உலகிலேயே அழகிய கிராமம்...!

ஏதாவது மொக்கைய போட்டு நாங்களும் பதிவு போடுவம்ல என்று சமாளிச்சிக்கிட்டிருந்தா.. ஊரைப்பத்தி தொடர்பதிவு எழுதனும்னு கோர்த்துவிட்டுட்டாங்க சகோ ஆமினா.. ரொம்ப நன்றி ஆமினா என்னையும் ஒரு பதிவரா மதித்து அழைத்ததற்கு சரி விஷயத்துக்கு போவோம்..   எங்க ஊருபபத்தி சொல்லனும்னா பெரிசா ஒன்னுமில்லங்க இருந்தாலும் சிறிசா சொல்றன்,, இப்போது வெளிநாட்டில் இருப்பதால் ஊரின் புகைப்படங்கள் இனைக்க முடியவில்லை..

இஹல புளியன் குளம்..
       
இதுதாங்க என் கிராமத்தின் பெயர் 100% இது ஒரு கிராமம்தான். இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அநுராதபுர மாவட்டத்தில் கொழும்பு-அநுராதபுரம்/யாழ்ப்பாணம் பிரதான வீதியில் மரதங்கடவள டவுன் இருக்கிறது.
அதிலிருந்து 2 கிலோமீற்றர் சென்றால் இந்த ஊரை அடையலாம்.. இயற்கை காடுகளால் சூழப்பட்டிருக்கும் ஊரின் ஆரம்பத்திலும் இறுதியிலும் இரண்டு குளங்கள் இருக்கின்றன. இங்கே படத்தில் உள்ளது போன்றே இருக்கும் குளத்தோடு ஒற்றி ஒரு மலைத்தொடர்..

எனது உம்மா  வாப்பா   இருவரும் பிறந்தது இந்த கிராமத்தில்தான்.. எங்கள் ஊரில் 350 குடும்பங்கள் வசிக்கின்றன்ர் யாவரும் தமிழ் பேசுபவர்கள்தான்.. ஆனாலும்
சுற்றிலும் சிங்கள கிராமங்கள்தான். தொழிலாக விவசாயம், வியாபாரம் போன்றவை பிரதானம். அரச தொழில்கள்,  அலுவலக வேலைகளில் ஈடுபடுவோர் மிகக்குறைவு. ஆரம்பக்கல்வியை அனைவரும் ஆர்வத்துடன் தொடர்ந்தாலும் உயர்கல்வி கற்பதற்கு வசதி வாய்ப்புகளோ கல்வி நிலையங்களோ இல்லாததால்.. கல்வியில் கொஞ்சம் பின் தங்கியே கானப்படுகின்றது.  தற்போது இளைஞர்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்கு அதிகம் இடம்பெயர்கின்றனர்.. அதில் நானும் ஒருவன்.
எங்கள் வீட்டு முற்றத்து பூ மரம் ஒன்று,,,

எங்கள் ஊரைப்பற்றி மேலதிகமாக சொல்லப்போனால்,, வரலாற்று சிறப்புமிக்க
சீகிரிய   குண்று 30 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது இலங்கையின் சிங்கள் மண்ணனான காசியப்பன் இந்த மலையிலேயே வாழ்ந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.. ஒரு சிங்கம் படுத்திருப்பது போன்ற வடிவில் அமைந்துள்ள இம்மலையின் உச்சியில் மண்ணன் குளிக்க நீர்த்தடாகம் அமைத்திருக்கிறார்கள் அந்தக்காலத்திலேயே,  பெரிய ஆச்சர்யம் இது. கீழே  படத்தில் கானலாம்..
மலையின் சுவர்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்களும் புகழ்பெற்றவை இது இந்தியாவின் அஜெந்தா ஓவியங்களை ஒத்ததாக கருதப்படுகின்றது....................



