ஒரு...! 17/02/2011

ஒரு ஜோக்...

அப்பா தன் மகனுக்கு கணக்குப்பாடம் சொல்லிக்கொடுக்கும் போது


அப்பா - 8x9 எவ்வளவுன்னு சொல்லு பார்ப்போம்


மகன் - 70 ப்பா


அப்பா - very good..


அம்மா - என்னங்க 8x9 பதில் 72 இல்லையா.. அவன் 70 ந்னு சொன்னதும் நீங்க very good சொல்றிங்க.


அப்பா - பதில் 72 தான் என்பது எனக்குத்தெரியும். முன்னெல்லாம் அவன் 60 ந்னு சொல்லிட்டுருந்தான் இப்ப விடைக்கு பக்கத்துல வந்துட்டான்னுதான் very good சொன்னேன்.






ஒரு கவிதை... கனவனால் மனைவிக்கு எழுதப்பட்டது.


பசியை படைத்த இறைவன்
உணவைப்படைத்தான்
தாகத்தை படைத்த இறைவன்
தண்ணீரைப்ப படைத்தான்
அமைதியான உலகை படைத்த இறைவன்
உன்னைப் படைத்தான்....


ஒரு பாடல் வரி...


மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா...?


கவிதாயினி தாமரையின் எண்ணத்தில் உதித்த அழகான வரி.. இரவு சீக்கிரம் வருமா மேற்கு திசை நோக்கி நடந்தா.. அப்போ கிழக்கு திசை நோக்கி நடந்தா இரவு லேட்டா வருமா...?


ஒரு குட்டிக்கதை...


ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்த மீனவனொருவன். தன் தொழிலுக்காக வேண்டி அதிகாலையிலயே எழுந்து மீன் பிடிப்பதற்கு தேவையான வலை ஏனைய பொருள்கள் உணவு என்பவற்றை எடுத்துக்கொண்டு கடற்கரையை நோக்கி நடந்தான்.


கடற்கரைக்குச்சென்றதும் இருளாகவேயிருந்தது. அது கடலுக்குள் பணிக்க சரியான நேரமாக அவனுக்குப்படவில்லை சரி இன்னும் கொஞ்சம் நேரம் விடியும் வரை காத்திருப்போம் என்றென்னி கடற்கரையில் உட்கார்ந்திருந்தான்.. அப்போது ஒரு பை அவன் கண்ணில் படவே அதை எடுத்து கையை உள்ளே விட்டுப்பார்த்தான் அவை வெறும் கற்களாக தோன்றியது.


பொழுது போக்கிற்காக அதை ஒவ்வொன்றாக கடலில் வீசி எறிந்துகொண்டிருந்தான்.. அவ்வாறு வீசிக்கொண்டிருக்கையில் பொழுது புலப்படவே, அந்தப்பைக்குள் கடைசியாக ஒரு கல் மீதமிருந்தது அதையும் வீசிவிட வெளியே எடுக்கும் போது சூரிய ஒளியின் உதவியுடன் அது வெறும் கல்லல்ல மானிக்ககல்லாக அவன் கண்ணில்பட்டது... அடடா இவ்வளவு நேரமும் நான் கடலுக்குள் வீசி எறிந்த கல் எல்லாம் மானிக்க கல்லாக இருந்திருக்குமோ என்ற கவலை அவன் மனதை குடைந்தது..


இதன் மூலம் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம்...









யாரும் அதிகாலையிலேயே எழுந்திருக்ககூடாது..
 
ஒரு சந்தோஷம்....
 
எனது பதிவுகள் இலங்கையை தளமாக கொண்டு வெளிவரும் சான்றோர்.com எனும் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.(எனது அனுமதியுடன்)
ராஜ ராஜ சோழன் நான். என்ற பாடல் பதிவும்
எப்பவோ பெய்த மழைத்துளிகள். என்ற கவிதை பதிவும் என் பெயர், தள முகவரியுடன் வெளியாகியுள்ளது. ஏதோ கிறுக்குகிறோம் என்ற நினைப்பில் கிறுக்கியவைகளுக்கு. இவ்வாறான் அங்கீகாரங்கள் மிக்க மகிழ்ச்சியை தருகிறது.. சான்றோர் இணையத்தளத்திற்கும் நன்றிகள்.
 
ஒரு நெருடல்...
 
ஆச்சரியமான உடலைமைப்கொண்ட சிறுவன் பற்றி நான் கடைசியாக எழுதிய 100 வது பதிவு ஆரம்பத்தில் கிடைத்த ஓட்டுகள் பின்னூட்டத்தினடிப்படையில் மனம் சந்தோஷமடைந்தாலும். இறுதியில் வந்த சில பின்னூட்டங்களினாலும், அந்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது பூரண சுகத்துடன் இருக்கிறான் என்ற செய்தி அறிந்ததும் அதை இன்னும் கொஞ்சம் ஆராய்ந்த பின்னர் பதிவிட்டிருக்கலாமே என்ற எண்ணம் மனதை கொஞ்சம் நெருடியது.. அதனால் அந்த பதிவையே நீக்கி அந்தச்சிறுவன் குணமடைந்த செய்தியை மட்டும் பதிந்திருக்கிறேன்....
 
அதை பின்னூட்டம் வாயிலாக கொஞ்சம் கார சாரமாகவேனும் அறியந்தந்த கவின் என்பருக்கு என் நன்றிகள்..
 
