வழி நெடுகே தொடருங்கள்...!



வாழ்க்கை வாழ்வதற்கே......!

பிறந்து விட்டோம்
வாழ்வதற்காகவே.,
வந்த பாதைகள் எல்லாம்
வேதனை முற்களால்
நிரம்பியிருக்கலாம்.
வலிகள் தொடரலாம் 
வழி நெடுகே...!

வழியில் 
இடருகள் வந்தால் 
முட்டிமோதி தள்ளிவிட்டு 
பயணத்தை தொடரும் 
தொடரூந்து போல 
தொடரலாம்
நாம் போகும் 
இடத்தை நோக்கி 
மனதில் உறுதியாய்.....!

கண்னீர் வரலாம் 
கண்கள் உள்ள்வரை
கவலைகள் வரலாம் 
காலங்கள் உள்ளவரை 
கண்னீரானாலும் 
கவலைகளானாலும் 
நிச்சயம் 
ஓர் நாள் 
மறையலாம்.
நம்பிக்கையாய்
நடைபோட்டால்.....!

இப்பயனம் 
எத்தனை போராட்டமானது 
இவ்வழியால் போனவர்கள் 
சொல்லலாம்...
போய்ச்சேர்ந்தவர்கள்
யாவரும் 
இவ்வழியை கடந்தவர்களே
இவ்வலியை கடந்தவர்களே...!

இரவும் பகலும் 
எம்மைத்தொடர்வது போல
இன்பமும் 
துன்பமும் 
எம்மைத்தொடரலாம்
செல்லும் இடம் வரை.
புன்னகை 
ஒளியை வீசியவாரு 
துன்ப இருளை
கடந்து செல்லலாம்
மழலை மனதோடு............!

நிழலுக்காய் ஏங்கும் 
பாலைவன பயணியாய்
நிம்மதிக்காய் 
தவிக்கிறது எமதுள்ளங்கள்.
கிடைத்தவறறை 
பெற்றுக்கொள்ளுங்கள்.
நிச்சயம் ஓர்நாள்
நிழலும் வரலாம் 
நிம்மதியும் வரலாம் 
பாலைவனம் 
பசுமையாகவும் மாறலாம்...!

வெற்றியின் சுவை 
வென்றவனுக்கே தெரியும்
வாழ்க்கையின் சுவை 
வாழ்ந்தவனுக்கே தெரியும்.
வழி நெடுகே தொடருங்கள்
வாழ்க்கை 
வாழ்வதற்கே......!
  
மீள்பதிவாக இங்கே.... 
  
பிடித்திருந்தால் ஏதாவது சொல்லுங்கள்...
Vote Pls

18 comments:

Karthikeyan Rajendran said...

-- யோசிச்சு எழுதுவீங்களோ!!!!!!!!!!
நல்லாருக்கு நண்பா ..................

Unknown said...

அருமை அருமை சகோ

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வெற்றியின் சுவை
வென்றவனுக்கே தெரியும்
வாழ்க்கையின் சுவை
வாழ்ந்தவனுக்கே தெரியும்.
வழி நெடுகே தொடருங்கள்
வாழ்க்கை
வாழ்வதற்கே......!//

சுவையாகவே உள்ளன, நம்பிக்கைகள்.

ஹேமா said...

நம்பிக்கை தரும் வரிகள்.சோர்ந்த மனதையும் தட்டி எழுப்புகிறது ரியாஸ் !

நிரூபன் said...

வணக்கம் சகோ, பாலைவனத்தில்- மத்திய கிழக்கில்...பல பேர் சென்ற வழியினைப் பின் தொடர்ந்து நாளை எம் வாழ்வில் விடியல் கிடைக்கும் எனும் ஆதங்கத்தோடு, வடிக்கப்பட்டுள்ள கவிதை, எதிர்பார்ப்புக்கள் நிறைந்த, எம் உறவுகள் பலரின் எண்ணங்களைத் தாங்கி வந்திருக்கிறது.
இது பாலைவனத்தில் வாழ்வோருக்கு மட்டுமல்ல. அனைவருக்குமே பொருத்தமான கவிதை சகோ.

முன்னேற நினைக்கும் உள்ளங்கள் அனைத்திற்கும் பொருத்தமான அழகிய கவிதை சகோ.

மாய உலகம் said...

//கண்னீர் வரலாம்
கண்கள் உள்ள்வரை
கவலைகள் வரலாம்
காலங்கள் உள்ளவரை
கண்னீரானாலும்
கவலைகளானாலும்
நிச்சயம்
ஓர் நாள்
மறையலாம்.
நம்பிக்கையாய்
நடைபோட்டால்.....!//

நண்பரே... உடைந்திருந்த மனதுக்கெல்லாம் உரங்களாய் உங்கள் கவிதையின் வரிகள்... நம்பிக்கையாய் நடைபோட்டபடி உங்களது நண்பன் அருமை..

கூடல் பாலா said...

காயம் பட்ட இதயத்திற்கு அருமையான மருந்தளித்துள்ளீர்கள் .....அருமை !

Angel said...

//கண்னீரானாலும்
கவலைகளானாலும்
நிச்சயம்
ஓர் நாள்
மறையலாம்.
நம்பிக்கையாய்
நடைபோட்டால்.....!//

நம்பிக்கை தான் வாழ்க்கை.அருமையான வரிகள் .

ஆமினா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

நம்பிக்கை தரும் வரிகள்

அருமை சகோ

Reverie said...

நம்பிக்கை தரும் வரிகள்... ரியாஸ் ...

Mohamed Faaique said...

கடைசி வரிகள் சூப்பர்..

ரமழான் வாழ்த்துக்கள்

சே.குமார் said...

அருமை... அருமை...

பாலா said...

வாழ்க்கையின் சுவை வாழ்ந்தவனுக்கே தெரியும். இன்றைய இளைஞர்கள் பலர் வாழ்வில் நம்பிக்கை வைக்க அருமையான கவிதை. நன்றி.

Anonymous said...

வரிகள் அபாரம் , நம்பிக்கை தொடரட்டும்..

arasan said...

வார்த்தைகளை தொடுத்த விதம் அருமை .. வாழ்த்துக்கள்

kobiraj said...

வழியில்
இடருகள் வந்தால்
முட்டிமோதி தள்ளிவிட்டு
பயணத்தை தொடரும்
தொடரூந்து போல
தொடரலாம்
நாம் போகும்
இடத்தை நோக்கி
மனதில் உறுதியாய்.....!அருமையான வரிகள் உங்கள் நட்பு கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி

அந்நியன் 2 said...

//கண்னீர் வரலாம்
கண்கள் உள்ள்வரை
கவலைகள் வரலாம்
காலங்கள் உள்ளவரை
கண்னீரானாலும்
கவலைகளானாலும்
நிச்சயம்
ஓர் நாள்
மறையலாம்.
நம்பிக்கையாய்
நடைபோட்டால்.....!//

மிக தத்ரூபமாக எழுதியுள்ளிர்கள் கவிதையை...இல்லை..இல்லை...வாழ்க்கையை.

வாழ்த்துக்கள்.

Jafarullah Ismail said...

அஸ்ஸலாமு அலைக்கும்

எந்த வரிகளை குறிப்பிட்டுச்சொல்ல,

எல்லா வரிகளுமே-இல்லை இல்லை - வார்த்தைகளுமே மிக மிக அற்புதம்!

Kanguva Mannippu Song Lyrics

Mannippu Song Lyrics in Kanguva      Mannippu Song Lyrics in English Aaraaro Aariraro Aaraari Raaro Aaraaro Aariraro Aaro Aaro Aariraro Aara...