                            

 இலங்கையில் புகழ்பெற்ற கலாவெவ குளம்.. எங்கள் ஊரிலிருந்து 10 KM தொலைவில் தாதுசேன என்ற சிங்கள மன்னனால் கட்டப்பட்டது 5ம் நூற்றாண்டு காலப்பகுதியில். இதன் குளக்கட்டு அனையின் நீளம் மட்டும் 7 கிலோமீற்றர்கள். சிங்கள மனனர்கள் நாட்டுக்கு என்ன செய்யாவிட்டாலும் எல்லா பகுதிகளிலும் குளங்களை கட்டிச்சென்றுள்ளனர். அதனால் இப்போது ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைகின்றனர்..   
                              
                                                  கலாவெவ குளத்து வான்.
இவர்களும் எங்கள் சொந்தக்காரர்கள்தான் அவ்வப்போது ஊருக்குள் வந்து நலம் விசாரித்து செல்வார்கள்,,
       
இதுவே போதுமென்று நினைக்கிறேன் எனது கிராமத்தை பற்றிய அநுபவம். இத்தொடர் பதிவை தொடர அழைப்பது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, கவிப்பேரரசு வைரமுத்து , இசைப்புயல் ரஹ்மான், இவங்களல்லாம் அழைக்கலாம்னு பார்த்தா இவங்களுக்கு பிளாக இல்லையாமே.. அதனாலே அந்த ஐடியாவ கைவிட்டு இவங்கள அழைக்கிறேன்..

                     

அப்பாடா கோர்த்துவிட்டாச்சு,, 

                                                                                                                                              

27 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சூப்பர்...

மாய உலகம் said...

super place wow

சென்னை பித்தன் said...

ஊர் ரொம்ப அழகு.

HajasreeN said...

wow lanka wa pathi iwalawu supr a sonna ore aalu biss ninga weldone

Anonymous said...

சிகிரியா அந்தப்பக்கம் எல்லாம் இதுவரை நான் வந்ததில்லை. வாழ் நாளில் ஒருக்காவேனும் நான் பார்க்க ஆசைப்படும் இடங்கள்...

Anonymous said...

கிராம புற வாழ்வு என்றாலே அது ஒரு அழகிய வாழ்வு தான்...

MANO நாஞ்சில் மனோ said...

அழகான ஊர்.......!!!!!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

தங்கள் மேல் ஸலாம் உண்டாவதாக சகோ.ரியாஸ்.

ஒருமுறை கொழும்பு வந்திருக்கிறேன்..! "என்னடா..! இவங்க வெட்டவெளி முழுக்க ஏசி வச்சி இருக்காங்களேன்னு.." நினைத்தேன்..! அந்த அளவுக்கு... இலங்கை என்றாலே பசுமை... சாரல்... குளுமை... மரங்கள்... அழகோ அழகு..! மாஷாஅல்லாஹ்..!

பூரண அமைதி மட்டும் நிலவினால்... போட்டி போட்டுக்கொண்டு சுற்றுலா வாசிகள் வரக்கூடிய நாடு சகோ..!

உங்கள் படங்களை பார்க்கும் போதும்... பதிவை படிக்கும் போதும்... அதே எஃப்ஃபெக்ட்..!

என்னையும் கோர்த்து விட்டாச்சா..!? நன்றி சகோ.ரியாஸ்..!

ஆமினா said...

ஆஹா....

எவ்வளவு அழகான ஊர்..... தலைப்பை பார்த்து கேலியா கமெண்ட் போட தான் வந்தேன். ஆனா உண்மையிலேயே உலகிலேயே அழகான ஊர் தான். தடாகம் போட்டோ இன்னும் அதிக பிரம்மிப்பை ஏற்படுத்துது....

