வாழலாம் வாருங்கள்..!

மனிதனாக பிறந்துவிட்டோம்
வாழ வேண்டும்
முடியும் வரை
வாழ்க்கைப்பயணம்...
கொட்டிக்கிடக்கிறது இன்பங்கள்
ஆங்காங்கே
அள்ளிக்கொள்வது
நம் கையில்
நம் மனதில்...
திறந்தே கிடக்கிறது உலகம்
திறக்க மறுப்பதென்னவோ
நம் மனதுகள்தான்
திறந்தே கிடக்கட்டும் அது...
துன்பங்கள் துயரங்கள்
கூடவே வரலாம்
நம் நிழல் போல
கடந்துசெல்லுங்கள்
காத்திருக்கலாம்
ஓர் வசந்த காலம்....
நேசியுங்கள் மனிதர்களை
பறிமாறுங்கள் புன்னகைகளை
பூக்கள் பூக்கலாம்
உங்கள் தோட்டத்திலும்...
உலகத்தை ரசியுங்கள்
குழந்தை மனதோடு
வேண்டாம்
கொள்ளை ஆசைகள்...
வாழ்ந்து பார்ப்போம்
வாருங்கள்...!

அனைத்து நண்பர்களுக்கும் ஈத் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்.. ரியாஸ்

14 comments:

Chitra said...

நேசியுங்கள் மனிதர்களை
பறிமாறுங்கள் புன்னகைகளை
பூக்கள் பூக்கலாம்
உங்கள் தோட்டத்திலும்...
உலகத்தை ரசியுங்கள்
குழந்தை மனதோடு

....Beautiful!

ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமை நண்பரே... உங்களுக்கு எனது ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

elamthenral said...

நல்ல வரிகள்.. எனது ரமலான் திருநாள் வாழ்த்துக்கள்...

http://rkguru.blogspot.com/ said...

மிக அருமை ....வாழ்த்துகள்

Riyas said...

சித்ரா அக்கா..

வெறும்பய..

புஷ்பா..

rk guru.. வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி
அனைவருக்கும் ஈத் முபாரக்..

pinkyrose said...

ஈத் முபாரக் ரியாஸ்!
நேசியுங்கள் மனிதர்களை
பறிமாறுங்கள் புன்னகைகளை
பூக்கள் பூக்கலாம்
உங்கள் தோட்டத்திலும்...
உலகத்தை ரசியுங்கள்
குழந்தை மனதோடு//

கண்டிப்பா ...

சைவகொத்துப்பரோட்டா said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், ரமலான் வாழ்த்துக்கள் நண்பா.

ஹேமா said...

கொடுப்பதற்க்குக் கையில் ஏதுமில்லை என்றெண்ண வேண்டாம்.மனம் நிறைந்த அன்பை வைத்துக்கொண்டு !

இனிய வாழ்த்துகள் ரியாஸ்.

செல்வா said...

//நம் நிழல் போல
கடந்துசெல்லுங்கள்
காத்திருக்கலாம்
ஓர் வசந்த காலம்....///

நிச்சயம் அந்த ஒரு எண்ணம்தான் மனிதர்களை மேலும் melum முன்னோக்கி இழுத்துச் செல்கிறது.!

//அனைத்து நண்பர்களுக்கும் ஈத் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்..///
உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்..!!

kavisiva said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

ஈத் முபாரக்..

எம் அப்துல் காதர் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவர்களுக்கும் இனிய ஈத் அல் ஃபித்ர் நல் வாழ்த்துகள்

Anisha Yunus said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நெஞ்சம் நிறைந்த ஈத் முபாரக்!!

வ ஸலாம்
அன்னு

Riyas said...

பிங்கி ரோஸ்
சைவகொத்துபரோட்டா
ஹேமா அக்கா
ப.செல்வகுமார்
கவிசிவா
ஸாதிகா அக்கா
எம் அப்துல் காதர்
அன்னு

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
அனைவருக்கும் ஈத் முபாரக்.

Sugar Baby Song Lyrics Thug Life

 Sugar Baby Song Lyrics In Tamil   பெண் : என்ன வேணும் உனக்கு கொட்டி கொட்டி கிடக்குது இன்னும் என்ன வேணும் உனக்கு சொர்க்கம் இங்கு இருக்கு பெண்...