அரேபியாவிலும் அகதிகள்...!

நாட்டைத்துறந்து
வீட்டைத்துறந்து
வந்தவர்கள்தான் அகதிகளா..
நாங்களும் அகதிகள்தான்
பாலைவன தேசம் நோக்கிய்
அகதிகள்
வேலைக்காகவேண்டி
வயிற்றுப்பிழைப்புக்காக
அகதியானவர்கள்..
உடல்கள் மடடுமே இங்கே
உணர்வுகள் அங்கே
வறுமை போக்க
வழி தேடி வந்தவர்கள்
வாழ்க்கை பயணத்துக்கு
வழி தேடி வந்தவர்கள்..
பணம்
உடம்பின் வலி நீக்கினாலும்
உணர்வின் வலி
நீக்குவதில்லை..
ஆயிரமாயிரம்
திர்ஹம்கள் தினார்கள்
ரியாள்கள்
உழைத்தாலும்
ஒரு ரூபாய்க்கான
அன்பையும் அரவனைப்பையும்
வாங்க முடிவதில்லை
இங்கே...
கணினிகளும்
கைத்தொலைபேசிகளும்தான்
எங்கள் உறவினர்கள்...
பிள்ளைகளை பிரிந்த தகப்பன்..
பெற்றோரை பிரிந்த பிள்ளை..
மனைவியை பிரிந்த கனவன்..
ஐம்பதை தொடும் டிகிரி உஷ்னத்தில்
உருகவேண்டிய நிலை..
வெளியில் வேலை
செய்பவர்கள் நிலை
நினைத்தாலே மனசு சுடுகிறது
உடம்பு வேர்க்கிறது.
இருக்கிப்பிடிக்கவேண்டியிருக்கிறது
இதயத்தை மட்டுமல்ல
உணர்வுகளையும்தான்..
நினைவுகளை உசுப்பிவிடும்
இரவுகளில்
இருள் மட்டுமே துனை..
திருமனமான நண்பனொருவன்
தினமும்
முத்தம் கொடுக்கிறான்
தன்
கைத்தொலைபேசிக்கு!!!!

 VOTE PLS..

16 comments:

Chitra said...

உடம்பின் வலி நீக்கினாலும்
உணர்வின் வலி
நீக்குவதில்லை..


..... இந்த வரிகளில் பொதிந்து இருக்கும் வலிகள் புரிகிறது.

MANO நாஞ்சில் மனோ said...

அடடா சோகத்தை அப்பிடியே புழுஞ்சிட்டீங்க சரியாக....!!!

MANO நாஞ்சில் மனோ said...

தினமும்
முத்தம் கொடுக்கிறான்
தன்
கைத்தொலைபேசிக்கு!!!!//

நண்பா ஒரு நண்பனில்லை எல்லாருமே செல்போனில்தான் வாழ்க்கை நடத்துகிறோம் வளைகுடாவில்.....

vidivelli said...

உறவுகளை சுகங்களை பிரிந்து வாழும் ஏக்கம் கவிதையில் வழிகிறது...
என்ன செய்வது உயிர் வாழ பணம் தேவை..அதனால் சுகங்களை எல்லாம் தொலைக்க வேண்டியதாயிற்று...
அழகான உணர்வுகள் வெளிப்படும் கவிதை...

http://sempakam.blogspot.com/

சே.குமார் said...

வலி நிறைந்த கவிதை.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மனதை நெருடும் கவிதை...

ஆமினா said...

வலி :(

arasan said...

வலிகளை உருக்கி ஒரு நிதர்சன கவிதை ...
ஏக்கங்கள் நிறைவேறட்டும் ...

Unknown said...

வேதனை வேதனை வேதனை-கவிதை
விளம்பிடும் சொல்லெலாம் வேதனை!
சோதனை வாழ்வே சோதனை-நெஞ்சில்
சோகமே மிஞ்சிட வேதனை

புலவர் சா இராமாநுசம்

Mohamed Faaique said...

///திருமனமான நண்பனொருவன்
தினமும்
முத்தம் கொடுக்கிறான்
தன்
கைத்தொலைபேசிக்கு!!!!///

இண்டெர்னெட்`ம், தொலைபேசியிலும்தான் வாழ்க்கை நடத்துகின்றனர்...

மாய உலகம் said...

பிரிவு - கவலை - கஷ்டம் - என அனைத்தும் சுட்டியுள்ள பதிவில் வேதணை மிஞ்சியிருக்கிறது... ஆதங்கம்

Anonymous said...

வலி நிறைந்த கவிதை...

Karthikeyan Rajendran said...

பிள்ளைகளை பிரிந்த தகப்பன்..
பெற்றோரை பிரிந்த பிள்ளை..
மனைவியை பிரிந்த கனவன்..
ஐம்பதை தொடும் டிகிரி உஷ்னத்தில்
உருகவேண்டிய நிலை.

வாழ்த்துக்கள்.
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.ஹ்த்ம்ல்
நம்ம கடை பக்கமும் கொஞ்சம் வந்து போகலாமே!!!!!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

நம் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!

சகோ.ரியாஸ்,
உருகி எழுதி படிப்போரை உருக்கி விடுகிறீர்கள்.

//உணர்வின் வலி
நீக்குவதில்லை..//

இருபத்தொன்பது நாட்கள் விரக்தி வீராப்பு யாவும் முப்பதாவது நாள் காணாமல் போகிறது..!

மீண்டும்... மீண்டும்... இதுவே ஒவ்வோர் மாதமும் தொடர்கதையாகிறது..!

29 நாட்களின் உணர்வின் வலியை ஒரேநாளில் வெல்வது என்னவோ ரியால்களும் தினார்களும் திர்ஹாம்களும் தானே..!

என்ன செய்வது..? வேறு வழியின்றி விரும்பி ஏற்றுக்கொண்ட அகதிவாழ்வை..!

நாடோடி said...

கந்தக பூமியின் உண்மையான நிகழ்வை சொல்லுகிறது.. ):

அம்பலத்தார் said...

உறைக்கும் உண்மைகளை உணர்வுடன் பகிர்ந்துள்ளீர்கள்

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2