அழகான புகைபடங்களுடன் கூடிய அழகான விவரங்கள் அடங்கிய பதிவு

வாழ்த்துக்கள்

//என்னையும் ஒரு பதிவரா மதித்து அழைத்ததற்கு//
அட என்னையே பதிவரா ஏத்துக்கிட்டாங்களே? அந்த கொடுமைய எங்கே போய் சொல்றது? எனக்கு நீங்க எவ்வளவோ தேவல பாஸ்!!!

Angel said...

உங்கள் ஊர் ரொம்ப அழகா இருக்கு .பச்சை பசுமையா !!!.
கொழும்பு விமான நிலையத்தில லேன்ட் ஆகும்போது தொலைவிலிருந்து பார்த்தேன் .கண்ணுக்கெட்டிய தூரம்எல்லாமே பச்சை பசுமை .அருமையான பகிர்வு .
இன்று cathy cassidy என்ற எழுத்தாளரின் புத்தகத்தில் படித்தேன் அவர் குறிப்பிட்டு இருக்கிறார் "Your favorite place in the world?என்ற கேள்விக்கு
either the Galloway hills or westcoast of ireland
BUT SRILANKA IS AWESOME !!

இந்த படங்களை பார்க்கும்போது தான் புரிகிறது .

Mohamed Faaique said...

ஏன் ரியாஸ் ஏன்???? உங்க பக்கதுக்கு வந்தேனா... 2 ஓட்டு போட்டேனா, கொம்மன்ஸ்`னு சொல்லி ஒரு மொக்கய போட்டேனா`னு இருந்தவனுக்கு ஷார்ர்ப்பா ஒரு ஆப்பு வச்சிருக்கீங்க...

னன் பதிவுலகத்துக்கு வந்து ஒரு வருசம் பூர்த்தி ஆகுரதுக்கு என்ன உருப்படியா பண்ணலாம்`னு நெனச்சிடு இருந்தேன். இதுவும் நல்லாதான் இருக்கு...
நன்றி

Mahan.Thamesh said...

நல்லது நண்பா

Unknown said...

அருமையான ஊர் பாஸ்,,இத்தனை சிறப்புகளை அருகே கொண்டிருக்கிறதே...அழகு!!
ஹிஹி கொய்யாலே...வைரமுத்து கேக்குதோ!!!ம்ம்ம்
நன்றிகள் தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு !!!
தொடருகிறேன் சீக்கிரமாய் ஹிஹி

Unknown said...

SUPER BUDDY....
INSHA ALLAH.ORU NAAL UNGA NAATIRKU VARANUM

Karthikeyan Rajendran said...

சிலோனிலிருந்து வந்த சின்னக்குட்டி, உங்கள் ஊரை பற்றிய விளக்கம் அருமை , வந்து பக்க ஆசைதான் இந்தியாவை 2030 க்குள் சுற்றி விட்டு உங்கள் ஊருக்கு கண்டிப்பா வருவேன், அது வரை அந்த பூச்செடியை பத்திரமா பாத்துக்கங்க

இராஜராஜேஸ்வரி said...

அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

நாடோடி said...

ஊரை பற்றிய பதிவு படங்களுடன் அழகாக் மிளிர்கிறது... தொடருங்கள்..

sudarsan said...

it is a beautiful village. vazhthukal. sudarsan

S.Kumar said...

ஊர் ரொம்ப அழகு.

ஹுஸைனம்மா said...

உங்க ஊரைப் பாத்தா பொறாமை வருது. அதுவும், அந்த மலைமீது குளங்கள்.. படம் அருமை!!

//சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, கவிப்பேரரசு வைரமுத்து , இசைப்புயல் ரஹ்மான், இவங்களல்லாம் அழைக்கலாம்னு பார்த்தா இவங்களுக்கு பிளாக இல்லையாமே..//

என்னத்த பெரிய மனுசங்க இவங்க, ஒரு பிளாக் வச்சுக்கத் தெரியல... சரி விடுங்க, உங்க அழைப்பை ஏற்று எழுத அவங்களுக்குக் கொடுப்பினை இல்லை. :-)))))))

Riyas said...

