தத்துவபித்துவங்கள்...!

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் ,
கழித்தல் கணக்கு போடும்போது ,
கடன் வாங்கித்தான் ஆகனும்

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் .
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் .
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் .
ஆனா...
கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ??

டிசம்பர் 31 க்கும் ஜனவரி 1 க்கும்
ஒரு நாள்தான் வித்தியாசம் .
ஆனால்,
ஜனவரி 1 க்கும் டிசம்பர் 31 க்கும்
ஒரு வருசம் வித்தியாசம் .

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்
ஹீரோ ஹோன்டா , ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!

போலீஸ் ஸ்டேசனுக்கு ஃபோன் போட்டால் போலீஸ் வரும்
ஆனா,
ரயில்வே ஸ்டேசனுக்கு ஃபோன் போட்டா ரயில் வருமா

குளவி கொட்டினா வலிக்கும் .
தேள் கொட்டினா கூட வலிக்கும் .
ஆனா
முடி கொட்டினா வலிக்குமா

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்
ஆனா,
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம் .
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம் .
ஆனா,
கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா ?

என்னதான் மனுசனுக்கு வீடு , வாசல் , காடு , கரைன்னு எல்லாம் இருந்தாலும் ,
ரயிலேறனும்னா,
ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும் . இதுதான் வாழ்க்கை .

T Nagar போனா டீ வாங்கலாம் .
ஆனால்
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா ?

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும் ,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .

கொலுசு போட்டா சத்தம் வரும் .
ஆனா,
சத்தம் போட்ட கொலுசு வருமா ?

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் .

ஆனா,
ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ?
நல்லா யோசிங்க ! குவாட்டர் கூட வராது !!!

17 comments:

ஜில்தண்ணி said...

என்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிட்டா ??

Mohamed Faaique said...

january - december matter superb....

சைவகொத்துப்பரோட்டா said...

தத்துவதிலகமே!! முடியல :))

nis said...

superb

ம.தி.சுதா said...

ஐயோ.... தாங்கமுடியலியே...... அருமை..

Jey said...

நான் ஒரு மொக்கை போட்ட... வீடு பூந்து கலைக்க்ராங்க..., இங்க...

Ahamed irshad said...

அசத்தல் ரியாஸ்...

ஸாதிகா said...

எங்கேஇருந்து பிடிச்சீங்க ரியாஸ்?சூப்பர்

அருண் பிரசாத் said...

மொக்கை... மொக்கை... மொக்கையோ மொக்கை

ஜெய்லானி said...

எனது காந்தி செத்துட்டாரா...!!!!!!!

kavisiva said...

ப்ளாக்ல மொக்கை போடலாம் ஆனால் மொக்கைல ப்ளாக் போட முடியுமா?

அய்யோ முடியல ரியாஸ் அவ்வ்வ்வ்

செல்வா said...

ஹி ஹி .. அட இங்க நம்ம படம் ஓடுது ..!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

நானும் கொஞ்சம் தத்துவபித்துவங்கள்...! வச்சிருக்கேன்.. ஒரு பதிவு போடணும்...

ஹேமா said...

அடக்கடவுளே....ரியாஸ்
நல்லாத்தானே எழுதிட்டு இருந்தீங்க !

தூயவனின் அடிமை said...

அது எப்படிங்க இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க. நல்லா தான் இருக்கு.

ttpian said...

ippatiyaa pottu thaakarathu?

Jaleela Kamal said...

தத்துவ பித்துவங்கள் அருமை, அதோடு கவிசிவா பித்துவங்க்ள் ம்ம்ம்

Vaa Kannamma Tamil Song Lyrics in English

  Maadhar mukampoal olivida vallaiyel Kaadhalai vaazhi madhi Malaranna kannaal mukamoththi yaayin Palarkaanath thoandral madhi  Vaa pada pad...