2011 ICC உலககிண்ண கிரிக்கெட் போட்டிகள் பங்களாதேஷின் டாக்காவில் கோலாகலமான முறையில் ஆரம்பமானது.இது பத்தாவது உலகக்கிண்ண போட்டித்தொடராகும். இதில் முதலாவது போட்டியாக இந்திய பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெற்றன. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியினர் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 375 என்ற மிகப்பெரும் ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக்கொண்டனர்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய சேவாக்,டெண்டுல்கர் ஜோடி ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஆடத்தொடங்கியது. இதில் சச்சின் 28 ஓட்டங்களுடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.பின் வந்த கம்பீர் 39 ஓட்டங்களை சிறப்பாக பெற்று ஆட்டமிழந்தார். மறுமுனையில் சேவாக் தனது அதிரடியானதும் பொறுமையானதுமான ஆட்டத்தினால் ஒட்டங்களை குவித்துக்கொண்டேயிருந்தார். 4 ம் இலக்க வீரராக களமிறங்கிய விராத் கோலியும் சேவாக்கும் இனைந்து 4 விக்கெட்டுக்கான இனைப்பாட்டமாக 203 ஓட்டங்களை பெற்றனர்.
இறுதியில் 140 பந்துகளுக்கு முகம்கொடுத்து 48வது ஓவரில் சேவாக 175 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழ்ந்தார்.இதில் 14 பவுண்டரிகளும் 5 சிகஸேகளும் உள்ளடக்கம் 200 ஓட்டங்களை கடந்து சச்சினின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது அவரால் முடியாமல் போனது. கடந்த வாரம் சேவாக்கின் பேட்டியொன்றில் தான் இதுவரை 50 ஓவர்கள் முழுமையாக விளையாடியதில்லை என்றும் இம்முறை முயற்சி செயவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் 50 ஓவர் நிறைவடைய 15 பந்துகள் எஞ்சியிருக்கையில் சகீப் அல் ஹசனின் பந்தில் ஆட்டமிழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இறுதிவரை நின்றிருந்தால் இன்னுமொரு இரட்டைச்சதம் சேர்ந்திருக்கலாம் ஒரு நாள் போட்டி வரலாற்றில்.
இறுதி வரை மிக நேர்த்தியாக துடுப்பெடுத்தாடிய விராத் கோலி 100 ஓட்டங்களை எடுத்தார் இதில் 8 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் உள்ளடங்கும். அண்மைக்காலமாக இந்தியாவின் இளம் துடிப்புள்ள நம்பகமான துடுப்பாட்ட வீரராக மிளிர்ந்து வருகிறார் இவர்.பங்களாதேஷின் பந்துவீச்சை பொருத்தவரை எவரும் சிறப்பாக பந்துவீசியிருக்கவில்லை. வழமையாக வேக பந்துவீச்சில் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் சுழல் பந்துவீச்சு மூலம் விக்கட்டுக்களை கைப்பற்றும் பங்களாதேஷ் சேவாக் மற்றும் கோலியின் அதிரடிக்கு முன்னால் எதுவும் எடுபடவில்லை.
பங்களாதேஷின் துடுப்பாட்டத்தை பொருத்தவரை 375 என்ற மிகப்பெரிய ஓட்ட இலக்கை பெறுவது சாத்தியமில்லை என ஆரம்பத்திலேயே நினைத்திருக்க கூடும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஓட்டங்களை பெறலாம என்ற நோக்கிலேயே துடுப்பெடுத்தாடினார்கள். வழமையாக அதிரடியாக ஆடும் தமீம் இக்பால் இதில் கொஞ்சம் பொறுமையாக விளையாடி 70 ஓட்டங்களுடன் ஆட்டமிழ்ந்தார். என்னும் சிறப்பாக ஆடியிருந்தார். ஏனையவர்கள் இம்ருல் கைஸ் 34, சித்திக் 37, ஷகீப் 55 என ஓட்டங்களை குவித்தார்கள் இறுதியில் 9 விக்கெட்டுக்களை இழந்து 50 ஓவர் முடிவில் 283 ஓட்டங்களைப்பெற்றது இந்திய பந்துவீச்சில் அண்மைக்காலமாக சிறப்பாக பந்துவீசிவரும் முனாப் படேல் 4 விக்கெட்டுக்களை பெற்றார். பங்களாதேஷ் மரியாதையான தோல்வியையும் இந்தியா 87 ஓட்டங்களினால் வெற்றியையும் பெற்றுக்கொண்டது.
9 comments:
சூடான உடனடி விமர்சனம்.உலகச்கோப்பை என்று தான் சொல்வது வழக்கம்,உலகக்கிண்ணம் புதுசாக இருக்கு!
@ வாங்க ஆசியா அக்கா,
//உலகச்கோப்பை என்று தான் சொல்வது வழக்கம்,உலகக்கிண்ணம் புதுசாக இருக்கு//
இலங்கை பேச்சு வழக்கில் கிண்ணம் என்றுதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதுதான் இங்கேயும்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
Nalla Vimarsanam...
நண்பரே உங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்துள்ளேன். நேரம் கிடைக்கும் போது வருகை தரவும்.
http://blogintamil.blogspot.com/2011/02/6-sunday-in-valaichcharam-rahim-gazali.html
பார்த்தா இந்திய ரீம் அனைவருமே போர்ம்லதான் உள்ளார்கள்போல! வாய்ப்பக்களும் அதிகமாகவே தெரியுது..
ஓகே.
வாக்கிட்டு விட்டேன்.
நடத்துங்க...
ஆட்டத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறீர்கள். பகிர்விக்கு நன்றிகள்..
அஸ்ஸலாமு அழைக்கும்
உலக கிண்ணம் சிலோன் பாஸை அருமை.
அம்மா...என்ன அடி சேவாக் விராட்!!
ஆனால் அவ்வாறு அடித்திருக்கா விட்டால் இந்தியா சிக்கலில் மாட்டி இருக்கும் என பாஸ்!!
நல்ல காலம்...
பங்களாதேஷ் களைத்த விதம் அருமை..
Post a Comment