வார்த்தைகள் சேகரித்து
தட்டுத்தடுமாறி
பிஞ்சு மொழி பேசும்
மழலையாகிறேன்
உன்னோடு பேசும்போது...
நீண்ட பயணங்களின் போது
வழி நெடுகே நகர்கிறது
உலக சுவாரஷ்யங்களும்
உன் வழியனுப்பல்
கண்ணீர் துளிகளும்..
உன் புன்னகைகள் சேகரிக்கிறேன்
என் தனிமையான நாட்களுக்கு
மழைகாலத்திற்கு
உணவு சேகரித்து வைக்கும்
எறும்புகள் போல...
இரட்டைக் குழந்தையா நீ.
செல்லுமிடமெல்லாம்
அழைத்துச்செல்கிறாய்
உன்னுடன் பிறந்த
வெட்கங்களையும்...
12 comments:
அழகான கவிவரிகள் பாஸ்
''... இரட்டைக் குழந்தையா
செல்லுமிடமெல்லாம்
அழைத்துச்செல்கிறாய்
உன்னுடன் பிறந்த
வெட்கங்களையும்...''
இது எனக்குப் பிடித்த வரிகள். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
வணக்கம் நண்பா,
அவளின் ஒவ்வோர் நடத்தைகளிலும் மழலையாக மாறும் காதலனின் இயல்புகளை இங்கே கவிதை செல்லமாய் கொஞ்சம் வெட்கம் கலந்து சொல்லி நிற்கிறது.
அழகான வார்த்தையுடன் கூடிய கவிதை. எறும்பு உதாரணம் ரசிக்க வைத்தது.!!
வழி நெடுகே நகர்கிறது
உலக சுவாரஷ்யங்களும்
உன் வழியனுப்பல்
கண்ணீர் துளிகளும்..
....................
யதார்த்தத்தை மிக எளிமையாக
எழுதியது,
உணர்வுகளை வருடுகிறது..
தொடர்க......
Santhosh,RJPM.
ரியாஸ்...எறும்பாய் அவள் நினைவுகளை,வெட்கங்களைச் சேகரிக்கும் கவிதை அருமை !
கலக்கல் வசன நடை ப்ரதர்.
இரட்டைக் குழந்தையா நீ.
செல்லுமிடமெல்லாம்
அழைத்துச்செல்கிறாய்
உன்னுடன் பிறந்த
வெட்கங்களையும்...
நல்ல வரிகள் வாழ்த்துக்கள்
உணர்வுகளை வருடுகிறது கவிதை வரிகள். வாழ்த்துக்கள் ரியாஸ்...
அருமையான கவிதை.
வாழ்த்துகள்.
அழகான வரிகள் நண்பரே..
Post a Comment