இந்த பதிவை பார்வையிட்ட கருத்துச்சொன்ன வாழ்த்துச்சொன்ன ஓட்டுப்போட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி,,,

நிரூபன் said...

டெம்பிளேட் மாற்றியிருக்கிறீங்க. சூப்பரா இருக்கு.
முன்பு போல் அல்லாது,
டெம்பிளேட் ஈஸியாக ஓப்பின் ஆகுது.
வாழ்த்துக்கள் சகோ.

நிரூபன் said...

வணக்கம் பாஸ், மண் வாசனையை மீட்டிப் பார்க்கும் வண்ணக் ஊர் நினைவுகளைச் சுமந்த அருமையான ஒரு பதிவினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

//அநுராதபுர மாவட்டத்தில் கொழும்பு-அநுராதபுரம்/யாழ்ப்பாணம் பிரதான வீதியில் மரதங்கடவள டவுன் இருக்கிறது.//

பல வருடங்களுக்கு முன்னர், இந்தப் பகுதியால் பயணம் செய்யும் போது ஆற்றில் சிங்கள குட்டிகள் குளிப்பதைப் பார்த்து, நான் அசடு வழிந்திருக்கேன் பாஸ்.

நிரூபன் said...

மச்சாங்க், நீங்க ரொம்ப கொடுத்து வைச்ச ஆளுங்க. கலா வாவிக்கு கிட்டயா இருந்திருக்கிறீங்க.
கலக்கல நினைவுகள் இன்னும் அதிகமாக உங்களிடம் இருக்கும் என நினைக்கின்றேன்.

தொடர் பதிவிற்கான அழைப்பிற்கு நன்றி,
படிக்கும் போதே
‘அடேய் நீருபன் நாறப் பயலே, ரொம்ப லேட்டா வந்து இப்படிச் சொல்லுறியா’ என்று கோவிச்சுக்க வேண்டாம்.

ஈழ வயல்களுக்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் எனும் தொடர் மூலம்,
அரசியல் கலப்படமற்று, நடு நிலையான பார்வையுடன் ஈழம் பற்றிய ஒரு தொடரை எழுதி வருகின்றேன். தற்போது, சிறிது இடை வேளை கொடுத்து,
அந்தத் தொடரை நிறுத்தி வைத்திருக்கின்றேன்.
அத் தொடரில் எங்கள் ஊர் பற்றிய வர்ணனைகள், அழகுச் சிறப்புக்களைப் பகிர்ந்து வருகின்றேன்.

ஆனாலும், உங்கள் அழைப்பை ஏற்று, மீண்டும் ஒரு முறை இன்னோர் பதிவினூடாகவும், ஊர் பற்றிய சிறப்புக்களைப் பகிர்ந்து கொள்கின்றேன் சகோ.

தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.

நிரூபன் said...

http://www.thamilnattu.com/2011/05/blog-post_25.html


இந்த இணைப்பில் நான்கு பாகங்கள் வரை எம் ஊரின் சிறப்பினை மாத்திரம் எழுதியிருக்கின்றேன்,
நேரம் இருக்கும் போது ஒரு தடவை படிச்சுப் பாருங்கள் சகோ.

Riyas said...

@நிரூபன்

எதுக்கு சகோ.. மன்னிப்பெல்லாம் விடுங்க,,

நீங்க முன்னமே எழுதியது தெரியாமல் நாந்தான் மீண்டும் அழைத்துவிடேன்,, பரவாயில்லை நன்றி பாஸ்

STAR TV said...

Super Poems

www.kalawewa1.blogspot.com

Kanguva Mannippu Song Lyrics

Mannippu Song Lyrics in Kanguva      Mannippu Song Lyrics in English Aaraaro Aariraro Aaraari Raaro Aaraaro Aariraro Aaro Aaro Aariraro Aara...