழுதினாலோ அறிவுரையாக சொன்னாலோ பலருக்கு புரியாது, இதை உணர்ந்து பார்த்தல் தான் தெரியும். என் வாழ்வில் நான் பலமுறை இதை உணர்ந்து உள்ளேன்.

elamthenral said...

ந‌ல்ல‌ க‌ட்டுரை ரியாஸ்...

ஜில்தண்ணி said...

நல்ல சிந்தனை நண்பா

இலவசங்கள் நீங்கள் சொன்னது போல் கண்டிப்பாக சோம்பேறியாக்குபவை தான்

இலவசங்களை விட்டுவிட்டு அவர்கள் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கலாம்ல

நாமும் முயற்சித்து செய்வோமானால் எதுவும் சாத்தியமே :)

வாழ்த்துக்கள்

ஹேமா said...

ஆழமான சிந்தனை ரியாஸ்.வாழ்வில் முக்கியமாய் முயற்சி வேணும்.அதன் பின் அதிஸ்டம் தொடர்ந்தால் முன்னேற்றம்தான்.

செல்வா said...

அருமையான பதிவு ..
உங்கள் கருத்துக்களை நான் ஆமோதிக்கிறேன்..
உண்மையிலேயே இலவசங்களும் சலுகைகளும் சோம்பேறிகளாக்குகின்றன ..

ஜீவன்பென்னி said...

சரியா சொல்லியிருக்கீங்க. ஒரு சில மட்டுமல்ல பல விசய்ங்களை பல பேர் ஒரே கோணத்தில் சிந்திக்கிறாங்களே, வியப்புதான்.

Katz said...

அருமையான பதிவு.

ஜெய்லானி said...

@@@ஹேமா--//ஆழமான சிந்தனை ரியாஸ்.வாழ்வில் முக்கியமாய் முயற்சி வேணும்.அதன் பின் அதிஸ்டம் தொடர்ந்தால் முன்னேற்றம்தான். //

நா சொல்லலாமுன்னு வந்தேன் வடை போச்சே... பரவாயில்ல.

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

இராகவன் நைஜிரியா said...

மிக நன்றாக சொல்லியிருக்கின்றீர்கள் நண்பரே. இலவசங்கள் எந்த சமுதாயத்தையும் வளர்க்காது. நண்பர் நாடோடி அவர்கள் கூறியதைப் போல மீன் கொடுப்பதைவிட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே சிறந்தது..

அன்புடன் நான் said...

மிக நல்ல கவிதை ரியாஸ்.
தனிமனிதனை சில நேரம்... அரசுதான் வறுமைக்கு தள்ளிவிடுகிறது... இலவசங்களை கொடுத்து.

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2