 
 
 

23 comments:

தங்கராசு நாகேந்திரன் said...

அனைத்தும் நல்லா இருக்கு

ஹேமா said...

வாழ்த்து,பாராட்டு எல்லாமே ரியாஸ்.அதிஷடம் வேணும் எதுக்கும்ன்னு அந்தக் குட்டிக் கதை சொல்லுது !

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா...?


கவிதாயினி தாமரையின் எண்ணத்தில் உதித்த அழகான வரி.. இரவு சீக்கிரம் வருமா மேற்கு திசை நோக்கி நடந்தா.. அப்போ கிழக்கு திசை நோக்கி நடந்தா இரவு லேட்டா வருமா...?

குட் கொஸ்டீன்!

Chitra said...

அதனால் அந்த பதிவையே நீக்கி அந்தச்சிறுவன் குணமடைந்த செய்தியை மட்டும் பதிந்திருக்கிறேன்....

... Happy to know that he is doing good. Praise the Lord!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ரியாஸ் துபாயில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? எனக்கு துபாய் ஏர்போர்ட் மட்டும்தான் தெரியும்! துபாயில் உண்மையாகவே விவேகானந்தர் தெரு இருக்கிறதா? ஹா...... ஹா.... ஹா.....!

Philosophy Prabhakaran said...

// அந்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது பூரண சுகத்துடன் இருக்கிறான் //

அப்படியா சூப்பர்...

தமிழ் உதயம் said...

அந்த சிறுவன் குறித்து வெளியிடப்பட்ட செய்தி மன நிம்மதியை தருகிறது.

Asiya Omar said...

வாழ்த்துக்கள்.நல்ல தொகுப்பு.குழந்தையை பற்றிய செய்தி மனதிற்கு நிம்மதி.

அஞ்சா சிங்கம் said...

அதை பின்னூட்டம் வாயிலாக கொஞ்சம் கார சாரமாகவேனும் அறியந்தந்த கவின் என்பருக்கு என் நன்றிகள்........///////////

உங்கள் பெருந்தன்மைக்கு பாராட்டுக்கள் ...

Riyas said...

@ தங்கராசு நாகேந்திரன்.

வருகைக்கு நன்றிங்க.

Riyas said...

//ஹேமா said...
வாழ்த்து,பாராட்டு எல்லாமே ரியாஸ்.அதிஷடம் வேணும் எதுக்கும்ன்னு அந்தக் குட்டிக் கதை சொல்லுது//

நிச்சயமாக... வருகைக்கு நன்றி ஹேமா அக்கா.

Riyas said...

// மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் said...
ரியாஸ் துபாயில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? எனக்கு துபாய் ஏர்போர்ட் மட்டும்தான் தெரியும்! துபாயில் உண்மையாகவே விவேகானந்தர் தெரு இருக்கிறதா? ஹா...... ஹா.... ஹா.....!//

வாங்க றஜீவன்.. துபாயில் விவேகானந்தர் தெரு என்ன விவேகானந்தரே இருக்காரு.. அவரு அப்போ வேலைக்கு வந்தவரு இன்னும் போகவேயில்ல ஹா ஹா

Riyas said...

@ சித்ரா மேடம்.

@ பிலாசபி பிரபாகரன்.

@ தமிழ் உதயம்

@ ஆசியா ஒமர்

@ அஞ்சா சிங்கம்

உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

சான்றோர்.com said...

வாழ்த்துக்கள் மற்றும் நன்றி ரியாஸ் உங்களைப்போல வலைப்பதிவர்களின் உதவி நிறைய எங்களுக்குத்தேவைப்படுகிறது...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தொகுப்பு ரசிக்கும்படி இருந்தது..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நாங்களும் ஓட்டு போடுவோம்ல..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அனைத்து 'ஒரு....!'-வுக்கும் நான் சொல்வது
"ஒரு 'பிரமாதம்....!' "

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்தச் சிறுவன் குணமடைந்த செய்தி நல்ல செய்திதான்...! உங்கள் பெருந்தன்மையும் நேர்மையும் கண்டு ரொம்ப மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் ரியாஸ்....!

Jana said...

குட்டிக்கதை SUPERB...

சுதர்ஷன் said...

வாழ்த்துக்கள் ..குட்டிக்கதையும் முதலாவது ஜோக்கும் சூப்பர் ..எதிர்பார்க்கவே இல்லை :)

அர்த்தமுள்ள இந்து மதம் : போகி - தைப்பொங்கல் அர்த்தம்

Jaleela Kamal said...

nallathu.

ம.தி.சுதா said...

கவிதை, நகைச்சுவை, குட்டிக்கதை சூப்பர்...

சிறுவன் விசயம் மனதை நெருடுதுங்க...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

Anonymous said...

சார்.. மேற்கு நோக்கி நடந்தா இரவு லேட்டாதான் வரும்.. கிழக்கு நோக்கி நடந்தாதான் சீக்கிரம் வரும்..

--
வாசகன்...

Vaa Kannamma Tamil Song Lyrics in English

  Maadhar mukampoal olivida vallaiyel Kaadhalai vaazhi madhi Malaranna kannaal mukamoththi yaayin Palarkaanath thoandral madhi  Vaa pada pad...