பகலில் ஓர் நிலவு..!

எந்த அறிவியலும் சொன்னதில்லை
பகலில் நிலவு வந்ததாய்
என் வீட்டு சாலையில் மட்டும்
ஓர் அதிசயமாய் அவள்...

ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தது
நானும்தான்
நியுற்றனுக்கு ஆப்பில்
எனக்கு அவள்...

உன் சினுங்கlலைத்தான்
கற்றுக்கொண்டதோ
வளையல்களும்
கொலுசுகளும்...

வசந்த காலம்தான்
வறண்ட பாலைவனமெங்கும்
உன் ஞாபகங்களும்
என்னோடு அலைவதால்...

22 comments:

சே.குமார் said...

நல்ல கவிதை...
சில இடங்களில் எழுத்துப் பிழைகளை சரி செய்யவும்...
கவிதைக்கு வாழ்த்துக்கள்.
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Unknown said...

நன்று வாழ்த்துக்கள்

Riyas said...

@ நன்றி சே குமார்..

தொடர்ச்சியாய் உங்கள் ஆதரவிற்கு..

Riyas said...

@நன்றி ரியாஸ் அஹமது

அனைவருக்கும் நண்பர்தின வாழ்த்துக்கள்

கிராமத்து காக்கை said...

நினைவு கவிதை அருமை

ஆமினா said...

//எந்த அறிவியலும் சொன்னதில்லை
பகலில் நிலவு வந்ததாய்//

எங்க ஊர்லலாம் பகல்லையும் வானத்துல நிலா வருமே... வெள்ள கலருல இருக்கும்? நீங்க எந்த ஊரு? அங்கே அவுக மட்டும் தான் வருவாகளோ ?:))

Mohamed Faaique said...

சூப்பர் கவிதை...
திருப்பி திருப்பி படித்துப் பார்த்தேன்...
சூப்பரா இருக்கு...

Mohamed Faaique said...

நீங்க கண்ட உலகம்” என்னாச்சு????

ஹேமா said...

நியூற்றனுக்கு அடுத்து ரியாஸ் ன் கண்டுபிடிப்பு.காதல்ன்னா சும்மாவா !

Riyas said...

@கிராமத்து காக்கை

வாங்க சார் வருகைக்கு நன்றி..

Riyas said...

@ஆமினா

வாங்க ஆமினா..

//எங்க ஊர்லலாம் பகல்லையும் வானத்துல நிலா வருமே... வெள்ள கலருல// என்னது பகல்ல வருமா அது சூரியனா இருக்கப்போவது நல்லா பாருங்க..

நன்றி

Riyas said...

@Mohamed Faaique.

வாங்க நண்பரே ரொம்ப நான்..

//நீங்க கண்ட உலகம்” என்னாச்சு???//

அதெத்தான் இங்கிலிசுல Riyas's என்று போட்டிருக்கம்ல

Riyas said...

@ஹேமா

வாங்க ஹேமா அக்கா.. காதல் கவிதை என்றாலே கற்பனை கொஞ்சம் அதிகமாகத்தான் வருது..

வருகைக்கு நன்றி..

அந்நியன் 2 said...

கவிதை எதார்த்தம்.

வாழ்த்துக்கள் கவிஞரே!

Reverie said...

என் உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

Unknown said...

//உன் சினுங்கlலைத்தான்
கற்றுக்கொண்டதோ
வளையல்களும்
கொலுசுகளும்...//


இனிய வரிகள்!
அழகிய கற்பனை!

வாழ்த்துக்கள்!

புலவர் சா இராமாநுசம்

மாய உலகம் said...

ஞாபகங்கள் அலைந்து அருமை நண்பா

நிரூபன் said...

பகலில் ஓர் நிலவாக, காதலியைத் தரிசிக்கும் காதலனின் உள்ளத்து உணர்வுகளைக் கவிதை தாங்கி வந்திருக்கிறது.

Anonymous said...

வரிகள் சூப்பர் பாஸ் ..

arasan said...

சிந்தனைகள் அனைத்தும் மிக சிறப்பு வாழ்த்துகள்

பாலா said...

காதல் ரசம் சொட்டுகிறேது. ஒருதலைக்காதல் ரசம்.

இராஜராஜேஸ்வரி said...

வசந்த காலம்தான்
வறண்ட பாலைவனமெங்கும்
உன் ஞாபகங்களும்
என்னோடு அலைவதால்...//

வாழ்த்துக்கள்,

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...