கனவுகள்
இல்லாத உறக்கம்
வேண்டிக்கொண்டிருக்கிறேன்
என் கனவுகள்
நிஜமாகியதே இல்லை
அரசியல்வாதி வாக்குறுதி போல!
நான் கானும் கனவுகள்
ரசிகனை குஷிப்படுத்தும்
மசாலா சினிமாக்கள்
போன்றது..
கற்பனைக்கெட்டாத
அபத்தங்கள்..
தொடர்ந்து வராத
நிஜத்தில் வராத
சில நிமிட இன்பங்கள்..
கனவுகள்
போலி வர்ணங்கள் பூசி
மறைக்கிறது
உண்மை வர்ணத்தை
குழந்தையிடம்
பெருமை பேசி
குறைகளை மறைக்கும்
தாய் போல!
கண்ணீரிலே
கரைந்து போகிறது
கற்பனை உலகம்
போலிகள் கலைந்து
உண்மை உதிக்கும் வேளை.
பின்னொரு நாளில்
ஏமாற்றப்பட்டோம் என
உண்மையறிந்து கலங்கும்
குழந்தை போல..!
வரவேற்கலாம்
வரையறையோடு வரும்
கனவுகளை.
யதார்த்ததோடு
உண்மை பேசும்
சினிமாக்கள் பார்ப்பது போல்..
உருவம் கொடுத்து
உயிர் கொடுத்து
கனவுகளுக்கு
கனவு கான வைக்க வேண்டும்
அப்போதுதான் புரிந்துகொள்ளும்
கனவு கலைவதின்
வேதனையை!!
ஒப்பனைகளிட்டு
ரசிகனை ஒப்பேற்றும்
கவர்ச்சி சினிமா நடிகை போல
கிராபிக்ஸ் அழகில்
கண்களை கவர்கிறது
நவீன கனவுகள்..!!
7 comments:
சிறப்பான கனவுகள்! கவிதைஅருமை!
இன்று என் தளத்தில்
இதோ ஒரு நிமிஷம்!
மணிப்பூர் மகாராணியும் அம்மன் வேஷக்காரியும்!
http://thalirssb.blospot.in
கவிதை அருமை
ரியாஸ்....கனவுகளும் நாகரீக வர்ணங்களைப் பூசுகிறதோஅடித்து நொருங்கிய மனநிலையில் கனவுகளும் அப்பிடித்தான் வரும்.பாடல்...உங்கள் இன்றைய மனநிலையைச் சொல்கிறது.அமைதியாய் இருக்க இன்னும் கொஞ்சம் சந்தோஷமான பாட்டைக் கேளுங்களேன் !
மிக அருமை நண்பா...
கனவு கலைந்தால் தானே நிஜம் உணர முடியும்.
நல்ல சிந்தனை வரிகள்...
பிடித்த வரிகள் :
/// உண்மை வர்ணத்தை
குழந்தையிடம்
பெருமை பேசி
குறைகளை மறைக்கும்
தாய் போல!
கண்ணீரிலே
கரைந்து போகிறது
கற்பனை உலகம் ///
கவிதைக்கேற்ற கண்ணொளி பாட்டு...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்... நன்றி…
அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !
சூப்பர் கவிதை நண்பா.........கலக்கிட்டீங்க ஒவ்வொரு வார்த்தையும் மிக சிரமப்பட்டு செதுக்கியிருக்கிறீர்கள் போல....
அருமை
Post a Comment